யப்பா முடியல.. சூர்யாவோட கிட்டார் கம்பி கழுத்தை அறுக்குதே.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நவரசா ஆந்தாலஜி மொத்தமும் நடிகர் சூர்யாவையே மையமாக வைத்து விளம்பரம் செய்யப்பட்டு வந்த நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள கிட்டார் கம்பி மேலே நின்று படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வெறும் 45 நிமிஷம் படத்தில் 6 பாடல்களை போட்டு ரசிகர்களை அப்படியே தூங்க வச்சிட்டாரு கெளதம் மேனன் என பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

ஆனால், சூர்யா மற்றும் கெளதம் மேனன் ரசிகர்கள் இசை ரசிகர்களுக்கான விருந்தாக இந்த படம் இருக்கிறது என பாராட்டி வருகின்றனர்.

புர்ஜ் கலிஃபாவில் சூர்யா

புர்ஜ் கலிஃபாவில் சூர்யா

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ள நவரசா ஆந்தாலஜியின் விளம்பரம் புர்ஜ் கலிஃபாவிலேயே பிரம்மாண்டமாக அரங்கேறியது. நவரசா டீசர் காட்சிகள் உலகின் மிக உயரமான பில்டிங்கில் காட்சிப்படுத்தப்பட்டது ரசிகர்களுக்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து மீண்டும் கெளதம் மேனன் - சூர்யா கூட்டணி இணைந்துள்ள இந்த படத்தின் மீது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அதன் காரணமாகவே ஏகப்பட்ட ரசிகர்கள் நெட்பிளிக்ஸை சப்ஸ்கிரைபும் செய்துள்ளனர்.

சூப்பர் சூர்யா

சூப்பர் சூர்யா

நடிகர் சூர்யா கிட்டார் கம்பி மேலே நின்று குறும்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை தவிர வேறு யாரும் இந்த கதைக்கு செட் ஆக மாட்டார்கள் என சூர்யா ரசிகர்கள் ஒரு பக்கம் நவரசாவை கொண்டாடி வரும் நிலையில், கிட்டார் கம்பி மேலே நின்று எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

போர் அடிக்குது

போர் அடிக்குது

சூர்யாவின் கிட்டார் கம்பி மேலே நின்று படம் ரொம்ப ஆவரேஜ் தான் என்றும் ரொம்ப நீளமான வசனங்கள் உண்மையில் போர் அடிக்குது என்றும் நெட்டிசன்கள் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து மறுபக்கம் கலாய்த்து வருகின்றனர்.

ஸ்ட்ரெயிட்டா சூர்யா தான்

ஸ்ட்ரெயிட்டா சூர்யா தான்

என்னைப் போல யாரு ஸ்ட்ரெயிட்டா கடைசி எபிசோடு சூர்யாவோட கிட்டார் கம்பி மேல நின்று பார்த்தீங்க.. ஸ்லோ தான் ஆனால் நல்ல லவ் என சூர்யா ரசிகர்களே கருத்துக்களை பதிவிட்டு தங்களது அதிருப்தியை அளவாக தெரிவித்து வருகின்றனர்.

வாரணம் ஆயிரம் கதை

வாரணம் ஆயிரம் கதை

மேக்னா இறந்ததற்கு பிறகு வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ராணுவத்தில் சேருவார். அப்படி இல்லாமல் அவர் இசை துறையில் பெரிய ஆளாக வந்து நேத்ராவை சந்தித்தால் என்ன நடக்கும் என்கிற ஆல்டர் எண்டிங் கதையாகவே இதை தான் பார்ப்பதாக இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

அழகான ஜோடி

அழகான ஜோடி

காட்சிக்கு காட்சி சூர்யாவையும் நடிகை பிரயாகாவையும் எந்த அளவுக்கு அழகாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு திரையில் அழகாக காட்டி அசத்தி இருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். இந்த ஜோடி ரொம்ப அழகாக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நீ அவ்ளோ அழகு

நீ அவ்ளோ அழகு

நான் இதை சொல்லியே ஆகணும் நீ அவ்ளோ அழகு என சூர்யா ரசிகர்கள் கிட்டார் கம்பி மேலே நின்று படத்தை நவரசா ஆந்தாலஜியில் ரசித்து பார்த்து வருகின்றனர். எந்த கதையை வேண்டுமானால் தேர்வு செய்து பார்த்துக் கொள்ளும் ஆப்ஷன் இருப்பதால் சூர்யா ரசிகர்கள் எடுத்த எடுப்பிலேயே கடைசி எபிசோடான கிட்டார் கம்பி மேலே நின்று படத்தை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

பொதுவாகவே கெளதம் மேனன் படங்கள் என்றாலே பெண் கதாபாத்திரத்திற்கு நிறைய வலிமை இருக்கும். ஆனால், இந்த கதையில் பிராயாகா மார்ட்டினுக்கு அந்த அளவுக்கு ஆழமான கதாபாத்திரம் கொடுக்கப் படவில்லை என்றும், நினைத்த அளவுக்கு நவரசா இல்லை என்றும் வெறும் ஏமாற்றம் மட்டுமே என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மானை தவிர

ஏ.ஆர். ரஹ்மானை தவிர

நவரசாவின் டைட்டில் டிராக்கை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் போட்டுள்ளார். அதை தவிர வேறு ஒன்றும் உருப்படியாக இல்லை என்றும் 9 கதைகளும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் நம்மை சோதிக்கும் விதமாகவே அமைந்துள்ளது என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஒட்டுமொத்த நவரசாவையும் ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X