Don't Miss!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நேர்கொண்ட பார்வை படத்தில் என்ன இருக்கு, இல்லை: சுவாரஸ்ய தகவல்
Recommended Video
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தில் இருக்கு அஜித் ரசிகர்களுக்கு வேட்டை இருக்கு.
அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஹெச். வினோத்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.
லைக்காவின் வெப் சீரிஸ்.. தமிழில்.. கால் பதிக்கும் மீனா!
நேர்கொண்ட பார்வை
முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ சிங்கப்பூரில் நேற்று நடந்தது. மேலும் செய்தியாளர்களுக்காக படத்தை பிரத்யேகமாக நேற்று திரையிட்டார்கள். பிங்க் படம் போன்று இல்லாமல் நேர்கொண்ட பார்வையில் அஜித் ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வினோத் தெரிவித்திருந்தார். அந்த மாற்றங்கள் இரண்டே இரண்டு தான். மற்றபடி பிங்க் படத்தை அப்படியே அழகாக ரீமேக் செய்துள்ளார் வினோத்.
அகலாதே
பிங்க் படத்தில் அமிதாப் பச்சனின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறப்பதை மட்டும் தான் காட்டியிருப்பார்கள். ஆனால் தமிழில் வித்யா பாலன் அஜித்துடன் சேர்ந்து டூயட் பாடுகிறார். வித்யா பாலனும் இறந்து போவது போன்று காட்டினாலும் காரணம் வேறாக உள்ளது. அஜித், வித்யா பாலன் இடையேயான கெமிஸ்ட்ரி அருமை.
மாஸ்
இந்தியில் அமிதாப் பச்சன் யாரையும் அடித்து சண்டை போடவில்லை. ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஒரே நேரத்தில் 50 பேரை அடித்து நொறுக்கி மாஸ் காட்டும் சண்டை காட்சி உள்ளது. அந்த காட்சியே தல ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அஜித்துக்காக மாஸ் இன்ட்ரோ காட்சி கிடையாது, பன்ச் வசனம் எல்லாம் கிடையாது. இருப்பினும் அஜித் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார்.
யுவன்
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடிக்கவில்லை அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் பிஜிஎம் படத்திற்கு பெரிய பிளஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் அஜித் இந்த படத்தில் துணிந்து நடித்து அனைவரின் கைதட்டல்களையும் பெற்றுள்ளார். ஆக, நேர்கொண்ட பார்வை அஜித் கெரியரில் முக்கிய இடத்தை பிடிக்கும், பிடித்தே தீரும்.