Annapoorani Review: சோறு முக்கியம் தான்.. ஆனால், சுவையாவும் இருக்கணும்ல.. அன்னபூரணி விமர்சனம்!

Rating:
2.0/5

நடிகர்கள்: நயன்தாரா, ஜெய், சத்யராஜ்
இசை: தமன்
இயக்கம்: நிலேஷ் கிருஷ்ணா

சென்னை: இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக இன்று ரிலீஸ் ஆகி உள்ள படம் தான் அன்னபூரணி. சமையல் கடவுள் என சப்டைட்டில் எல்லாம் போட்டு படத்திற்கு பெரும் பில்டப் கொடுத்தாலும், சுவையான உணவாக இல்லை என்பது தான் பெரிய குறையாக உள்ளது.

நயன்தாராவுக்கு கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் எல்லாம் கம்பி நீட்டி வரும் நிலையில், தொடர்ந்து உமன் சென்ட்ரிக் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

Nayantharas Annapoorani Review in Tamil

ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்த பிறகும் இங்கே பெரிய படங்கள் அமையவில்லை. இந்நிலையில், நயன்தாராவின் 75வது படம் என்கிற அடையாளத்துடன் வெளியான அன்னபூரணி வெற்றியை பெறுமா? இல்லையா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

அன்னபூரணி கதை: கோயிலில் பிரசாதம் செய்யும் பிராமண குடும்பத்தில் பிறந்த நாயகிக்கு சமையல் கலை மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே பெரிய சமையல் கலை வல்லுனராக மாற வேண்டும் என நினைக்கும் அவர் அசைவ உணவுகளையும் சமைக்க ஆரம்பிக்கிறார். உணவு என்பது தனி மனித விருப்பம் என்றும் அதை கடவுள் பெயரால் பிரிக்கக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த கதையை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

படம் எப்படி இருக்கு?: ஷங்கரின் உதவி இயக்குநர் என்றாலும், அட்லீயின் பாதிப்பு தான் அதிகம் தெரிகிறது. ராஜா ராணி போல அதே ஆட்களை வைத்து நாமும் ஒரு ஹிட் கொடுத்து விடலாம் என நினைத்த இயக்குநர் மேக்கிங்கில் பல இடங்களில் எழுத்து ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் கோட்டை விட்டிருக்கிறார்.

பிளஸ்: நயன்தாரா, சத்யராஜ், அச்யுத் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். சில வசனங்கள், சில கருத்துக்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், பல இடங்களில் படம் தொய்வடைகிறது. ஆரம்பத்தில் வழக்கமான நடிப்பையே வெளிப்படுத்தும் நயன்தாரா விபத்து நடந்த பிறகு ராஜா ராணி நயன்தாரா போல நடிப்பில் மிரட்டுவது படத்திற்கு பலமாக மாறி உள்ளது.

மைனஸ்: நடிகர் ஜெய்யின் போர்ஷன் ராஜா ராணி படத்தில் ரொம்பவே அழுத்தமாக அமைந்திருக்கும். ஆனால், இந்த படத்தில், அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் போல கடைசி வரை அவருக்கு எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்காமல் விட்டு இருப்பது மைனஸ் ஆக மாறியுள்ளது. தமன் இசையில் பாடல்களும் கவனம் ஈர்க்கவில்லை. மொத்தத்தில் இந்த அன்னபூரணி படத்தில் உப்பு உள்ளிட்ட சில சுவைகள் ரொம்பவே மிஸ்ஸிங்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X