NEEK X Review: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வொர்த்தா? இல்லையா? ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் பல வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார். அதன் பின்னர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராக மாறினார். இந்நிலையில், தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்த முடிவு செய்த தனுஷ் அந்த படத்தையும் தானே இயக்கியுள்ளார்.

பவிஷுக்கு துணையாக மலையாள நடிகர்களை அதிகம் போட்டு நடிக்க வைத்துள்ள படம் தான் இந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று இரவு திரையிடப்பட்ட நிலையில், கீர்த்தி சுரேஷ், அதிதி ஷங்கர் என ஏகப்பட்ட பிரபலங்கள் படத்தை பார்த்துள்ளனர். ப்ரீமியர் ஷோவில் படம் பார்த்தவர்களின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

கீர்த்தி சுரேஷ் விமர்சனம்: லைட் ஹார்ட்டடாக ஒரு அழகான காதல் படத்தை தனது மிடாஸ் டச்சுடன் கொடுத்திருக்கிறார் தனுஷ் சார். பவிஷ் உன்னை பார்க்கும் போதும், நீ சிரிக்கும் போதும் அப்படியே தனுஷ் சாரை பார்ப்பதை போலவே உள்ளது. மேத்யூ தாமஸின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அனிகா ரொம்ப க்யூட்டாக இருக்கீங்க, ரபியா ரொம்ப லவ்லி, பிரியா வாரியர் நீ எப்பவும் போல அழகு தான் செல்லம் என படத்தில் நடித்தவர்களையும் பாராட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ். நேற்று நடைபெற்ற ப்ரீமியருக்கு கீர்த்தி சுரேஷ் வந்து படம் பார்த்த காட்சிகள் தனியாக டிரெண்டாகி வருகின்றன.

தனுஷ் இயக்கத்தில் ஹாட்ரிக்: ப. பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து இயக்கத்தில் தனுஷ் ஹாட்ரிக் அடித்துள்ளார். இளைஞர்கள் பட்டாளத்துடன் படம் வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் பார்க்கவும் ரசிக்கவும் க்யூட்டாக உள்ளது. பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், ரபியா நல்லா நடிச்சிருக்காங்க என இந்த நெட்டிசன் 3.5 ரேட்டிங் கொடுத்து பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

நீக் பார்த்த அஸ்வின்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ப்ரீமியர் ஷோவில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வந்து படம் பார்த்த நிலையில், அவருடன் ரசிகர் ஒருவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்கள் தனுஷின் படத்தை புரமோட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாலியா வாங்க ஜாலியா போங்க: சாதிய பிரச்சனைகளோ, வன்முறை காட்சிகளோ இல்லாமல் தமிழில் ஒரு பிரேமலு படம் போன்ற முயற்சியில் ஜாலியாக ஒரு படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். ஜாலியா வாங்க ஜாலியா போங்க என தனுஷ் சொல்வதையே தான் நாங்களும் சொல்கிறோம். படம் ரொம்பவே க்யூட்டாகவும் ஜாலியாகவும் இருக்கு என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ப்ரீமியர் ஷோ என்றாலே புகழ்பாடுவது இருக்கத்தான் செய்யும் என்றும் 9 மணிக்கு மேல ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டினால் தான் படம் ஹிட் அடிக்கும் என்பது தான் நிதர்சனம்.



Click it and Unblock the Notifications











