கிளைமேக்ஸ் மட்டும் சரியில்லை.. நாக சைதன்யாவின் ‘லவ் ஸ்டோரி’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

ஹைதராபாத்: சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே இருக்கும் லவ் ஸ்டோரியே சிக்கலில் சிக்கித் தவிக்கும் நிலையில், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தனுஷின் தெலுங்கு படத்தை இயக்கவுள்ள இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தை பார்த்த ட்விட்டர் வாசிகள் இந்த படம் குறித்து கூறியுள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்.

நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி

நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பு மிரட்டலாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சேகர் கம்முலா சொதப்பல்

சேகர் கம்முலா சொதப்பல்

நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நல்லாவே நடித்திருந்தாலும், இயக்குநர் சேகர் கம்முலா திரைக்கதையில் பயங்கரமாக சொதப்பி விட்டார். படம் கொஞ்சம் கூட இரண்டாம் பாதியில் எந்திரிக்கவில்லை. புதிய படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தை ஸ்கிப் பண்ணிடுங்க என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

சாய் பல்லவி சூப்பர்

சாய் பல்லவி சூப்பர்

லவ் ஸ்டோரி திரைப்படத்தில் மெளனிகா ராணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சாய் பல்லவி வழக்கம் போல அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்காகவே இந்த படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம் என இந்த ரசிகர் ஹார்ட்டீன் எல்லாம் போட்டு கொண்டாடி உள்ளார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

நாக சைதன்யா ரசிகர்கள் திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொது மக்களும் பெருமளவில் லவ் ஸ்டோரி திரைப்படத்தை திரையரங்குகளில் காண திரண்டுள்ளனர். இளைஞர்களை போல குடும்பங்களும் இந்த படத்தை காண தியேட்டருக்கு வரும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

கிளைமேக்ஸ் சரியில்லை

கிளைமேக்ஸ் சரியில்லை

லவ் ஸ்டோரி இந்த படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி கூட நல்லா இருக்கு ஆனால், மொக்கையான கிளைமேக்ஸ் மட்டுமே ஒட்டுமொத்த படத்தையும் கெடுக்கிறது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு பிரமாதம் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் இவரை போலவே விமர்சனம் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X