twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    All Of Us Are Dead Review: பெயரை போலவே மிரட்டுகிறதா இந்த கொரிய ஜாம்பி வெப்சீரிஸ்?

    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்:

    பார்க் சாலமன்

    பார்க் ஜி ஹு

    கிம் பியூங் சுல்

    இசை: மோக்

    இயக்குநர்: லீ ஜே க்யூ (Lee Jae Gyu)

    ஒடிடி தளம்: நெட்பிளிக்ஸ்

    சென்னை: ஸ்குவிட் கேமை தொடர்ந்து இன்னுமொரு கொரிய வெப் தொடர் உலகின் டாப் வெப் தொடர் பட்டியலில் ரிலீசான ஒரு சில நாட்களிலேயே முதல் இடத்தை பிடித்து விட்டது.

    தென் கொரிய இயக்குநர் லீ ஜே க்யூ (Lee Jae Gyu) இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது.

    ரெசிடன்ட் எவில், டிரைன் டு பூசான், ஆர்மி ஆஃப் டெட் நம்ம ஊர் மிருதன் வகையறா ஜாம்பி கதை என்றாலும், பள்ளி மாணவர்கள் இடையே அது பரவுவதும் அந்த போராட்டத்தை அவர்கள் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை காட்டிய விதத்திலும் வித்தியசமாக தனித்து நிற்கிறது இந்த All Of Us Are Dead வெப் தொடர்.

    பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் ஆளாக வெளியேறப் போவது இவர் தானா? டேஞ்சர் ஜோனில் யாரெல்லாம்?பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் ஆளாக வெளியேறப் போவது இவர் தானா? டேஞ்சர் ஜோனில் யாரெல்லாம்?

    ஆல் ஆஃப் அஸ் ஆர் டெட்

    ஆல் ஆஃப் அஸ் ஆர் டெட்

    எல்லோருமே இறந்து விட்டோம் என்கிற கொஞ்சம் கூட நம்பிக்கை தராத வகையில் ஒரு வித்தியாசமான டைட்டிலுடன் உருவாகி உள்ள தென் கொரிய வெப் தொடர் இது. நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் கடந்த ஜனவரி 28ம் தேதி வெளியானது. மொத்தம் 12 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில் ஒவ்வொரு காட்சியும் ரத்தம் தெறிக்க தெறிக்க ஜாம்பி வேட்டை நடக்கிறது.

    முதல் எபிசோடிலே ஜாம்பி

    முதல் எபிசோடிலே ஜாம்பி

    நகரத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஏகப்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர் என்பதை ஆரம்ப காட்சியிலேயே காட்டி விடுகின்றனர். அந்த பள்ளியில் பார்க்கவே பயங்கரமாக இருக்கும் அறிவியல் வாத்தியார் புதிய வைரஸ் ஒன்றை கண்டுபிடிக்கும் சோதனையில் இருக்கிறார். அந்த வைரஸ் தான் ஒட்டுமொத்த மாணவர்களையும் அந்த நகரத்தையும் பாதிக்கின்றது என்கிற கதையை முதல் எபிசோடிலேயே ஜவ்வாக போட்டு இழுக்காமல் காட்சிக்கு காட்சி த்ரில்லர் படம் போல காட்டி உள்ளனர்.

    என்ன கதை

    என்ன கதை

    நத்தையிடம் ஒரு பாராசைட் சிக்கிக் கொள்வது நத்தைக்குத் தான் ஆபத்து என அறிவியல் வகுப்பு எடுக்கும் ஆசிரியர் சொல்வது தான் ஒட்டுமொத்த கதையே. ஒட்டுண்ணி வைரஸ் உடம்புக்குள் சென்றால் அந்த நபருக்கு ஏற்றவாறு ஆபத்தாக போய் முடியும் என்றும் உடம்பில் உள்ள ஒயிட் பிளட் செல்கள் சூரிய ஒளிபட்டால் மேலும், சக்தி பெற்று அந்த வைரஸ் உடன் போராட முடியும் என்பதை அவர் தனது ஆய்வு மூலம் கண்டுபிடிக்கும் காட்சிகளும் ஜாம்பியால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றவர்களை கடித்து ஜாம்பியாக்க சில மாணவர்கள் அதிலிருந்து தப்பிக்க என்ன செய்கிறார்கள்? தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் கதை.

    காதல், அறிவு, வன்மம்

    காதல், அறிவு, வன்மம்

    வெறும் ஜாம்பியாக மாறிய ஆள் கடித்ததும் அடுத்தவர் ஜாம்பியாக மாறிவிடும் கதையை மட்டும் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு இந்த வெப் தொடர் ரசிகர்களை ஈர்த்து இருக்காது. பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் காதல், முக்கோண காதல், ஜாம்பி தான் என்பதை அறிந்து கொண்டு அலறி ஓடாமல் அதனை எப்படி கையாள்வது என சிந்திக்கும் அறிவு, டிரைன் டு பூசான் படங்களை சொல்லி எல்லாம் ஆலோசிக்கின்றனர். அதே போல பள்ளியில் வன்மத்தோடு மற்ற மாணவர்களை நடத்தும் ஒரு சில மாணவர்கள் அதில் ஒருவன் ஜாம்பி ஆனால், அவனது வில்லத்தனம் மேலும், எப்படி அதிகமாகும் என ஏகப்பட்ட விஷயங்கள் இந்த வெப் தொடரில் உள்ளன.

    பிளட் பாத்

    பிளட் பாத்

    25 நாடுகளுக்கும் மேல் நெட்பிளிக்ஸில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த வெப் தொடர். பார்க் சாலமன், பார்க் ஜி-ஹூ, கிம் பியூங் சுல் என ஏகப்பட்ட நடிகர்கள் நடிப்பில் உருவாகி உள்ள இந்த வெப் தொடர் முழுக்க பிளட் பாத்தாக மாறி உள்ளது. பிராஸ்தெடிக் மேக்கப் போட்டவர்களுக்கு தனிப் பாராட்டே கொடுக்கலாம். இளம் நடிகர்களை வைத்துக் கொண்டு இப்படியொரு மிரட்டல் வெப் தொடரை உருவாக்கி உலகத்தையே அதிர வைத்து உள்ளனர்.

    English summary
    New South Korean webseries All Of Us Are Dead makes top charts in Netflix all over the world. After Squid Game another Korean webseries rules the world. This time Zombie comes to haunt the viewers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X