Mufasa X Review: த லயன் கிங் படத்தை விட சூப்பரா இருக்கா?.. முஃபாசா ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: புஷ்பா படத்தை விட புஷ்பா 2 படம் நல்லா இல்லை என விமர்சனங்கள் குவிந்தாலும் புஷ்பா படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா 2 படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. 1508 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே நிலைமை முஃபாசா 2 படத்துக்கும் வர வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

டிசம்பர் 20ம் தேதி இன்று உலகம் முழுவதும் முஃபாசா திரைப்படம் வெளியாகிறது. நேற்று இரவு வெளியான ப்ரீமியர் காட்சியை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் முஃபாசா படம் முந்தைய படமான த லயன் கிங் படம் அளவுக்கு இல்லை என விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

mufasa  mufasa review  the lion king

200 மில்லியன் டாலர் செய்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட முஃபாசா திரைப்படத்தை இந்த காரணங்களுக்காக பார்க்கலாம் என்றும் பாசிட்டிவ் விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் குவிந்து வரும் நிலையில், முஃபாசா படம் வொர்த்தா? வொர்த் இல்லையா? என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ள விமர்சனங்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

mufasa  mufasa review  the lion king

தமிழ் டப் தாறுமாறு: முஃபாசா - த லயன் கிங் படத்துக்கு இந்தியில் ஷாருக்கான், தெலுங்கில் மகேஷ் பாபு என நட்சத்திர நடிகர்கள் டப்பிங் பேசியுள்ளனர். அதே போல தமிழில் முஃபாசா எனும் லீடு ரோலுக்கு அர்ஜுன் தாஸ் அட்டகாசமான டப்பிங் கொடுத்துள்ளார். அவருக்கு ஈடு கொடுக்கும் விதமாக அசோக் செல்வனின் குரல் தரமாக உள்ளது. நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி மற்றும் ரோபோ சங்கர் என அனைவரது குரலும் தமிழ் டப்பிங்கில் தாறுமாறாக உள்ளதாக விமர்சனங்கள் குவிந்துள்ளன.
mufasa  mufasa review  the lion king

சூப்பரா கனெக்ட் ஆகுது: முஃபாசா திரைப்படம் முந்தைய படத்துடன் சரியாக கனெக்ட் ஆகும்படி இயக்குநர் கொடுத்திருக்கிறார். படம் போறதே தெரியல நல்ல டைம் பாஸா இருக்கு. வழக்கம் போல தமிழ் டப்பிங்கில் எந்தவொரு குறையும் இல்லை. தாராளமாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு முஃபாசா படத்தை இந்த வாரம் பார்க்கலாம் என இந்த ரசிகர் பாராட்டியுள்ளார்.
mufasa  mufasa review  the lion king


ஷாருக்கானை முந்திய மகேஷ் பாபு: இந்தியில் முஃபாசா சிங்கத்துக்கு ஷாருக்கான் குரல் கொடுத்துள்ள நிலையில், இந்தி வெர்ஷன் அட்வான்ஸ் புக்கிங் 38,633 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. தெலுங்கில் முஃபாசாவுக்கு மகேஷ் பாபு குரல் கொடுத்துள்ள நிலையில், தியேட்டர்களில் எல்லாம் மகேஷ் பாபு கட் அவுட் வைத்து ரசிகர்கள் செய்த அலப்பறை காரணமாக இதுவரை 58,300 டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாகவும் ரசிகர்கள் டேட்டாக்களை அடுக்கி வருகின்றனர்.

mufasa  mufasa review  the lion king

3.5 ரேட்டிங்: டிஸ்னி தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள முஃபாசா படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த கிறிஸ்துமஸ்க்கு சரியான ட்ரீட்டாக இந்த படம் வெளியாகி இருப்பதாக கூறுகின்றனர். ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் முஃபாசா படத்துக்கு 3.5 ரேட்டிங் கொடுத்திருக்கிறார். படத்தின் கதை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் விதமாக டாப் கியரில் உள்ளதாக விமர்சித்துள்ளார். த லயன் கிங் போல இந்த படம் இல்லை என்றும் விமர்சனங்கள் நெகட்டிவிட்டி பரவினாலும் முஃபாசா பார்க்கும் அளவுக்கு சிறப்பாகவே உள்ளது எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X