twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Natchathiram Nagargirathu Review: காதல் அரசியல் கை கொடுத்ததா? நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்!

    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்: காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன்

    இசை: டென்மா

    இயக்கம்: பா. ரஞ்சித்

    சென்னை: நாடகக் காதல், 200 ரூபாய் டிசர்ட் போட்டுட்டு போனால் பொண்ணுங்க லவ் பண்ணிடுவாங்களான்னு தொடங்குகிற இடத்தில் இருந்து காதல் அரசியலை கச்சிதமாக பேசியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.

    துஷாரா விஜயனின் ரெனே கதாபாத்திரம் இவ்ளோ போல்டாக எழுதப்பட்டு இருப்பது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

    ஆனால், Rugged பாய்ஸ் தான் வேணும் என அடம் பிடிக்கும் 2கே கிட்ஸ் பெண்களுக்கு இதெல்லாம் செட்டாகுமா? என்கிற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை. நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

    சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்ஃபேர் விருது..அட நம்ம அஜித் பட டைரக்டர் வாங்கியிருக்கிறாரே! சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்ஃபேர் விருது..அட நம்ம அஜித் பட டைரக்டர் வாங்கியிருக்கிறாரே!

    நட்சத்திரம் நகர்கிறது கதை

    நட்சத்திரம் நகர்கிறது கதை

    சினிமாவில் சாதிக்க நினைக்கும் கலையரசன் பாண்டிச்சேரியில் ஒரு கூத்துப் பட்டறைக்கு செல்கிறார். அங்கே காதல் பிரேக்கப் செய்த துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் இணைந்து ஒரு காதல் டிராமாவை போட திட்டமிடுகின்றனர். அவர்கள் எடுத்துக் கொள்ள நினைக்கும் டாப்பிக்கை வைத்தே காதல் என்கிற அற்புத உணர்வை வைத்து சமூகம் செய்யும் அரசியலை இயக்குநர் பா. ரஞ்சித் பேசியிருப்பது தான் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதை.

    காதல் எல்லாருக்கும் வரும்

    காதல் எல்லாருக்கும் வரும்

    ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் தான் காதல் என இதுவரை தமிழ் சினிமா சொல்லி வந்த நிலையில், உலகளவில் LGBTயினர் அதிகரித்து வரும் சூழலில் அவர்களது காதலும் அவர்கள் சந்திக்கும் சமூக பிரச்சனையையும் அழகாக எடுத்து பேசியுள்ளது நட்சத்திரம் நகர்கிறது. காதலில் அரசியல் கலக்கக் கூடாது என்றும் ஜாதி, மதம், பணம் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் காதலுக்கு எதிரியாக அமையக் கூடாது என்றும் இரு மனங்கள் ஒன்றானால் அவர்களை அவர்கள் விருப்பப்படி வாழ வைக்கும் என்பதை டிராமா டிஸ்கஷனாகவே சொல்லியிருக்கிறது இந்த படம்.

    கலையரசனின் கேள்விகள்

    அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை என பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் கலையரசன் இந்த படத்தில் பொது ஜனமாக இருந்து கேட்கும் கேள்விகளும் அதற்கு கிடைக்கும் விடைகளும் ரசிக்க வைக்கிறது. எதிர்ப்பு அரசியல் மற்றும் ஒதுக்கும் அரசியல் சரியானது இல்லை என்றும் சமநிலையை அதை உணராதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என பா. ரஞ்சித் பேசியுள்ள தத்துவ அரசியல் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

    பலம்

    பலம்

    துஷாரா விஜயனின் ரெனே கதாபாத்திரம் தான் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி சுமக்கிறது. அதன் வழியாகவே ஒவ்வொரு கருத்தையும் இயக்குநர் சமூகத்திற்கு சொல்ல முயற்சி செய்கிறார். காளிதாஸ் ஜெயராம் இன்றைய இளைஞர்களின் மனசாட்சியாக நடித்திருப்பது பிரமாதம். ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரின் காட்சிகளும் அதற்கு தகுந்தவாறு கலை இயக்குநர் அமைத்துள்ள செட் வொர்க்கும் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை கவனத்தை ஈர்க்கிறது. தமிழ் சினிமாவில் பெரிதும் பேசத் தயங்கும் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதல், திருநங்கைகளின் காதல் உள்ளிட்ட அனைத்தையும் ஜாதி, மத அரசியல் கலந்து படம் பேசியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

    பலவீனம்

    பலவீனம்

    ஆனால், அதேசமயம் ஓவர் பிரச்சார நெடியாக படம் முதல் பாதியை போல இரண்டாம் பாதியிலும் பயணிப்பது ரசிகர்களை தியேட்டரில் சீட்டை விட்டு எழுந்து செல்ல வைக்கிறது. டென்மாவின் இசை இன்னமும் படத்திற்கு கூடுதல் வலுவை சேர்த்திருக்கலாமோ என்கிற உணர்வை தூண்டுகிறது. படத்தின் நீளம் மற்றும் காட்சிகளாக நகராமல் வசனத்திலேயே பல விஷயத்தை நகர்த்துவதால் இந்த நட்சத்திரம் சற்று மெதுவாகவே நகர்கிறது!

    English summary
    Natchathiram Nagargirathu Review in Tamil(நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்): Kalidas Jayaram, Dushara Vijayan and Kalaiyarasan's love drama gives a fresh concept to Tamil Cinema audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X