Nizhal Review: நிழல் விமர்சனம்.. பிக் பாஸ் ஜனனியின் ஆக்‌ஷன் அவதாரம் எப்படி இருக்கு?

Rating:
3.0/5
Star Cast: ஜனனி, விசாகன்
Director: ஏ.கே. குமார்

சென்னை: ஏகே குமார் இயக்கத்தில் பிக் பாஸ் ஜனனி, விசாகன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நிழல்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் ஜூன் 12ம் தேதி வெளியாகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஜனனி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் சாண்டி உடன் சூப்பரான காட்சியில் நடித்து அசத்தினார்.

சமீபத்தில், வெளியான சூர்யாவின் கருப்பு திரைப்படத்திலும் அதே சீனை சூர்யா, சாண்டி உடன் ரீக்ரியேட் செய்திருந்தார். இந்நிலையில், அவர் லீடு ரோலில் நடித்துள்ள உமன் சென்ட்ரிக் படமாக இந்த நிழல் உருவாகியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Nizhal Review in Tamil  Bigg Boss Janany done an action avatar in this movie

சில காமக் கொடூரர்களை தேடிச் சென்று பழிவாங்கும் ரம்யாவின் நோக்கம் என்ன? யாருக்காக இந்தப் போராட்டம்? அவர் சந்திக்கும் தடைகள் என்ன? - இந்தக் கேள்விகளுக்கான விடைகளை விறுவிறுப்பான திரைக்கதையில் கொடுத்துள்ளார் இயக்குநர் ஏ.கே. குமார்.

நிழல் கதை: பிக்பாஸ் ஜனனி இந்தப் படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிப்படையாக அமைதியான மற்றும் மென்மையான தோற்றத்துடன் காணப்படும் அவர், அநீதியை எதிர்கொள்ளும் தருணங்களில் வெளிப்படுத்தும் கோபமும் ஆவேசமும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. தன் சகோதரிக்கு நேரும் துயரங்களால் மனம் உடைவதிலும், எதிர்பாராத பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதிலும் உணர்வுகளை நம்பகமாக வெளிப்படுத்தியுள்ளார். காதல் காட்சிகளிலும் இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

ஜனனியின் காதலனாக நடித்துள்ள விஸாகன், காவல்துறை உயர் அதிகாரியாக களமிறங்குகிறார். சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிக்க முயலும் குற்றவாளிகளை தனது பாணியில் எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக அவர் கவனம் பெறுகிறார். அதிரடி காட்சிகளுடன் காதல் தருணங்களிலும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நண்பராக வரும் திவ்யா கிருஷ்ணன், அசம்பாவிதங்களையும் குற்றச் சம்பவங்களையும் கண்டு பதற்றமடையும் காட்சிகளில் சிறப்பாகத் திகழ்கிறார்.

Nizhal Review in Tamil  Bigg Boss Janany done an action avatar in this movie

படம் எப்படி இருக்கு?: தவறான பாதையில் செல்லும் மகனுக்கு ஆதரவாக நிற்கும் தந்தை வேடத்தில் சிவன் சீனிவாசன் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்மறை கதாபாத்திரங்களில் வரும் நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளனர். வழக்கறிஞராக வரும் கௌசிக், நீதிமன்றக் காட்சிகளில் இயல்பாகப் பொருந்துகிறார். ரமேஷ் கண்ணா, சபீதா ஆனந்த், அபிஷேக் உள்ளிட்ட பரிச்சயமான முகங்களும் சமூக வலைதளப் பிரபலங்களும் தங்களுக்கான இடத்தைப் பூர்த்தி செய்துள்ளனர்.

அபுபக்கரின் இசையில் இடம்பெறும் 'அடியே அழகே', 'ஆடை கிழியும் சத்தம்' போன்ற பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் பரபரப்பை உயர்த்த உதவுகிறது. மோகன்குமாரின் ஒளிப்பதிவு வீட்டு சூழல், மருத்துவமனை மற்றும் இரவுக் காட்சிகளை இயல்பாகவும் தெளிவாகவும் பதிவு செய்துள்ளது.

Nizhal Review in Tamil  Bigg Boss Janany done an action avatar in this movie

பிளஸ் மற்றும் மைனஸ்: 104 நிமிடங்கள் மட்டுமே கொண்ட படத்தின் நீளம், எடிட்டர் தினேஷின் நேர்த்தியான பணியை எடுத்துக்காட்டுகிறது. தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்து, கதையின் வேகத்தை இறுதிவரை தக்கவைத்திருப்பது படத்தின் பலமாக அமைந்துள்ளது. குறைந்த பட்ஜெட் மற்றும் பெரிதும் பரீட்சையமில்லாத நடிகர்களின் நடிப்பு சில இடங்களில் நெருடலை தருகிறது.

ஆனாலும், நிர்பயா மற்றும் பொள்ளாச்சி போன்ற உண்மைச் சம்பவங்களை நினைவூட்டும் வகையிலான இந்தக் கதைக்களம், சமூகத்தில் நிலவும் சில கசப்பான உண்மைகளை வெளிச்சமிடுகிறது. 'சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை' என்ற கருத்தை முன்வைக்கும் 'நிழல்', பரபரப்பும் பதட்டமும் நிறைந்த திரில்லர் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு திருப்திகரமான அனுபவத்தை வழங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X