MR X ட்விட்டர் விமர்சனம்.. படம் பார்த்தவர்கள் எக்ஸ் பக்கத்தில் என்ன சொல்றாங்க தெரியுமா?

சென்னை: ஆர்யா நடிப்பில் மனு ஆனந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் மிஸ்டர் எக்ஸ். இதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்காக உடல்ரீதியாக கடுமையான உழைப்பை கொடுத்திருந்தார் ஆர்யா. இன்று இப்படமானது தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. இந்நிலையில் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை பார்த்தவர்கள் எக்ஸ் பக்கத்தில் விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக இருப்பவர் ஆர்யா. பாலாவின் இயக்கத்தில் எல்லாம் நடித்துவிட்ட அவர்; இன்னும் சரியான உயரத்துக்கு போக முடியாமல் இருக்கிறார். இத்தனைக்கும் நான் கடவுள் மட்டுமின்றி சார்பட்டா பரம்பரை, மீகாமன் என வெரைட்டியாகவும், வெயிட்டாகவும் படங்கள் பண்ணக்கூடிய ஆர்ட்டிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவருக்கு சார்பட்டா பரம்பரை படம் மட்டும்தான் ஹிட்டாகியிருந்தது. அதற்கு அடுத்து வந்த படங்கள் எல்லாம் தோல்விதான்.

Mr X Twitter Review  Arya   s Spy Thriller Gets Positive Response for Twists and Action
Photo Credit:

மிஸ்டர் எக்ஸ்: சூழல் இப்படி இருக்க இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் ஓரளவுக்கு ஹைப்பை கூட்டியது. அதுமட்டுமின்றி தண்ணீருக்குள் இருந்தபடி ஆர்யா செய்த சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி ஆச்சரியத்தை உண்டு செய்தது. இந்தப் படத்துக்காக ரொம்பவே மெனெக்கெட்டிருக்கிறார் அவர்.

Also Read
பேட்டிக்கு போன இடத்தில் சண்டை..கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்.. அடங்கவே மாட்டாரா?.. கதறுராரே
பேட்டிக்கு போன இடத்தில் சண்டை..கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்.. அடங்கவே மாட்டாரா?.. கதறுராரே

படம் இன்று ரிலீஸ்: படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளும் நன்றாகவே நடந்தன. எப்படியாவது இந்தப் படத்தை ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் இன்று தியேட்டர்களில் படம் ரிலீஸாகியிருக்கிறது. படத்தை பார்த்த பலரும் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தின் மூலம் முன்வைத்திருக்கிறார். படம் பார்த்த இவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மிஸ்டர் எக்ஸ் படம் எதிர்பார்க்காத ட்விஸ்ட் அண்ட் டர்னோடு இருந்தது. ஆக்ஷன் சீன்கள் எல்லாம் அருமையாக இருந்தன.

எல்லோரும் சிறப்பு: ஸ்பையாக ஆர்யா பக்காவாக பொருந்துகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் கூடுதல் ஸ்பெஷல். கௌதம் கார்த்திக்குக்கு சர்ப்ரைஸ் பேக்கேஜோடு கூடிய ஒரு கேரக்டர். பெர்ஃபார்ம் செய்வதற்கு வாய்ப்புள்ள கேரக்டர். மஞ்சு வாரியருக்கு இது பெஸ்ட். ஆக்ஷன் சீன்கள் எல்லாம் சூப்பர். சரத்குமார் படத்தில் முக்கியமான கேரக்டர். சிறப்பாக அதனை டெலிவர் செய்திருக்கிறார். அனகா, ரைசா வில்சன், அதுல்யா ஆகியோரும் தங்கள் ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். திபு படத்தை எலிவேட் செய்கிறார். குறிப்பாக அந்த 40 நிமிடங்கள். இயக்குநர் மனு ஆனந்த் ட்விஸ்ட் ஸ்க்ரீன்ப்ளேவில் சர்ப்ரைஸ் செய்கிறார். இது பெரிய வெற்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பெரிய சர்ப்ரைஸ்: இன்னொரு ரசிகர், 'ஐந்துக்கு 3.5 மதிப்பெண் கொடுப்பேன். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதையை ட்விஸ்ட் அண்ட் டர்ன்களோடு முடித்திருக்கிறார்கள். சண்டை காட்சிகள், எடிட்டிங், வேகமான திரைக்கதை, எல்லா கேரக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், திப்புவின் இசை இவை எல்லாம் படத்தின் மேஜர் ஹைலைட்டுகள்.

ஸ்பை த்ரில்லர் ரசிகர்களுக்கு படம் பெரிய சர்ப்ரைஸை கொடுக்கும்" என தெரிவித்துள்ளார். மேலும் இன்னொருவர், "ஐந்துக்கு 3.75 கொடுக்கலாம். எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகளுடன் கூடிய ஒரு ஸ்பை த்ரில்லர் படம். ஆர்யா அருமையாக லீட் செய்கிறார். கௌதம் கார்த்திக் நன்றாக நடித்துள்ளார். மஞ்சு வாரியர் ஸ்டண்ட்டுகளில் கலக்குகிறார். அனகா, ரைசா, அதுல்யா நன்றாக நடித்துள்ளார்கள். சண்டை காட்சிகள், இசை, விஷுவல் எல்லாம் டாப்" என புகழ்ந்திருக்கிறார்.

Read more about: arya ஆர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X