Neelira X Review: ஒன்றரை மணி நேரம் தான் படம்.. ஆனால், அல்லு விட்ரும்.. ‘நீளிரா’ படம் எப்படி இருக்கு?
சென்னை: இயக்குநர் சோமிதரண் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள 'நீளிரா' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஈழ மக்களின் வாழ்க்கை போராட்டங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
டோலிவுட் நடிகர் ராணா டகுபதி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்ற நிலையில், படத்தை பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

1988 காலக்கட்டத்தில் ஈழத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், அதற்கு எக்ஸ் பக்கத்தில் கிடைத்துள்ள விமர்சனங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
நீளிரா படம் எப்படி இருக்கு?: இந்த ஆண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றான 'நீளிரா'வுக்கு நான்கு நட்சத்திர மதிப்பீடு கிடைத்துள்ளது. 1988 இலங்கை போர் பின்னணியில் அமைந்தாலும், இரு துருவங்களாகப் பிரிந்த குழுக்களிடையே உண்மையான காதல் எவ்வாறு அமைதியை நிலைநாட்ட உதவும் என்பதை இப்படம் ஆழமாக ஆராய்கிறது.
அறிமுக இயக்குநர் சோமிதரண் 92 நிமிடத் திரைக்கதை, விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும் கொடுத்தது பாராட்டப்படுகிறது. மக்களின் வலி, போரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல், சித்தாந்த வேறுபாடுகள் மற்றும் போருக்கு நிரந்தர முடிவு இல்லை என்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.
நடிகர்களின் பங்களிப்பு ஒரு சிறப்பம்சம். கேப்டன் வேடத்தில் நவீன் உறுதியாக நடித்துள்ளார். சனந்த், அவரது இறுதி வசனத்தால் ரசிகர்களைக் கவர்ந்தார். ரூபா கொடுவயூர், ஒரு காட்சியில் பிரகாசித்து, தனது திறமை மேலும் ஆராயப்பட வேண்டும் என்பதை நிரூபித்துள்ளார். 'யமகதாகி' படத்திலும் இவர் சிறப்பாகச் செயல்பட்டவர்.
அன்றைய நாட்களில் போர் எப்படி தொடங்கியது என்ற புரிதலை இப்படம் இன்றைய தலைமுறைக்கு வழங்குகிறது. இலங்கைத் தமிழரின் பாரம்பரிய திருமணக் காட்சியும் திரையில் புதிய அனுபவமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, 'நீளிரா' பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது என ராஜசேகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
5 ஸ்டார் ரேட்டிங்: 1988ம் ஆண்டு இலங்கையில் எப்படி போர் உதயமானது என்பதை தெள்ளத் தெளிவாக இயக்குநர் திரையில் காட்டிய விதம் மிரட்டுகிறது. இந்த படம் கண்டிப்பாக ஒரு மாஸ்டர் பீஸ். 5க்கு 5 ஸ்டாரே கொடுக்கலாம் என விமர்சகரும் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கருமான ரமேஷ் பாலா 'நீளிரா' படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். பத்திரிகையாளருக்கு திரையிடப்பட்ட காட்சிக்குப் பிறகு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
கடுமையான போட்டி: வரும் ஏப்ரல் 3ம் தேதி தமிழ் சினிமாவில் கடுமையான போட்டி உருவாகி உள்ளது. லெஜண்ட் சரவணாவின் லீடர், பரத்தின் காளிதாஸ் 2, சமுத்திரகனி, கெளதம் மேனன் நடித்துள்ள கார்மேனி செல்வம் உள்ளிட்ட படங்களுடன் நவீன் சந்திரா நடித்துள்ள நீளிரா படமும் வெளியாகிறது. மேலும், சர்வானந்த் நடித்துள்ள தெலுங்கு மற்றும் தமிழ் படமான பைக்கர் படமும் இந்த வாரம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











