My Lord X Review: வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்.. ராஜுமுருகனின் ‘மை லார்ட்’ ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள மை லார்ட் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.

வரும் பிப்ரவரி 13ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள மை லார்ட் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி இன்று வெளியான நிலையில், அந்த படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

My Lord X Review in Tamil  Director Rajkumar makes a bold Medical Mafia movie with Sasikumar
Photo Credit:

ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ள இந்த 'மை லார்ட்' மனங்களை கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்த ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

மை லார்ட் படம் எப்படி இருக்கு?: "#mylord #மைலார்ட் 3.5/5. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கொள்கையில் வலுவான கதை. அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் பேமிலி வரிசையில் சசிகுமார் நடித்த தரமான படம். இயக்குனர் ராஜூமுருகன் டச்.கிளைமாக்ஸ் பிரமாதம். ஹீரோயின் சைத் ரா நடிப்பு, ஷான் இசை சிறப்பு" என பத்திரிகையாளர் மீனாட்சி சுந்தரம் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

மகத்தான ஹிட் படம்: "நோ டவுட் 'மை லார்ட்' படம் சசிகுமாரின் இன்னொரு மகத்தான ஹிட் படம். வாழ்த்துகள், @SasikumarDir Brother 💐 It's growing bigger day by day and turning into something truly massive. @Suriya_offl presenting #MyLord through @2D_ENTPVTLTD - this one is set to make a huge impact." என நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ராஜு முருகன் பேக் டு தி ஃபார்ம்: கடைசியாக ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. மை லார்ட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது ஃபார்முக்கு ராஜு முருகன் வந்திருப்பதாக இன்னொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

கிட்னி திருட்டு: அரசியல் வசனங்களும், மெடிக்கல் மாஃபியா சதிகளையும் இந்த படம் தோலுரித்துக் காட்டுகிறது என பலரும் பாராட்டி வருகின்றனர். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைத் தொடர்ந்து சசிகுமாருக்கு இன்னொரு வெற்றிப் படமாக மை லார்ட் அமையுமா என்பது வரும் பிப்ரவரி 13ம் தேதி மக்கள் தரும் ஆதரவை பொறுத்து தெரிந்து விடும். நல்ல சமூக அக்கறை கதைகளை தொடர்ந்து ராஜு முருகன் படமாக்கி வருகிறார். சசிகுமாரும் நல்ல கதைகளை ரசிகர்களுக்காக கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X