காமெடி, குடும்ப சென்டிமெண்டில் ஸ்கோர் செய்துள்ள வேலன் படம்
சென்னை : பிக் பாஸ் ஸ்டார் முகேன், பிரபு, சூரி, மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வேலன்.
குடும்ப சென்டிமெண்ட், காமெடி என கலந்தடித்து கொடுத்துள்ளார் டைரக்டர் கவின்.
படத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார் சூரி. பிற்பாதியில் காமெடி கலாட்டாவாக அமைந்துள்ளது படம்.
பிக் பாஸ் பிரபலம் முகேன்
பிக் பாஸ் பிரபலம் முகேன் நடிப்பில் இன்றை தினம் வெளியாகியுள்ள படம் வேலன். படத்தில் பிக் பாஸ் ஸ்டார் முகேன், பிரபு, சூரி, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முகேன் அறிமுகமாகியுள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
குடும்ப சென்டிமெண்ட்
மாட்டுக்கார வேலன், சிங்கார வேலன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அந்த வரிசையில் வேலன் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் பெரிதான மெனக்கெடல்கள் ஏதுமின்றி வழக்கமான குடும்ப சென்டிமெண்ட், காமெடி உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு வெளியாகியுள்ளது.
கலக்கல் காமெடி
படத்தின் முதல்பாகம் காமெடியால் கலைக்கட்டியுள்ளது. குறிப்பாக பிராங்க் ராகுல் செய்யும் காமெடி கலாட்டாக்கள் ரசிக்கும்வகையில் உள்ளது. ஆனால் இரண்டாவது பாதியில் படம் மிகவும் தொய்வடைந்து காணப்படுகிறது.
மிகைப்பட்ட நடிப்பில் தம்பி ராமையா
படத்தில் தம்பி ராமையாவின் மிகைப்பட்ட நடிப்பு பார்வையாளர்களை மிகவும் கடுப்புக்குள்ளாக்கி விடுகிறது.அவர் பேசும் மலையாளம் சமயத்தில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. சமயத்தில் சூரியும் மலையாளத்தில் பேசுகிறார். அதுவும் ரசிகர்களை நெ ளிய வைக்கிறது.
மலேசிய ரசிகர்கள் கொண்டாட்டம்
படத்தில் சூரி, பிராங்க் ராகுல் மட்டுமே படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். படம் இந்த ஆண்டின் இறுதிக் கட்டத்தில் வெளியாகியுள்ள நிலையில் முகேனின் மலேசிய ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஒரு ஜாலியான படத்தை எந்தவிதமான எதிர்பார்பபும் இனறி பார்க்கலாம் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாக கைகொடுக்கும்.


Click it and Unblock the Notifications











