ஓடிடியில் ரிலீஸானது 'V': முதல் முறையாக மிரட்டல் வில்லனாக நானி.. படம் எப்படி? டிவிட்டர் ரிவ்வியூ!
சென்னை: நடிகர் நானி முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் 'V' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
கொரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல முக்கிய நடிகர்களின் படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது.
அந்த வகையில் தென்னிந்திய அளவில் முதல் பெரிய படமாக நடிகர் நானி நடித்துள்ள 'வி' திரைப்படம் ஓடிடி தளமான அமேஸான் பிரைமில் ரிலீஸ் ஆகியுள்ளது.
நானி, சுதீர், நிவேதா தாமஸ்
வி திரைப்படத்தில் நானியுடன் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குனர் மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
முதல் முறையாக வில்லன்
கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நானி தனது 25வது படமான இந்தப் படத்தில் முதல் முறையாக வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்தும் நானியின் நடிப்பு குறித்தும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மிரட்டியுள்ளார்
அதன்படி வில்லனாக நடிகர் நானி மிரட்டியிருப்பதாக கூறியுள்ளனர். படத்தின் முதல் பாதி விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் செல்வதாக கூறியுள்ள நெட்டிசன்கள் இரண்டாம் பாதியில் அது மிஸ்ஸாவதாக தெரிவித்துள்ளனர்.
வெறித்தனம்
முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் இல்லை என்றும் யூகிக்க கூடிய க்ளைமேக்ஸ் என்றும் தெரிவித்துள்ள நெட்டிசன்கள் அதுதான் படத்திற்கு மைனஸ் என கூறியுள்ளனர். அதே நேரத்தில் நடிகர் நானியின் நடிப்பு வெறித்தனமாக உள்ளது என்றும் வாய்ஸ், பாடி லாங்குவேஜ் என எல்லாவற்றிலும் மிரட்டியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
பெரிய பிளஸ்
படத்திற்கு பெரிய பிளஸ் ஒளிப்பதிவும் நானியின் நடிப்பும் தான் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். சுதீர் மற்றும் நிவேதா தாமஸ் தங்களின் வேலையை கச்சிதமாக செய்துள்ளதாகவும் சில இடங்களில் மட்டும் ஓவர் ஆக்டிங்காக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆதிகால கரு
மேலும் ஆதிகாலம் முதல் சினிமாவில் உள்ள பழைய பழிவாங்கும் படலம்தான் வி திரைப்படம் என்றும் ஆனால் நானி மற்றும் சுதீரின் நடிப்பு அட்டகாசமாய் உள்ளது என்றும் சில நெட்டிசன்கள் தங்களின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர்.
கொண்டாடும் ஃபேன்ஸ்
இதனிடையே படத்தின் சில காட்சிகளில் அல்லு அர்ஜுனின் ரெஃபரன்ஸ் இருப்பதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி, அந்தக் காட்சிகளை வைரலாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜூனின் காட்சிகளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











