twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    NNOR Review : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.. படத்துக்கு பொருத்தமா தான் பேர் வச்சிருக்காங்க!

    |

    Recommended Video

    Nenjamundu Nermaiyundu Odu Raja Audience Opinion

    Rating:
    2.5/5
    Star Cast: ரியோ ராஜ், ஆர் ஜே விக்னேஷ்காந்த், ஷிரின் காஞ்சவாலா, சுட்டி அரவிந்த், ராதா ரவி
    Director: கார்த்திக் வேணுகோபாலன்

    சென்னை: மறைந்து போன மனிதாபிமானத்தை மீட்டெடுக்க முயற்சித்திருக்கிறது நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம்.

    அனாதை ஆசிரமத்தில் ஒன்றாக வளர்ந்த ரியோவும் விக்கியும் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் ஆசிரமத்தில் தங்கி இருந்த சுட்டி அரவிந்த் அவர்களைப் பார்த்துக்கொள்கிறார். யூடியூபுக்காக செய்யும் ஒரு நிகழ்ச்சி மூலம் பெரும் பணக்காரரான ராதாரவியின் தொடர்பு கிடைக்கிறது. இவர்கள் ஆசைப்படும் பணத்தை தருவதாக சொல்லும் ராதாரவி அதற்கு 3 செயல்களை செய்ய சொல்கிறார். அந்த மூன்று செயல்கள் என்ன?, ரியோவும், விக்கியும் அதை செய்தார்களா? என்பது தான் படத்தின் கதை.

    Nenjamundu nermaiyundu odu raja review: Youtubers tells a stong message

    யூடியூப் பிரபலங்களை நடிக்க வைத்து புதுமை காட்டியிருக்கிறார், யூடியூப்பில் இருந்து வளர்ந்து வந்த இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். பிரேக்கிங் நியூசில் வர வேண்டும் என்பதற்காக நாயகர்கள் செய்யும் அலப்பறைகள் செம ரகளை. யூ.கே. நகர் தேர்தல், மனநோயாளி எம்எல்ஏ என படம் நெடுக அரசியல் நையாண்டி தான். சில ரசிக்க வைக்கின்றன. பல 'கடுப்பேத்றாங்க மைலார்டு' என புலம்ப வைக்கின்றன.

    முக்கால்வாசி படம் சகள vs ரகளையாகவே நகர்கிறது. நடப்பு சம்பவங்களை கோர்த்து படமாக்கி இருக்கிறார் கார்த்திக். இதனால் படம் எதை நோக்கி செல்கிறது என்பதே தெரியவேயில்லை. ஆனால் கடைசி 15 நிமிட க்ளைமாக்ஸ் காட்சியில், சூப்பரான மெசேஜ் சொல்லி உருக வைத்துவிடுகிறார் இயக்குனர்.

    Nenjamundu nermaiyundu odu raja review: Youtubers tells a stong message

    கனா போன்ற ஒரு படத்தை எடுத்த சிவகார்த்திகேயன், இது மாதிரியான புதிய முயற்சிகளுக்கு கைக்கொடுத்திருப்பதற்கு பாராட்டுகள். ஆனால் இது போன்ற விஷப்பரீட்சைகளை இனி செய்யாதீர்கள் சிவா.

    Nenjamundu nermaiyundu odu raja review: Youtubers tells a stong message

    டைமிங் காமெடி, கவுண்டர் பஞ்ச் டயலாக் என ரவுசு செய்கிறார் ரியோ. படத்தின் கதாநாயகன் வேடத்துக்கு இயல்பாக பொருந்துகிறார். ஆனால் காமெடியை தவிர தனக்கு வேறொன்றும் வராது என சத்தியம் செய்யாதக் குறையாக அடம்பிடிக்கிறார்.

    Nenjamundu nermaiyundu odu raja review: Youtubers tells a stong message

    நிறைய ஸ்பேஸ் இருந்தும், குறைவாகவே காமெடி செய்திருக்கிறார் விக்னேஷ்காந்த். இன்னும் கூடுதலாக சிரிக்க வைத்திருந்தால், நிறைய நிறைய ரசித்திருக்கலாம். எந்த காட்சியையும் சீரியசாக்காமல், போரடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    Nenjamundu nermaiyundu odu raja review: Youtubers tells a stong message

    இந்த படத்தில் ஹீரோயின் தேவையா என கேள்வி கேட்க வைக்கிறார் ரோல் ஷிரின். கொடுத்த வேலையை மட்டும் சரியாக செய்திருக்கிறார். நாஞ்சில் சம்பத்துக்கு மீண்டும் ஒரு அரசியல்வாதி வேடம். கைத்தேர்ந்த நடிகர் போல் நடித்திருக்கிறார். அவருக்காகவே உருவாக்கப்பட்ட 'துப்புனா துடைச்சிக்குவேன்' பாட்டு செம கலாய்.

    Nenjamundu nermaiyundu odu raja review: Youtubers tells a stong message

    அனுபவ நடிப்பால் அனைவரையும் பீட் செய்கிறார் ராதாரவி. படத்தின் மையக்கருவே இவரது பிளாஷ் பேக் காட்சி தான் என்பதால் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆனால் அந்த பிளாஷ்பேக் காட்சி தான் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    Nenjamundu nermaiyundu odu raja review: Youtubers tells a stong message

    படத்தை இரு தோள் கொடுத்து தாங்குகின்றன ஷபீரின் இசையும், யூகே.செந்தில் குமார் ஒளிப்பதிவும். ஒரு கமர்சியல் படத்துக்கு என்ன தேவையோ அதை இருவரும் சரியாக கொடுத்திருக்கிறார்கள்.

    Nenjamundu nermaiyundu odu raja review: Youtubers tells a stong message

    முதல் பாதி முழுக்க வேகமாகவும் சுவாரசியமாகவும் நகரும் திரைக்கதை பின்பாதி தொடக்கத்தில் மெதுவாக செல்கிறது. இறுதிகாட்சிக்கு முன்னர் மீண்டும் வேகம் எடுக்கிறது. நம்ப முடியாத விஷயங்கள் படத்தில் ஏராளம் உண்டு. என்ன தான் புதுமை என்றாலும், அதற்கும் ஒரு அளவு இருக்கிறது கார்த்திக் வேணுகோபாலன்.

    Nenjamundu nermaiyundu odu raja review: Youtubers tells a stong message

    சின்ன சின்னதாக படத்தில் நிறைய குறைகள் இருக்கின்றன. இருப்பினும், புதியவர்களின் வருகை, மறைந்துபோன மனிதாபிமானத்தை மீட்டெடுத்து வலியுறுத்துகிறது. அந்த விதத்தில், "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா", நிறைய நாட்கள் ஓடட்டும்.

    English summary
    The tamil movie Nenjamundu Nermaiyundu odu raja, starring Rio Raj, Vignesh, Shirin, Nanjil Sampath, Radharavi in the lead roles is a complete political satire with a emotional message at the end.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X