Nandhan Review: நாட்டை ஆண்டாரா நந்தன்?.. சசிகுமாரின் அரசியல் படம் எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!

Rating:
3.0/5

நடிகர்கள்: சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி
இசை: ஜிப்ரான்
இயக்கம்: இரா. சரவணன்
ரேட்டிங்: 3

சென்னை: நந்தன் என்கிற பெயரிலேயே மிகப்பெரிய அரசியல் ஒளிந்திருக்கிறது. அதை வைத்து இயக்குநர் இரா. சரவணன் இப்படியொரு வலுவான அரசியல் கதையை சொல்ல முயற்சித்திருப்பதற்கே முதலில் பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து சாதிய ரீதியிலான படங்கள் வரிசையாக வரத் தொடங்கியுள்ளன.

எளிய மக்களின் வலியை பதிவு செய்ய பல இயக்குநர்கள் அடுத்தடுத்து முயற்சித்து வருகின்றனர். மாமன்னன், தங்கலான், வாழை, லப்பர் பந்து படங்களை தொடர்ந்து நந்தன் படமும் அதே போன்ற ஒரு கதை தான்.

nandhan  review  sasikumar

சசிகுமார் இதுவரை சுந்தர பாண்டியன், குட்டிப்புலி என முத்தையா இயக்கத்தில் ஜமின்தார் போன்றே நடித்து வந்த நிலையில், அந்த சாயலை தார தப்பட்ட படத்திற்கு பிறகு மீண்டும் நந்தனில் ஒட்டுமொத்தமாக போட்டு உடைத்திருக்கிறார். நந்தன் திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்குமா? அல்லது எந்தளவுக்கு வரவேற்பை கொடுக்குமா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

நந்தன் கதை: மாமன்னன், எலக்‌ஷன் படங்களின் வரிசையில் நந்தன் படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் படமாக உருவாகியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணங்கான்குடி பகுதியில் பல வருடங்களாக தலைவராக இருந்து வரும் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) இந்த முறை தலைவர் போட்டிக்கு நிற்க முடியாதபடி அரசின் அறிவிப்பு வருகிறது. அதன் காரணமாக தனது வீட்டில் வேலை செய்து வரும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த சசிகுமாரை தலைவர் போட்டிக்கு நிற்க வைக்கிறார். அதன் பின்னர், நந்தன் தலைவரானாரா? அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தையும் வலியையும் ஒவ்வொரு இயக்குநர்களும் ஓங்கி உரைத்து வருகின்றனர். சிலர், அதை பீரியட் படமாகவும், 20 வருடத்திற்கு முன் நடந்த கதையாகவும் காட்டியிருப்பார்கள். ஆனால், இரா. சரவணன் இப்போதும் அது நடப்பதாக துணிச்சலுடன் எடுத்து சொன்ன விதம் சிறப்பாக உள்ளது.

nandhan  review  sasikumar

சசிகுமார் அம்பேத்குமார் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவொன்றே போதும் அந்த கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்த. கோப்புலிங்கம் கதாபாத்திரத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நய்யாண்டி மற்றும் நக்கல் செய்யும் அரசியல் தலைவராக காட்டப்பட்டாலும் அவருக்குள் இருக்கும் சாதி வெறி திமிறி எழும் இடங்களில் மனுஷன் பட்டையை கிளப்பியுள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ருதி பெரியசாமியை நடிக்க வைத்ததும் சிறப்பான சம்பவம் தான். கலரான மலையாள நடிகையை அழைத்து வந்து நடிக்க வைக்காததே தரமான செயல் தான் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிளஸ்: ஆள்வதற்கு மட்டுமில்லை இங்கே வாழ்வதற்கே அதிகாரம் தேவை தான் என ஷார்ப்பான வசனங்களை இரா. சரவணன் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசை படத்துக்கு பல இடங்களில் பலமாக உள்ளது. முன்னணி நடிகர்களின் நடிப்பு மற்றும் படத்தின் கதை அதில் உள்ள ஆழமும் அழுத்தமும் தான் படத்திற்கு பக்க பலமாக உள்ளன.

மைனஸ்: இயக்குநர் இரா. சரவணன் சொல்ல வந்த கருத்தை டாக்குமென்ட்ரி பட பாணியில் பல இடங்களை காட்டியிருப்பது தான் படத்திற்கு மைனஸ் ஆக மாறியிருக்கிறது. மக்கள் பார்த்துக் கொண்டாடும் படத்தில் சரியான அளவுக்கு கருத்துக்களை கோர்த்து திரைக்கதையை இன்னமும் சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X