800 Review: விஜய்சேதுபதி மிஸ் பண்ண முத்தையா முரளிதரன் பயோபிக்.. 800 விமர்சனம் இதோ!
நடிகர்கள்: மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நாசர், நரேன்
இசை: ஜிப்ரான்
இயக்கம்: எம்.எஸ். ஸ்ரீபதி
சென்னை: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முதலில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நிலையில், தமிழ் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகினார்.
இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஹீரோவின் அண்ணனாக நடித்த மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.

எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்துக்கு பிறகு ஏகப்பட்ட விளையாட்டு வீரர்களின் பயோபிக் வெளியானாலும் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்காத நிலையில், முத்தையா முரளிதரன் பயோபிக் என்ன ஆனது? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
800 பட கதை: தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலர் தோட்ட வேலைக்காக செல்ல அப்படி சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன் என காட்டுகின்றனர். இலங்கையில் நடந்த பிரச்சனைகள் 6 வயதில் கிரிக்கெட் பந்தை கையில் எடுத்து போட ஆரம்பித்த முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் என்ன என்ன பிரச்சனைகளை எழுப்பியது. அதில், இருந்து போராடி எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையாளராக மாறினார் என்கிற கதை தான் 800 பட கதை.
பிளஸ்: படத்தின் இயக்குநர் ஸ்ரீபதி முத்தையா முரளிதரனி வாழ்க்கையை முடிந்த வரை சினிமா படமாக மாற்றி பலருக்கும் கொண்டு சென்றது பாசிட்டிவாக அமைந்துள்ளது. எந்தவொரு போராட்டமாக இருந்தாலும், அதை மீறி சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை விதையை இந்த படம் விதைக்கிறது. லீடு ரோலில் நடித்துள்ள மதுர் மிட்டல் முடிந்த வரை முத்தையா முரளிதரனாக நடிக்க முயற்சித்துள்ளார். ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

மைனஸ்: லீடு ரோல் தேர்வு, கிரிக்கெட் பயோபிக்கில் ஏகப்பட்ட அரசியல் திணிப்புகள், அதுதான் கதை என்றாலும் கிரிக்கெட்டை தாண்டி அரசியல் அதிகம் பேசப்பட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கே கடுப்பை கிளப்புகிறது. மேலும், சில விஷயங்கள் எல்லாம் உண்மை தானா? என்கிற விவாதத்தையும் ஏற்படுத்துகிறது. திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் பல இடங்களில் படம் சொதப்பி விடுகிறது.
பார்க்கலாமா? வேண்டாமா?: நீங்கள் கிரிக்கெட் ரசிகராகவோ முத்தையா முரளிதரன் ரசிகராகவோ இருந்தால் தாராளமாக இந்த படத்தை ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம். அனைவரும் கண்டு ரசிக்கும் படி என்றால் அந்த அளவுக்கு படத்தில் கன்டென்ட் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications











