twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Naan Sirithal Review : சிரிப்பு சிக்கலில் சிக்கிய ஆதி... தப்பினாரா, தடுமாறினாரா?

    By
    |

    Rating:
    2.5/5

    Recommended Video

    NAAN SIRITHAAL REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

    நடிகர்கள்: 'ஹிப்ஹாப்' ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார்

    இயக்கம்: ராணா

    சென்னை: கொலைவெறி தாதாக்களிடம் கோக்குமாக்காகச் சிக்கிக்கொளும் சிரிப்புப் பிரச்னை கொண்ட ஹீரோ, அவர்களிடம் இருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான், 'நான் சிரித்தால்'

    ஹீரோ ஆதிக்கு விசித்திர பிரச்னை. அழ வேண்டிய இடத்தில் சிரிப்பு வந்துவிடும். பதட்டமானாலோ, ஓவர் கவலையானாலோ, சிரிக்க ஆரம்பித்துவிடுவார் கண்டபடி. இதனாலேயே பிரச்னைகள் ஹாய் என தேடி வருகிறது, அவரை. இதற்கிடையில், ஆதி குரூப்பில் உள்ள ஒரு நண்பனை காணவில்லை. தேடிச் செல்லும் ஆதி, சக்கரை (ரவி மரியா), தில்லிபாபு (கே.எஸ்.ரவிகுமார்) என்ற இரண்டு தாதாக்களின் மோதலில், சிரிப்பு பிரச்னையால் சிக்கிக்கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்கிற கதையை காமெடியாகச் சொல்கிறார்கள்.

    சம்மர் வரப் போகுது.. கியாரா ரெடியாகிட்டார்.. ஜில் ஜில் கூல் கூல் போட்டோ ரிலீஸ்..ரசிகர்கள் குஷி!சம்மர் வரப் போகுது.. கியாரா ரெடியாகிட்டார்.. ஜில் ஜில் கூல் கூல் போட்டோ ரிலீஸ்..ரசிகர்கள் குஷி!

    குறும்படத்தை

    குறும்படத்தை

    அறிமுக இயக்குனர் ராணா, தான் இயக்கிய 'கெக்க பெக்க' குறும்படத்தை 'நான் சிரித்தால்' ஆக்கி இருக்கிறார். காமெடியில் கலக்க அதிக ஸ்கோப் உள்ள லைன்தான். ஆனால் பலவீனமான திரைக்கதையால் அதில் பாதியைதான் ரசிக்க முடிகிறது. ஹீரோ ஆதி, வழக்கம் போல இந்தப் படத்திலும் ஜாலி கேலி பார்ட்டி. 'சிரி'ப்பாக நடிக்கிறார். சிரித்தே சிக்குகிறார். சிரித்தே மீள்கிறார்.

    ஐஸ்வர்யா மேனன்

    ஐஸ்வர்யா மேனன்

    அஜித் படத்தை பார்க்கும்போது, அஜித் அழும்போது இவர் சிரிக்க, ரசிகர்களிடம் சிக்கிச் சின்னபின்னமாவது, அப்படியே விஜய் படத்துக்கு போன இடத்திலும் நடப்பது, ரகளை. ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனுக்கு அதிக வேலையில்லை. வழக்கமாக ஹீரோயின்கள் செய்யும் காதல் வேலையை மட்டும் செய்துவிட்டு தன்பங்கை முடித்துக்கொள்கிறார்.

    தாதா மோதல்

    தாதா மோதல்

    கே.எஸ்.ரவிகுமார், ரவிமரியாவின் தாதா மோதல், முறைப்புகள் ஏற்கனவே பார்த்தவைதான் என்றாலும் சில இடங்களில் ரசிக்க முடிகிறது. ஒரு காட்சியில் பாண்டியராஜனும் கடைசியில் யோகிபாபுவும் வந்து சிரிக்க வைக்கிறார்கள். கடைசியில் வரும் சுந்தர்.சி டைப் கிளைமாக்ஸ் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கிறது. வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு, கலர்புல்லாக இருக்கிறது. பாடல்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம்.

    ஏதோ மிஸ்சாகிறதே

    ஏதோ மிஸ்சாகிறதே

    சிரித்துக்கொண்டிருக்கும் எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியாக இல்லை. அவர்களுக்குப் பின்னாலும் சோகம் இருக்கிறது என்பதை சொல்ல வந்திருக்கிறார்கள், இந்தப் படம் மூலம். ஒரு குறும்படத்தை, மெனக்கெடாமல் சினிமாவாக்கினால், என்னென்ன நடக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஓர் உதாரணம். நட்பு, ஆக்‌ஷன், ரொமான்ஸ், பேமிலி சென்டிமென்ட் என எல்லாம் இருந்தும் ஏதோ மிஸ்சாகிறதே!

    English summary
    Naan sirithal film has all the potential, but falls flat
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X