பண்டிகைய கொண்டாடுங்களே: நேர்கொண்ட பார்வை ட்விட்டர் விமர்சனம்

By Siva

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை சிங்கப்பூரில் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று சிங்கப்பூரில் நடந்தது. மேலும் மீடியாவுக்கும் இன்று இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.

ப்ரீமியர் ஷோவை முன்னிட்டு போனி கபூர், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் சிங்கப்பூர் சென்றுள்ளனர். இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களின் கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

தளபதி ரசிகர்

இரண்டாம் பாதி நீதிமன்ற வசனங்கள் அருமை. பாடல்கள் சுமாராக உள்ளன. பிளாஷ்பேக் காட்சிகள் மட்டும் தான் மைனஸ். ரங்கராஜ் பாண்டே கதாபாத்திரம் அருமை. எத்தனவாட்டி வேணாலும் பார்க்கலாம். குறை சொல்ல எதுவும் இல்லை. அஜித்துக்காக மகிழ்ச்சி அடைகிறேன். 8/10 #NerKondaPaarvai என தளபதி ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆர். கே. சுரேஷ்

படம் வாவ்...#NerkondaPaarvaiWorldPremiere #NerKondaPaarvaiPremierShow தல நடிப்பு சூப்பர் என்று பாராட்டியுள்ளார் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் ட்வீட் செய்துள்ளார்.

தல படம்

தல அஜித்துக்கு 2019ம் ஆண்டின் இரண்டாவது பிளாக்பஸ்டர் என்று சிங்கப்பூரில் இருந்து தகவல் வந்துள்ளது. பண்டிகைய கொண்டாடுங்களே 🔥🔥🔥🔥 என்று தல ரசிகர்கள் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

நேர்கொண்ட பார்வை ஃபென்டாஸ்டிக் என்று அவ்வளவு எளிதில் பாராட்டாத விமர்சகர்களே தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் மக்களின் கருத்துகளை நினைத்துப் பாருங்க. இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் வேட்டை நடத்தப் போகிறது என்று தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் ட்விட்டரில் மோதிக் கொண்டனர். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை பாராட்டியுள்ளதோடு அது கசிந்துவிடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். அவர்களின் பாசத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X