Natpunna Ennanu Theriuma Review: நட்புன்னா என்னானு தெரியுமா.. இது கேள்வி இல்ல.. கலாட்டா! விமர்சனம்

நண்பர்களுக்குள் ஒரு பெண்ணால் ஏற்படும் பிரச்சினை தான் நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் கதை.

Rating:
2.5/5
Star Cast: கவின், ரம்யா நம்பீசன், அருண் ராஜா காமராஜ், ராஜு, இளவரசு
Director: சிவகுமார் அரவிந்த்

சென்னை: நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருக்கு இடையே ஒரு பெண்ணால் உருவாகும் பிரச்சினையும், பின்னர் ஏற்படும் சமாதானமும் தான் நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் ஒன்லைன்.

கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ ஆகிய மூன்று பேரும் பால்ய சினேகிதர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, கவினுக்கு ஏற்படும் ஒரு சம்பவத்திற்கு பிறகு தங்களுடைய வாழ்க்கையில் இனி பெண்களுக்கு இடமே இல்லை என முடிவு செய்கிறார்கள் நண்பர்கள் மூவரும்.

Natpunna ennanu theriuma movie review

வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றித்திரியும் மூவரும், ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்குகிறார்கள். தங்களை எப்போதும் வம்புக்கு இழுக்கும் இளவரசுக்கு போட்டியாக, கல்யாண காண்டிராக்ட் வேலையை ஆரம்பிக்கிறார்கள்.

எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கும் வேளையில், இவர்களின் நட்புக்கு வில்லியாக வருகிறார் ரம்யா நம்பீசன். முதலில் ராஜூவுக்கு தான் ரம்யா மீது காதல் வருகிறது. இதனை தனது நண்பர்களிடம் கூறி, சம்மதம் பெற்று காதலை தொடர்கிறார். ரம்யாவை பார்த்த வேளையில் கவினுக்கும் அவர் மீது காதல் மலர்கிறது. நண்பன் அருண்ராஜா காமராஜையும் ஏமாற்றி, ரம்யாவிடம் காதலை கூறுகிறார். எந்த தயக்கமும் இல்லாமல் ரம்யாவும் கவினின் காதலை ஏற்கிறார்.

Natpunna ennanu theriuma movie review

இந்த காதல் விவகாரம் மற்ற நண்பர்களுக்கு தெரிய வர, நட்புக்குள் விரிசல் ஏற்படுகிறது. இந்த மூவரின் நட்பு என்னவாகிறது? கவின் - ரம்யா காதல் ஜெயித்ததா? என்பதே மீதிக்கதை.

இன்று போய் நாளை வா தொடங்கி தமிழ் சினிமாவில் இந்த கதையை வைத்து நிறைய படங்கள் வந்துவிட்டன. இதனால் இதில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு, அதனை ஜாலியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிவா அரவிந்த். மூன்று நண்பர்களின் பாத்திரப் படைப்பும், அதில் நடித்திருக்கும் நடிகர்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

Natpunna ennanu theriuma movie review

சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் கவின், நல்ல கதாபாத்திரத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். ஓரளவுக்கு நடிக்கவும் செய்திருக்கிறார். இரண்டாம் நாயகன் ராஜூ சஸ்ப்ரைஸ் அறிமுகம். அழுதே காமெடி செய்கிறார். தான் ஒரு பன்முக திறமையாளன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

Natpunna ennanu theriuma movie review

விஜய் சேதுபதி போன்ற பெரிய நாயகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் ரம்யா நம்பீசன், புதுமுக நாயகனுடன் அதே அளவுக்கு ரொமான்ஸ் செய்வது ஆச்சரியமான விஷயம். அந்த வகையில் படத்தில் உண்மையான பலம் ரம்யா தான்.

Natpunna ennanu theriuma movie review

இளவரசு, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், ரமா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

சி.தரண்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமாராக உள்ளது. யுவராஜின் ஒளிப்பதிவும், நிர்மலின் ஒளிப்பதிவும் படத்திற்கு உதவியாக இருக்கிறது.

Natpunna ennanu theriuma movie review

முதல் பாதி படம் மிகவும் மெதுவாக நகர்கிறது. கதாபாத்திரங்களின் தன்மைகளை புரிந்துகொள்வதற்கே வெகு நேரமாகிவிடுகிறது. இரண்டாம் பாதியில் இருந்து தான் படம் வேகம் பிடிக்கிறது. கடைசியில் வரும் நகைச்சுவை காட்சிகள் சிரிப்புக்கு கேரன்டி தருகிறது.

Natpunna ennanu theriuma movie review

கலாட்டாவாக நட்பை புரிய வைக்க முயற்சிக்கிறது "நட்புன்னா என்னானு தெரியுமா".

Natpunna ennanu theriuma movie review

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X