For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உதவி பண்ண போய் வசமாய் சிக்கிய உதவி இயக்குனர் வென்றாரா வீழ்ந்தாரா? நான் அவளை சந்தித்தபோது விமர்சனம்

  By
  |

  Rating:
  2.5/5

  stat cast: சந்தோஷ் பிரதாப், சாந்தினி, இன்னசன்ட்

  Director : எல்.ஜி.ரவிச்சந்தர்

  சென்னை: சினிமாவில் ஜெயித்துவிட்டுதான் திருமணம் என்ற முடிவில் இருக்கும் உதவி இயக்குனர் ஒருவர், யாருக்கும் தெரியாமல் திடீரென தாலிக்கட்டிக்கொண்டால்... அதுதான், நான் அவளைச் சந்தித்தபோது...

  உதவி இயக்குனர் சந்தோஷ் பிரதாப், வழி தெரியாத பெண்ணுக்கு வழிகாட்ட போய், பிறகு அவர் ஊருக்கே அழைத்து செல்ல வேண்டிய நிலை. போனால், அங்கிருக்கும் அவசரகால பஞ்சாயத்து அதிரடியாகக் கூடி, இவர்களை காதலர்கள் என முடிவு செய்து, கல்யாணத்தை செய்து வைக்கிறது. இதை எதிர்பார்க்காத, லட்சிய சந்தோஷ், மனைவியை விட்டுவிட்டு சென்னைக்கு எஸ்கேப் ஆகிறார்.

  Naan avalai santhithapothu movie review, Its a fictionalised version of a true story

  ஒரு கட்டத்தில் மனம் தாளாமல் அவரை அழைக்கிறார் சென்னைக்கு. குழந்தை பிறக்கிறது. இந்த விஷயம் எதுவும் தெரியாமல், சந்தோஷுக்கு, அவர் குடும்பம் வேறு பெண் பார்க்கிறது. சினிமா ஸ்டிரைக். படவாய்ப்பு இல்லை. குழந்தைக்கு பால் வாங்க கூட கஷ்டம். சந்தோஷ் படம் இயக்கினாரா? மனைவியை குடும்பம் ஏற்றுக்கொண்டதா? என்பதை ட்விஸ்ட், பரபரப்பு, ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

  இயக்குனரின் சொந்த வாழ்வில் நடந்த கதை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விடுவதால், தயாராகி விடுகிறோம்.

  Naan avalai santhithapothu movie review, Its a fictionalised version of a true story

  உதவி இயக்குனர் கேரக்டரில் சந்தோஷ். தாலிகட்ட நிர்பந்தப்படுத்தும்போதும் சொந்த தம்பியின் முன், மனைவியையும் மகனையும் யாரோ என்பது போல கண்டுகொள்ளாமல் பரிதவிக்கும்போதும் கவனிக்க வைக்கிறார். குழந்தை பாலுக்கு அழும்போது, பையை தடவிக்கொண்டு முழிக்கையில் நமக்கும் வருகிறது பரிதாபம்.

  Naan avalai santhithapothu movie review, Its a fictionalised version of a true story

  குழந்தைக்கு அம்மாவாக சாந்தினி, அழகாக நடித்திருக்கிறார். அவரது முகமும் கண்களுமே எல்லாவற்றையும் பேசிவிடுகின்றன. உதவிக்கு வந்தவனை சிக்கலில் சிக்க வைத்துவிட்டோம் என்று வருந்தும்போதும், 'உங்க வீட்டு ஓரத்துல ஒருத்தியா இருந்துக்கிறேன்' என்று சொந்த கணவனிடமே, யாரோ போல் கேட்கும்போதும், உங்களுக்கு பொண்ணு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்குங்க என்று சந்தோஷிடம் சொல்லும்போதும் அத்தனைப் பரிதாபம்.

  உதவி இயக்குனர்களின் நண்பர்களாக வரும் சாம்ஸ், கோவிந்த மூர்த்தி, சாந்தினியின் அப்பா ஜி.எம்.குமார், அம்மா சுஜாதா, டைரக்டர் டிபி. கஜேந்திரன் ஆகியோர் தங்களுக்கான பங்கை சரியாகச் செய்கிறார்கள்.

  Naan avalai santhithapothu movie review, Its a fictionalised version of a true story

  பிரபல மலையாள நடிகரான இன்னசன்ட் பலான பட தயாரிப்பாளராக துணிந்து நடித்திருக்கிறார். பிறகு அவரே மனம் மாறி சந்தோஷுக்கு தயாரிப்பாளர் ஆவது ஆறுதல்.

  Naan avalai santhithapothu movie review, Its a fictionalised version of a true story

  1996-ல் நடக்கும் கதை என்பதால் அந்த காலக்கட்டத்தை காட்ட, ஒளிப்பதிவாளர் செல்வாவும் ஆர்ட் டைரக்டரும் கடுமையாக மெனக் கெட்டிருக்கிறார்கள். ஹித்தேஷ் முருகவேல், பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

  24 வருடத்துக்கு முந்தைய கதை என்பதால், காட்சிகளும் அப்படியே இருக்கிறது. எளிதில் யூகிக்கக் கூடிய காட்சிகள், திருப்பமோ, அழுத்தமோ இல்லாதது போன்றவை குறையாகத் தெரிந்தாலும் ஒரு வாழ்க்கையை சொன்ன விதத்தில் கொஞ்சம் தப்பிக்கிறார் இயக்குனர்.

  English summary
  A tamil movie Naan avalai santhithapothu, acted santhosh pratap, chandini, g.n.kumar and others. This movie story about a Assistan director's life and the film directed byL.G.Ravichandar
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X