My3 Web Series Review: ஹன்சிகா, சாந்தனு, முகேன் நடித்த ரோபோடிக் வெப்சீரிஸ்.. My3 விமர்சனம்!

Rating:
2.0/5

நடிகர்கள்: ஹன்சிகா, முகேன் ராவ், சாந்தனு

இசை: கணேசன்

இயக்கம்: ராஜேஷ். எம்

ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

சென்னை: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹன்சிகா, பிக் பாஸ் முகேன், சாந்தனு, ஜனனி, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள My3 வெப் சீரிஸ் இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் ஸ்ட்ரீம் ஆகிறது.

கொரியன் வெப்சீரிஸின் அதிகாரப் பூர்வ ரீமேக் தான் இந்த வெப் சீரிஸ் என புரோமோஷன் இல்லையே இயக்குனர் ராஜேஷ் எம் உண்மையை ஒப்புக் கொண்டார். ஹன்சிகா ரோபோவாக நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் எப்படி இருக்கிறது என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..

My3 Web Series Review in Tamil:Hansikas robotic avatar fail to entertains us

My3 வெப் சீரிஸ் கதை: ஆதித்யா டீ எஸ்டேட் மற்றும் ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனியின் ஒரே ஓனர் ஆதித்யா வாக பிக் பாஸ் முகேன் ராவ் நடித்துள்ளார். சிறுவயதிலேயே அவரது பெற்றோர்கள் கார் விபத்து ஒன்றில் உயிர் இழக்க, அந்த விபத்தில் இருந்து தப்பிக்கும் சிறுவன் ஆதித்யாவிற்கு யாராவது அவரை தொட்டு விட்டால் உடம்பு முழுக்க அலர்ஜி ஏற்பட்டு விடும் என்கிற அரிதான நோய் ஒன்று உள்ளது.

இதன் காரணமாக, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று படிக்காமல், அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே கற்றுக் கொள்கிறார். மேலும், தனது கம்பெனியையும் ஜும் கால் மீட்டிங் வழியாகவே நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் இலியாஸ் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு சயின்டிஸ்ட் ஆக வருகிறார். அவர் கண்டுபிடிக்கும் My3 ரோபோ தான் நடிகை ஹன்சிகா.

My3 Web Series Review in Tamil:Hansikas robotic avatar fail to entertains us

ரோபோவாக ஹன்சிகா: தனது முன்னாள் காதலியான மைத்திரியை (ஹன்சிகா) பிரிந்த நிலையில், அவரது உருவ ஒற்றுமை கொண்ட ரோபோவை உருவாக்குகிறார். மனிதர்கள் தொட்டாலே அலர்ஜி ஏற்பட்டு விடும் ஆதித்யாவுக்கு அந்த ரோபோவை விற்க ஏற்பாடுகள் நடக்கிறது.

ஆனால், திடீரென அவர் தயாரித்து வைத்த ரோபோ பழுதடைய அந்த ரோபோவுக்கு பதிலாக தனது எக்ஸ் காதலி ஹன்சிகாவை முகேனிடம் அனுப்பி வைக்கிறார். அதன் பின்னர் ரோபோவாக ஹன்சிகா எப்படி நடிக்கிறார். ஆதித்யா மைத்திரியை கண்டுபிடித்து விடுகிறாரா? ஹன்சிகா முகேனை எப்படி சமாளிக்கிறார் என ஏகப்பட்ட சுவாரஸ்யமான விஷயங்களை எந்தளவுக்கு சொதப்பி எடுக்க முடியுமோ அப்படி வந்திருக்கிறது இந்த My3 வெப்சீரிஸ்.

My3 வெப்சீரிஸ் பார்க்கலாமா? வேண்டாமா?: ஆரம்பத்தில் பிக்பாஸ் முகேனை காட்டும் போதே அவருக்கான பில்டப் காட்சிகள் அத்தனை பெரிய பணக்காரரை போல அவரை காட்ட தவறுகிறது. மேலும், ஊட்டி குளிரில் ரொம்பவே மந்தமாக படக்குழு செயல்பட்டு இப்படி ஒரு ஸ்லோ மோஷன் வெப்சீரிஸ் எடுத்து விட்டார்களா என்கிற கேள்வியும் எழுகிறது.

My3 Web Series Review in Tamil:Hansikas robotic avatar fail to entertains us

நடிகை ஹன்சிகா மைத்திரியா நடிக்கும் போது கூட ரோபோவாக தெரிகிறார். ரோபோவாக வரும் காட்சிகளிலும் ஓவர் ஆக்டிங் நடிப்பை வெளிப்படுத்துகிறார் இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகாவை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷின் இந்த வெப் சீரிஸில் சரியாக வேலை வாங்க வில்லையோ என்கிற கேள்விதான் எழுகிறது. அந்தக் கொரியன் வெப்சீரிஸ் தமிழ் டப்பிங் செய்து விட்டிருந்தால் கூட ரசிகர்கள் நிச்சயம் இந்தக் கதைக்கு என்ஜாய் செய்திருப்பார்கள்.

ஆரம்பத்திலிருந்து, அனைத்து காட்சிகளும் எதார்த்தமாக இல்லாமல் ஒரு செயற்கைத்தனம் நிறைந்ததாகவே தெரிவது இந்த வெப் சீரிஸ்க்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இந்த வீக் கெண்டில் நிறைய நேரம் இருந்தால் ஒருமுறை இந்த வெப் சீரிஸை முயற்சி செய்து பார்க்கலாம். எல்லாமே ஓகே ஆனால், அந்த ரோபோ கெட்டுப் போக ஒரு சீன் வச்சாங்க பாருங்க அதுதான் ஜீரணிக்க முடியல!..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X