Mr X Public Review: ஆர்யாவின் Mr X படம் எப்படி இருக்கு? உடைத்து சொன்ன பப்ளிக் விமர்சனம்
சென்னை: இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் Mr X . இந்த படம் உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாக ஏற்கனவே இயக்குநர் தெரிவித்திருந்தார். படம் ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் எப்படி உள்ளது என்று தெரிவித்து வருகிறார்கள். அது குறித்து காணலாம்.
ரசிகர் ஒருவர் கூறும் போது, படத்தின் முதல் பாதி ஓ.கே ரகம் தான். ஆனால் இரண்டாவது பாதி டிவிஸ்ட்களை வைத்து சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் அளவுக்கு செய்துவிட்டனர். படம் ரொம்பவே நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மற்றொருவர் கூறுகையில், " ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போல இருந்தது. படத்தின் இசை படத்தை மொத்தமாக தூக்கி நிறுத்துகிறது. படம் நன்றாக உள்ளது. சரத்குமார் நடித்துள்ளார். ஆனால் அவர்தான் என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் நடித்துள்ளார். கிளைமாக்ஸில் தான் அவர் யார் என்று தெரிகிறது. படம் நன்றாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

மஞ்சு வாரியர்: அதேபோல் மற்றொருவர் கூறுகையில், படம் நல்லா இருக்கு. எல்லாருமே நல்லா நடிச்சு இருக்காங்க. குறிப்பா மஞ்சு வாரியர் நல்லாவே சண்டை போட்டு இருக்காங்க. கௌதம் கார்த்திக் நல்லா நடிச்சு இருக்காரு. படம் ரொம்பவே ஆக்ஷன காட்சிகளுடன் நல்லா இருக்கு என்று தெரிவித்துள்ளார்.
வில்லனாக மிரட்டிவிட்ட : இன்னொரு ரசிகர் கூறும்போது, " படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்க்கலாம். படத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சர்ப்ரைஸாக இருந்தது, கௌதம் கார்த்திக் கதாபாத்திரம் தான். அவரை கதாநாயகனாக, சாக்லேட் பாயாக பார்த்திருக்கிறோம். ஆனால் வில்லனாக அவர் நடித்ததே பெரிய சர்ப்ரைஸ், அதில் அவர் அனைவரையும் மிரட்டி விட்டுள்ளார். அந்த அளவுக்கு நடித்துள்ளார். வரும் காலங்களிலும் இது போல தரமான வில்லன் கதாபாத்திரங்களில் அவர் நடிக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நன்றாக இருந்தது. கிளைமாக்ஸும் நன்றாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

முழு ஆக்ஷன்: மற்றொரு ரசிகர் கூறுகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு, முழுக்க முழுக்க ஆக்ஷன் படம், தரமான கதையுடன் இவ்வளவு ஸ்டார்களுடன் இப்படி ஒரு படத்தை கொடுத்தது பெரிய விஷயம். இயக்குநருக்கு பாராட்டுக்கள். திரைக்கதை வேகத்திற்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவிலும், எடிட்டிங்கிலும் படக்குழு நன்கு மெனக்கெட்டு உள்ளது படத்தைப் பார்க்கும் போது தெரிகிறது. எல்லோரும் பார்க்கலாம், ஆனால் எல்லோருக்குமான படமாக இருக்குமா என்று தெரியவில்லை, ஆனால் படம் நன்றாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களே கிடைத்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications