For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  netrikan Review: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்பட விமர்சனம்

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள் : நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன்

  இயக்கம் :மிலிண்ட் ராவ்

  சென்னை : முறையாக காபிரைட் உரிமைகளை வாங்கி "blind " எனும் ஒரு கொரியன் படத்தை தமிழாக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ சம்மதத்தை பெற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது ரவுடி பிச்சர்ஸ் சார்பாக நெற்றிக்கண் என்னும் தலைப்பில் இன்று ஹாட் ஸ்டார் மூலம் வெளியிட்டு உள்ளனர் . "அவள்" படத்தை இயக்கி ஒரு சிறப்பான அங்கீகாரம் பெற்ற மிலிண்ட் ராவ் இந்த படத்தையும் இயக்கி உள்ளார் .

  என்னோட Girl Fans இந்த படத்துக்கப்புறம் இருக்க மாட்டாங்க | Actor Ajmal Exclusive |Filmibeat Tamil

  கிரைம் திரில்லர் சினிமாக்களை அதிகம் விரும்பும் ரசிகர்களுக்கு நெற்றிக்கண் திரைப்படம் பிடிக்குமா? எந்த அளவுக்கு அவர்கள் கொரியன் படத்தை ரீமேக் செய்யும்போது மெனக்கட்டு செய்திருக்கிறார்கள் என்பதை நயன்தாரா ரசிகர்கள் நிறையவே அலசி வருகின்றனர் .

  டைம் மிஷின் கிடைத்தால்.. டிவி நிகழ்ச்சியில் கதறியழுத நயன்தாரா.. கலங்க வைக்கும் புரமோ! டைம் மிஷின் கிடைத்தால்.. டிவி நிகழ்ச்சியில் கதறியழுத நயன்தாரா.. கலங்க வைக்கும் புரமோ!

  கண் தெரியாத "விசுவலீ சேலஞ்ச்டு " சிபிஐ ஆபீசராக நயன்தாரா படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து உள்ளார் . உடன்பிறந்த தம்பியின் நலன் கருதி எடுக்கும் சில முயற்சிகளில் எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் தன் பார்வையை இழக்கிறார் துர்கா(நயன்தாரா) .

  அறிவுக் கூர்மையை

  அறிவுக் கூர்மையை

  பார்வை இழந்த ஒரு சிபிஐ அதிகாரி மீண்டும் பணியில் சேர முடியாமல் இருக்கும் சூழலில் தன் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த எதிர்பாராத கஷ்டங்களும் , தனிமையும், அழுத்தத்தை கொடுக்க அதை எதிர்கொள்ளும் விதமும் தனது அறிவுக் கூர்மையை பயன்படுத்தி எப்படி செயல்படுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

  பெண்களை கடத்தும்

  நெற்றிக்கண் படத்தில் வில்லனாக குறிப்பாக இளம் பெண்களை கடத்தும் ஒரு சைக்கோவாக அஜ்மல் மிரட்டி உள்ளார் .தமிழ் சினிமாவில் நிறைய சைக்கோ கொலைகாரர்களை நாம் பார்த்து விட்ட காரணத்தினால் இவர் செய்யும் சைக்கோ தனம் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் அவரது நடிப்பும் திரைக்கதை அமைந்த விதமும் சுவாரஸ்யம் கூட்டுகிறது .

  சப்-இன்ஸ்பெக்டராக

  சப்-இன்ஸ்பெக்டராக

  சைக்கோ கொலைகாரனுக்கும் துர்காவிற்கும் இடையே மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டராக மணிகண்டன் என்கின்ற தனது நிஜ பெயரையே சினிமாவிலும் பயன்படுத்தியுள்ளார் .எதார்த்தமாக தனக்கு கிடைத்த கதாபாத்திரத்திற்கு ஜஸ்டிஸ் செய்துள்ளார் மணி .

  பயத்தையும் எதிர்பார்ப்பையும்

  படத்தின் பல காட்சிகளில் இசையமைப்பாளர் கிரிஷ் கொடுக்கும் பின்னணி இசை காட்சிகளை மிகவும் மெருகேற்றி உள்ளது . ஒருவிதமான பயத்தையும் எதிர்பார்ப்பையும் கலந்து அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கின்ற டென்ஷன் கிரியேட் செய்த விதம் மிகவும் பாராட்ட தக்கது . கிரீஷ் மற்றும் சவுண்ட் டிசைன் செய்த விஜய் இருவரும் இணைந்து அசத்தி உள்ளார்கள். எது பின்னணி இசை எது சவுண்ட் எபக்ட்ஸ் என்று கண்டுகொள்ள முடியவே முடியாத அளவிற்கு காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்து உள்ளனர் .

  சேசிங் மற்றும் அட்டாக்

  சேசிங் மற்றும் அட்டாக்

  Hit-and-run என்று சொல்லக்கூடிய ஒரு சாலை விபத்தின் பின்னணியில் , என்ன நடந்தது? எப்படி நடந்தது? யார் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்கின்ற பலவிதமான விசாரணையில் புது புது தகவல்கள் கிடைக்க , அதில் தான் ஒட்டு மொத்த கதையும் ஒன்றன்பின் ஒன்றாக நகர்கிறது. சைக்கோ கொலைகாரன் பிடிபட்டனா? ,எதனால் அவன் பெண்களை கடத்தினான் என்பது தான் கிளைமாக்ஸ் . இதற்கு நடுவே நயன்தாராவுக்கும் அஜ்மலுக்கும் நடக்கும் சேசிங் மற்றும் அட்டாக் தான் பார்வையாளர்களை படபடக்க செய்யும் . நயன்தாரா ,அஜ்மல் , சரண் ,மணிகண்டன் நான்கு பேர் மட்டுமே மிக முக்கியமான கதாபாத்திரங்கள் என்று தோன்றினாலும் மிக மிக முக்கியமான இன்னொரு கதாபாத்திரமாக துர்கா (நயன்தாரா) வீட்டில் செல்லமாக வளரும் நாய் மிகவும் எமோஷணலாக ஒரு கட்டத்தில் நம் மனதை நெகிழ வைக்கும் .

  அசாத்திய திறமைகளை

  அசாத்திய திறமைகளை

  பார்வையற்ற பெண்ணாக நயன்தாராவின் நடை, உடை மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு அனைத்தும் பல காட்சிகளில் தனது அசாத்திய திறமைகளை அசால்டாக வெளிப்படுத்தியுள்ளார் நயன். இந்த கதையை தேர்ந்து எடுத்து தனக்கு எப்படி எல்லாம் ஸ்கோர் செய்ய முடியுமோ அதை அத்தனையும் சரியாக செய்து தனது நெற்றிக்கனை வைத்து மனதில் இடம் பிடிக்கிறார் . "ஸ்டாண்ட் அலோன்" என்று சொல்ல கூடிய கதாபாத்திரம் கொண்ட இந்த கதையை செலக்ட் செய்தது நயன்தாராவின் சாமர்த்தியம் .

  அழுத்தம் திருத்தமாக

  அழுத்தம் திருத்தமாக

  படத்தின் மிகப்பெரிய பலம் ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு. இரவு பகல் மற்றும் எந்த சிட்டிவேஷனாக இருந்தாலும் அதை அழுத்தம் திருத்தமாக தனது கேமரா ஜாலங்கள் மூலம் கிரைம் திரில்லருக்கு ஏற்றவாறு பயன்படுத்தி காட்சிகளை அற்புதமாக மாற்றியுள்ளார்.வில்லன் பயன்படுத்திய கார் , துரத்திக் கொண்டே இருக்கும் அஜ்மலின் மனநிலை, குற்றவாளியை கண்டுபிடித்தாக வேண்டும் என்கின்ற நயன்தாராவின் வெறி, பார்வையற்ற பெண்ணாக புத்திக்கூர்மையுடன் செயல் பட்ட பல விஷயங்கள் படம் முடிந்த பின்னும் நம் மனதில் வந்து வந்து போகும். பல கிளோஸ் அப்ஸ் மற்றும் மூவிங் ஷாட்ஸ் கேமரா அங்கிள்ஸ் பாராட்டத்தக்கது .

  காட்சிகள் குறைத்திருந்தால்

  காட்சிகள் குறைத்திருந்தால்

  இயக்குனர் மிலன்ட் முதல் பாதியை அப்படியே blind படத்தில் வந்த காட்சிகளை எதுவும் மாற்றாமல் மாக்ஸிமம் கொடுத்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியில் பல காட்சிகளை இணைத்து படத்தின் நீளத்தை கொஞ்சம் அதிகப் படுத்தி இருக்கிறார். படம் நீளமாக சென்றுகொண்டே இருக்கிறது என்பதுதான் படத்தின் ஒரு மிகப்பெரிய மைனஸ். இன்னும் கொஞ்சம் காட்சிகள் குறைத்திருந்தால் சுவாரசியங்கள் கூடியிருக்கும் என்று பல ரசிகர்கள் சொல்லிய வண்ணம் உள்ளார்கள் . இரத்த வெறி , கொலை என்று பல காட்சிகள் இருப்பதினால் கண்டிப்பாக குழந்தைகளை தவிர்த்து பார்க்க வேண்டிய படம் . கொரியன் படமான blind படத்தை ஒப்பிட்டு பார்க்காமல் தமிழ் படமாக மட்டுமே பார்த்தால் கண்டிப்பாக நெற்றிக்கண் பலர் நெற்றியில் gun வைத்த பீல் கிடைக்கும் . ஆனால் மற்ற கிரைம் படங்களுடன் ஒப்பிட்டு கிரைம் திரில்லர் பார்க்கும் ரசிகர்கள் இதை ஒரு ஆவெரேஜ் படமாக தான் பார்ப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை .

  பிளான் செய்த விதம்

  பிளான் செய்த விதம்

  ரௌடி பிச்சர்ஸ் என்ற பேனரில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் இந்த சுதந்திர தினத்தை டார்கெட் செய்து ஹாட்ஸ்டார் ஓ.டி .டி மூலம் இன்று வெளியீடு என்று பிளான் செய்த விதம் பாராட்டத்தக்கது.இவர்கள் எடுத்த இந்த முதல் முயற்சி வெற்றி அடைந்ததை மனதில் கொண்டு மேலும் பல வித்யாசமான படங்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பார்கள் என்று சினிமா வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள் .

  English summary
  snippet : "netrikan" the most expected movie from nayanthaara released today in hotstar .since she is been celebrated as lady superstar of south indian cinemas and huge fan following for her movies many multiple comments and different appreciations followed for this movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X