என்னா படம்.. தியேட்டர்ல பார்க்க முடியாததுதான் வருத்தம்.. சூரரைப்போற்று டிவிட்டர் விமர்சனம்!

சென்னை: சூரரைப் போற்று திரைப்படம் அமேஸான் பிரைமில் ரிலீஸாகியுள்ள நிலையில் படம் குறித்து ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

Soorarai Pottru Review | 'Equally Balanced' Surya • Sudha Kongara

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாக இருந்தது.

ஆனால் அமேஸானில் படம் ரிலீஸாவதற்கு முன்பே சூரரைப்போற்று திரைப்படம் இணையத்தில் லீக்காகிவிட்டது.

முன்கூட்டியே ரிலீஸ்

முன்கூட்டியே ரிலீஸ்

இதனை அறிந்த நடிகர் சூர்யா, உடனடியாக சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் பிரைமில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து படம் 12 முன்பாகவே முன்கூட்டியே அமேஸானில் ரிலீஸானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.

இந்திய சினிமாவுக்கு விருந்து

இந்திய சினிமாவுக்கு விருந்து

சூரரைப்போற்று படத்தை பார்த்த இந்த நெட்டிசன், இந்திய சினிமாவிற்கு ஒரு விருந்து மாறனின் உழைப்பு.. பார்ப்பவரயே வியப்பில் கொண்டு போகுமே.. இந்த விமான பயணம்.. நெஞ்சே நிமிர்த்தி நிற்கீரதுக்கு தனி கெத்து வேணும்.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இறக்குடா ஃபிளைட்ட..

இறக்குடா ஃபிளைட்ட..

சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன்,
உண்மையிலேயே.. " வானம்‌ என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா இறக்குடா ஃப்ளைட்ட " என்ற டயலாக்கை பதிவிட்டு படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அந்த ஒரு வருத்தம்தான்

அந்த ஒரு வருத்தம்தான்

சூரரைப்போற்று படத்தை ஓடிடி தளமான அமேஸான் ப்ரைமில் பார்த்த இந்த நெட்டிசன், தியேட்டர்ல பாக்க முடியல அப்படின்னு ஒரு வருத்தம்.. என்னா படம்.. என பிரமிப்புடன் டிவிட்டியுள்ளார்.

பறக்க விட்டாய்ங்கய்யா..

பறக்க விட்டாய்ங்கய்யா..

சூரரைப்போற்று தமிழில் தயாரிக்கப்பட்ட சிறந்த இன்ஸ்பிரேஷனல் படங்களில் ஒன்று.. மற்றவர்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கு மேலே செய்திருக்கிறார் சூர்யா. ஒவ்வொரு ஃபிரேமிலும் உண்மையான அபிலாஷைகளையும் கொண்டு வருகிறது.. சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அடிச்சு உடைச்சு பறக்க விட்டாய்ங்கய்யா.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பறந்துதான் முன்னேற முடியும்

பறந்துதான் முன்னேற முடியும்

படத்தை பார்த்த இந்த ரசிகர் சில நேரங்களில் நாம பறந்துதான் முன்னேற முடியும் என படத்தில் இடம்பெற்ற வசனத்தை பதிவிட்டு தனது கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

பாஸிட்டிவான விமர்சனங்கள்

பாஸிட்டிவான விமர்சனங்கள்

மற்றொரு நெட்டிசனான இவர், பாஸிட்டிவான விமர்சனங்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சூரரைப்போற்று படத்தை பெரிய ஸ்க்ரீனில் பார்க்க முடியாததுதான் சோகம்.. அதை விரைவில் பார்க்க காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

க்ளைமேக்ஸ் தீயாய் இருக்கு

க்ளைமேக்ஸ் தீயாய் இருக்கு

சூரரைப்போற்று படத்தை அமேஸான் பிரைமில் பார்த்து முடித்த இந்த ரசிகர், இப்போதுததான் படத்தை பார்த்து முடித்தேன்.. க்ளைமேக்ஸ் தீயாய் இருக்கு.. பர்ஃபெக்ட் என பதிவிட்டுள்ளார்.

எதுவும் கஷ்டம் இல்லை..

எதுவும் கஷ்டம் இல்லை..

சூரரைப்போற்று படத்தை பார்த்த இந்த ரசிகர், நம்மால அதெல்லாம் முடியுமானு நினைக்கிறவங்களுக்கு..முயற்சி செஞ்சா எதுவும் முடியும்னு உணர்த்தும் திரைப்படம்.. எதுவும் கஷ்டம் இல்லை.. வாழ்த்துகள் சூர்யா சார்..மற்றும சுதா கொங்கரா என குறிப்பபிட்டுள்ளார்.

செம்மயா இருந்திருக்கும்..

செம்மயா இருந்திருக்கும்..

சூரரைப் போற்று படத்தை பார்த்த இந்த நெட்டிசன், படம் பெஸ்ட், தியேட்டர்ல பாத்திருந்தா செம்மயா இருந்துருக்கும் என ஃபீல் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

சூரரைப் போற்று படத்தை பார்த்த இந்த நெட்டிசன், இது வரைக்கும் ஒரு தடவை கூட நான் ஃபிளைட்ல போனது இல்லை எனக்கே இந்த படம் பார்த்ததுக்கு அப்பறம் போகணும் ஆசையா இருக்கு.. மனசார என்ஜாய் பண்ணி பார்த்தேன் தரமான சம்பவம் சுதா பின்னிட்டாங்க என பாராட்டியுள்ளார்.

தேசிய விருது கொடுக்கணும்

தேசிய விருது கொடுக்கணும்

எப்படி ஒரு படத்தின் ஒவ்வொரு நொடியையும் உருவாக்க முடியும்.. சூரரைப்போற்று திரைப்படம் ஒரு அற்புதமான திரைப்படம்.. சூர்யா அண்ணாவை இப்படி தீயாய் காட்டிய சுதா கொங்கரா மேமுக்கு மிகப்பெரிய நன்றி.. முழுக்க முழுக்க வெறித்தனம்.. மொத்த டீமுக்கும் தேசிய விருது கொடுக்க வேண்டும்.. ஜிவி பிரகாஷ் பின்னிடீங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கண்ணீர் சிந்த வச்சுட்டாங்க..

கண்ணீர் சிந்த வச்சுட்டாங்க..

சூரரைப்போற்று படத்தை பார்த்த இந்த ரசிகர், மூனு நாலு இடத்துல கண்ணீர் சிந்த வச்சுட்டாய்ங்கையா என தனது எக்ஸ்பீரியன்ஸை ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X