twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Ms Marvel Episode 1 Review: என்னங்கடா டர்னிங் ரெட் அனிமேஷன் படத்தை அப்படியே காப்பியடிச்சிட்டீங்க!

    |

    Rating:
    2.5/5

    நடிகர்கள்: இமான் வெல்லானி, மாட் லிண்ட்ஸ்

    இசை: லாரா கர்ப்மேன்

    இயக்கம்: பிஷா கே அலி

    ரேட்டிங்: 2.5/5

    லாஸ் ஏஞ்சல்ஸ்: வாண்டா விஷன், லோகி, மூன் நைட் என ஏகப்பட்ட வெப்சீரிஸ்களை மார்வெல் ஓடிடி ரசிகர்களுக்காக களமிறக்கி கல்லா கட்டி வருகிறது.

    அந்த வரிசையில், தற்போது புதிதாக வெளியாகி உள்ள வெப்சீரிஸ் தான் மிஸ் மார்வெல்.

    முதல் எபிசோடை பார்த்த ரசிகர்கள், சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான அனிமேஷன் படமான டர்னிங் ரெட் படத்தின் அப்பட்டமான காப்பியாக இருக்கிறதே என கிண்டல் செய்து வருகின்றனர்.

    பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.. யாஷிகா மகிழ்ச்சி.. வாழ்த்தும் ரசிகர்கள் !பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.. யாஷிகா மகிழ்ச்சி.. வாழ்த்தும் ரசிகர்கள் !

    என்ன கதை

    என்ன கதை

    பாகிஸ்தானியர்களை சூப்பர் ஹீரோக்களாக மாற்றி வருகிறது மார்வெல் நிறுவனம். அடுத்ததாக இந்திய சூப்பர் ஹீரோக்களும் MCUவில் வெகுவிரைவாகவே இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலா கான் எனும் 16 வயது பெண் கேப்டன் மார்வெலின் அதிதீவிர ரசிகை. அவரை போலவே சூப்பர் ஹீரோவாக மாறத் துடிக்கிறார். மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் நிகழ்ச்சிக்கு போகத் துடிக்கும் அவருக்கு திடீரென எப்படி சூப்பர் பவர் கிடைத்து மிஸ் மார்வெல் ஆக மாறுகிறார் என்பது தான் முதல் எபிசோடின் கதை.

    இஸ்லாமிய பெண்

    இஸ்லாமிய பெண்

    கமலா கான் எனும் கதாபாத்திரத்தில் நடிகை இமான் வெல்லானி நடித்துள்ளார். கடும் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் ஒரு வெளிநாடு வாழ் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த கமலா கானுக்கு கேப்டன் மார்வெல் மீது அலாதி பிரியம். அவரை போலவே தானும் சூப்பர் ஹீரோவாக மாற வேண்டும் என நினைக்கும் அவர் கனவுலகிலேயே வாழ்ந்து வருகிறார்.

    உதவி பண்ணும் புருனோ

    உதவி பண்ணும் புருனோ

    அனிமேஷன் படங்களில் தொடர்ந்து வந்த இந்த புருனோ எனும் பெயர் மிஸ் மார்வெல் வெப்சீரிஸில் கமலா கானின் நண்பராக வருகிறது. மார்வெல் மாறுவேஷ போட்டியில் கலந்து கொள்ள ஆடைகளையும், மார்வெல் கதாபாத்திரங்களை ஸ்ட்ரீம் செய்யும் ஒரு கை கிளவுஸையும் தயாரித்து உதவி செய்கிறார். ஆனால், அவர்கள் போடும் பல பிளான்கள் சொதப்பலில் முடிகின்றன.

    லிங்கா பாடல்

    லிங்கா பாடல்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் வரும் "ஓ நண்பா" பாடல் இசையை கமலா கான் கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் காட்சியில் பயன்படுத்தி இருப்பார்கள். மார்வெல் படத்தில் சூப்பர்ஸ்டாரின் பாடலை போட்டு அதற்கு கிரெடிட்ஸும் கொடுத்தது ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மியூசிக்னா சும்மாவா!

    பாட்டியின் காப்பு

    பாட்டியின் காப்பு

    தனது பாட்டியின் பெட்டியில் இருக்கும் ஒரு பச்சை நிற காப்பை எடுத்து இது என்னம்மா என அம்மாவிடம் கேட்க, இது குப்பை என சொல்லி, டிரங் பெட்டிக்குள் போட்டு பழைய பொருட்களை வைக்கும் இடத்தில் வைத்து விடுகிறார். அந்த ஃபேன்ஸி டிரெஸ் காம்பெடிஷனுக்கு போக பாட்டியின் பெட்டியில் ஏதாவது கிடைக்குதா என பார்க்கும் கமலா கான் அந்த காப்பை எடுத்துக் கொண்டு செல்ல அதையும் அணியும் போது அவருக்குள் நிஜமாகவே சக்தி வந்து விடுகிறது.

    டர்னிங் ரெட் காப்பி

    டர்னிங் ரெட் காப்பி

    இதே போல பொத்தி பொத்தி வைத்து வளர்க்கப்படும் மகள் நண்பர்களுடன் இணைந்து கொண்டு மியூசிக்கல் நிகழ்ச்சிக்கு செல்ல பிளான் போடுவார். பாட்டி மற்றும் குடும்ப பெண்களுக்கு வரும் அபரிமிதமான சக்தியான ரெட் பாண்டாவாக மாற என்ன நடக்கிறது என்பது தான் Turning Red அனிமேஷன் படத்தின் கதையே, மிஸ் மார்வெலின் முதல் எபிசோடு முழுக்கவே அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தது போல உள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    English summary
    Ms Marvel Episode 1 Review in Tamil: It’s like a copy of animation movie Turning Red
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X