»   »  நீ நான் நிலா-விமர்சனம்

நீ நான் நிலா-விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வித்தியாசமான கதை, ஆனால் விளையாடத் தெரியாமல் களத்தில் இறங்கி விட்டதால் நிலாவில் வெளிச்சம் குறைச்சலாக தெரிகிறது.

பரதனும், ரவியும் கல்லூரி மாணவர்கள். ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். ஆனால் எப்போதும் எதிரும், புதிருமாக இருப்பவர்கள். அனைத்திலுமே இருவருக்கும் கடும் போட்டிதான். காதலிலும் கூட அது தொடருகிறது.

அவர்களின் வகுப்புத் தோழி மேக்னா. காண்போர் கண்களுக்கு கலகலப்பைக் கொடுக்கும் கட்டழகி மேக்னா. பரதனுக்கும், ரவிக்கும் நல்ல தோழியாகிறாள் மேக்னா.

ஒரு கட்டத்தில் இருவரும் மேக்னா மீது காதல் கொள்கிறார்கள். தீவிரமாக காதலிக்கிறார்கள். பரதன் இயல்பான ஒரு இளைஞன், ஆனால் முரட்டுக் குணம் படைத்தவன். ஆனால் ரவியோ புத்திசாலி, காதலுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பவன்.

ரவியின் பழக்க வழக்கம், நடத்தை இவற்றைப் பார்த்து அவன் மீது காதல் கொள்கிறாள் மேக்னா. இதை அறியும் பரதன் மனம் உடைகிறான். அடுத்து என்ன நடக்கும், மது தேவதையை அரவணைக்கிறான், போதையின் மடியில் வீழ்கிறான்.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பரதன் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறான். படத்தின் பிற்பாதியில், ஆவி ரூபத்தில் வருகிறான் பரதன். அதன் பிறகு படத்தின் போக்கு விறுவிறுப்பாகிறது.

இப்படிப் போகிறது நீ நான் நிலா படம். பரதன், ரவி, மேக்னா ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும் கூட பாத்திரம் அறிந்து, புரிந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து கருணாஸும் கலகலக்க வைக்கிறார். ரசிகர்களுக்குப் படத்தை போர் அடிக்காமல் இருக்க கருணாஸின் காமெடி உதவுகிறது.

படத்தின் கிளைமாக்ஸை வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். தீனாவின் பாடல்கள் கேட்கும்படியும் இல்லை, ரசிக்கும்படியும் இல்லை.

வித்தியாசமான கதை, ஆனால் சரியாக எடுத்திருந்தால் சுவையாக இருந்திருக்கும். ஆனால் லாஜிக்கே இல்லாமல் நோகடிக்கிறார்கள்.

கதையில் இன்னும் கொஞ்சம் கருத்தை செலுத்தியிருந்தால் வெற்றிப் படமாகியிருக்கும்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil