My Lord Blue Sattai Maran Review: அப்படி எடுத்து இருக்கலாம்.. மை லார்ட் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்

சென்னை: கார்த்தி நடித்த 'ஜப்பான்' படத்தை இயக்கிய ராஜூமுருகன் அந்தப் படத்துக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் தான் 'மை லார்ட்'. சசிகுமார், சைத்ரா ஜே ஆர்சர், ஆஷா சரத், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நேற்று தியேட்டரில் வெளியான இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதை ஆரம்பிக்கும் போது சசிகுமார் ஒரு மரத்தின் கீழே நின்று கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார். அதற்கு காரணம், ஏற்கனவே அரசாங்கத்தின் ரெக்கார்டின் படி நானும் என் மனைவியும் இறந்து விட்டோம். இப்போது மீண்டும் சாகப்போகிறேன் என சொல்கிறார். இந்த தற்கொலையை தடுப்பதற்காக போலீசார் அந்த இடத்திற்கு வருகின்றனர். மற்றொரு பக்கம், முக்கியமான ஒரு பெரும் புள்ளிக்கு சிறுநீரகம் செயலிழந்து விடுகிறது. அவருக்கு உடனடியாக மாற்று சிறுநீரகத்தை பொருத்தி அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அவர் இறந்து விடுவார் என சொல்லப்படுகிறது. அந்த அமைச்சரின் ரத்த வகை அரிய ரத்த வகை என்பதால், பல இடங்களில் தேடியும் கிட்னி கிடைக்கவில்லை. அந்த அரிய ரத்த வகை உலகத்திலேயே இரண்டு பேரிடம் தான் இருக்கிறது. அதில், ஒன்று சசிகுமார் என்பதால், அவரிடம் கிட்னியை எடுப்பதற்கான முயற்சி நடக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் 'மை லார்ட்' படத்தின் கதை.

My Lord  blue sattai maran  Review
Photo Credit:

வீணாக்கிவிட்டார்: சாமானிய மக்களை இந்த அதிகார வர்க்கம் எப்படி பார்க்கிறது. என்னதான் பணமும், புகழும் இருந்தாலும் மனித நேயம் தான் முக்கியம் என்பதை சொல்லி இந்த திரைப்படத்தை முடித்து கேட்கிறார் இயக்குனர். இதற்கு முன் இயக்குநர் ராஜு முருகன் 'ஜோக்கர்' படத்தை எடுத்து இருந்தார். அந்த படத்தில் அவர் என்ன சொல்ல வந்தாரோ அதை அழுத்தமாக சொல்லி இருப்பார். ஆனால், 'மை லார்ட்' படத்தில், ஹீரோ தூக்கு போடப்போகிறார் என சீரியஸாக ஆரம்பித்த கதையை, அடுத்த காட்சியிலேயே பாட்டு, டான்ஸ் என போட்டு படத்தை திசை மாற்றி விட்டார். படம் பார்க்கும்போது அது நன்றாக இருந்தாலும், படத்தின் கதை தடம் மாறி விடுகிறது. அந்த சீனில் மட்டுமில்லை படத்தின் பல இடங்களில் இதுபோன்ற காட்சிகளை வைத்து படத்தை வீணாக்கி இருக்கிறார்.

ஓகே ரகம் தான்: இந்த படத்தையே தூக்கி நிறுத்தக்கூடிய ஒரு நீதிமன்ற காட்சி வரும். ஆனால், நீதிமன்ற காட்சியில் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அந்த காட்சிகளில் எல்லாம் எதார்த்தத்தை மீறிய ஒரு நாடகத் தன்மையாகவே இருக்கிறது. ஆனால், இயக்குனர் ராஜு முருகன் ஒரு நல்ல கதையை எடுத்து இருக்கிறார். இந்த படத்தின் அவர் கடைசியாக சொல்லி இருக்கும் கருத்தும் நல்ல விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இயக்குனர் இந்த திரைப்படத்தை 'ஜோக்கர்' பட போல ஒரு சீரியஸான படம் போல எடுத்து இருந்தால், இந்த திரைப்படம் ஒரு நல்ல திரைப்படமாக இருந்திருக்கும், இருந்தாலும் இந்த திரைப்படம் ஒரு ஓகே ரகமான படம் தான் என ப்ளு சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X