Connect Twitter Review :''கனெக்ட்''படம் எப்படி இருக்கு?ட்விட்டரில் ரசிகர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை : இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் திரையரங்கில் இன்று வெளியாகி உள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அதிகாலையிலேயே சிறப்பு காட்சியாக வெளியான நிலையில் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாமா?

கனெக்ட்

கனெக்ட்

ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள கனெக்ட் படத்தின் கதை நாம் காலம் காலமாகப் பார்த்து பழகிப்போனதுதான். நயன்தாரா தனது கணவன், குழந்தை, அப்பா சத்தியராஜூடன் வசித்து வருகிறார். அப்போது, நயன்தாராவுக்கும், கணவர் வினய்க்கும் கொரோனா பாசிட்டிவ் வர இருவரும் தனித்தனியாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் மகளின் உடலில் ஏதோ ஒரு மாற்றத்தை நயன்தாரா கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை படத்தி மீதிக்கதை.

இடைவேளை இருக்கா இல்லையா

இடைவேளை இருக்கா இல்லையா

இப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். 99 நிமிடங்கள் ஓடும் இந்த படத்திற்கு இடைவேளை இல்லை என்று சொன்னாலும் இப்படத்திற்கு இடைவேளை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல அனுபவம்

நல்ல அனுபவம்

இந்த படத்தை அதிகாலை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த நயன்தாராவின் தீவிர ரசிகர் ஒருவர். கனெக்ட் திரைப்படம் அற்புதமான அனுபவத்தை தந்தது. நான் இந்த படத்தை ஜி.கே.சினிமாஸில் பார்த்தேன். தவறாமல் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். இப்படம் நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும் என்று பதிவிட்டுள்ளார்.

திகிலூட்டும் காட்சிகள்

திகிலூட்டும் காட்சிகள்

மற்றொரு இணையவாசி, காலை 5 மணி ஸ்பெஷல் ஷோவில் படத்தைப் பார்த்தேன், படத்தில் இடைவேளை இல்லாமல் ஓர் சிறந்த அனுபவத்தை இப்படம் கொடுத்தது. மேலும், பயங்கர ஒலிகளையும், காட்சிகளையும் உண்மையில் பயமுறுத்தும் வகையில் இருந்தது. இருந்தாலும், இந்த படத்தை சிறியவர் பார்த்தால் பயந்துவிடுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

வித்தியாசமான அனுபவம்

வித்தியாசமான அனுபவம்

வழக்கமான படத்தை பார்ப்பதைவிட இந்த படம் ஓர் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து. நல்ல படம். சில தருணங்களில் சில காட்சிகள் திகிலூட்டும் வகையில் இருந்து பதற்றத்தை அதிகரித்தது. ஒளிப்பதிவைப் போலவே இசையும் சூப்பர். Connect அருமையான படம், படத்தை திரையரங்கில் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

சவுண்ட் எஃபெக்ட் சூப்பர்

சவுண்ட் எஃபெக்ட் சூப்பர்

கனெக்ட் நல்ல சவுண்ட் எஃபெக்ட்களுடன் கூடிய நல்ல படமாக உள்ளது. இடைவேளை தான் படத்தின் ஓட்டத்தை கொஞ்சம் குறைத்து ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஒரு த்ரில்லர் படம், பயமுறுத்தும் நல்ல சவுண்ட் எஃபெக்ட் தியேட்டர்களில் பாருங்கள் என படம் பார்த்த ஒரு இணையவாசி பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X