Devil Review: இயக்குநராக கலக்கினாரா மிஷ்கின் தம்பி?.. மிஷ்கின் இசை எப்படி?.. டெவில் விமர்சனம் இதோ!

Rating:
2.5/5

நடிகர்கள்: விதார்த், பூர்ணா
இசை: மிஷ்கின்
நேரம்: 1 மணி நேரம் 58 நிமிடங்கள்
இயக்கம்: ஆதித்யா

சென்னை: இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கி உள்ள டெவில் திரைப்படம் பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி, ரக்‌ஷனின் மறக்குமா நெஞ்சம் மற்றும் அறிமுக நடிகர்கள் நடிப்பில் உருவாகி உள்ள சிக்லெட்ஸ் உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக வெளியாகி உள்ள இந்த படத்திற்கு மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார்.

இளையராஜாவை மானசீக குருவாக வைத்துக் கொண்டு இசையை கடந்த சில ஆண்டுகளாக கற்று வந்த மிஷ்கின் இந்த டெவில் படத்தில் இளையராஜா பாணியிலேயே இசையமைத்திருக்கிறார். ஆங்கில படங்கள் போல 2 மணி நேரத்துக்கும் குறைவாக படம் இருப்பதால் விறுவிறுப்பாக சென்று விடுகிறது. ஹாரர் ஸ்டைலில் உருவாகி உள்ள இந்த டெவில் படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

Mysskins Devil Movie Review in Tamil

டெவில் கதை: வழக்கறிஞரான விதார்த் பூர்ணாவை திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனால், இருவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகவில்லை. அதற்கு பதிலாக பூர்ணாவுக்கு வேறொரு இளைஞர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிகர் திரிகுன் நடித்திருக்கிறார். அதே போல விதார்த்துக்கு நடிகை சுபஸ்ரீ மீது ஆசை உண்டாகிறது. பூர்ணாவும் திரிகுனும் ஒன்றாக இருக்கும் போது விதார்த் பார்த்து விடுகிறார். அதே போல விதார்த்தும் சுபஸ்ரீயும் கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்யும் போது பூர்ணா பார்த்து விடுகிறார். பிறகு என்ன ஆகிறது ஜோடி மாறுகிறதா? இடையே ஹாரர் எஃபெக்ட்டில் படம் எங்கே செல்கிறது என்பது தான் இந்த டெவில் படத்தின் கதை.

நடிகர்களின் பர்ஃபார்மன்ஸ்: விதார்த் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். குடும்பத்தில் மனைவியுடன் செட் ஆகவில்லை என்பதை வெளிப்படுத்தும் அவர் சுபஸ்ரீயிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளும் பூர்ணாவிடம் மண்டியிட்டு அழும் காட்சிகள் என ஸ்கோர் செய்கிறார். விதார்த்தை விட பூர்ணா ஒரு படி மேலே சென்று காதல், பாசம், அன்பு, துரோகம் என அனைத்து நடிப்பையும் கரைத்து குடித்து ஸ்கோர் செய்கிறார். திரிகுன் மற்றும் சுபஸ்ரீ கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

பிளஸ்: மிஷ்கினின் இசை இந்த படத்திற்கு தேவையான இசையை கொடுத்தும் சில இடங்களில் பிரபல இசையமைப்பாளர்கள் இசையை நிறுத்தி விட்டு சைலன்ஸில் செய்யும் மேஜிக்கையும் நிகழ்த்தியும் முதல் படத்திலேயே இசையமைப்பாளராக அசத்தியிருக்கிறார் மிஷ்கின். இயக்குநராக அறிமுகமாகி உள்ள அவரது தம்பி ஆதித்யா வெறும் 4 முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஹாரர் வகையறா மேக்கிங்கில் மனிதனுக்குள் இருக்கும் உண்மையான டெவிலை தட்டி எழுப்பி திரையில் காட்டியிருக்கிறார். பூர்ணா மற்றும் விதார்த்தின் நடிப்பு படத்திற்கு பெரும் பலம்.

மைனஸ்: 4 பேரை மட்டுமே சுற்றி ஒரே விஷயத்தை உருட்டிக் கொண்டே கதை நகர்வதால் திரைக்கதையில் பெரிய சுவாரஸ்யம் ஏற்பட வில்லை. இந்த இரு ஜோடிகளுக்கும் என்ன ஆனாலும், யாருக்கும் எந்தவொரு கவலையும் இல்லாத வகையில் 2ம் பாதி செல்வதால் பல இடங்களில் படம் சறுக்குகிறது. த்ரில்லர் பிரியர்களை இந்த படம் கொஞ்சம் கவரும். அனைத்து ரசிகர்களும் ரசித்து பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X