Nooru Sami First Review - நூறு சாமி முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்காம் தெரியுமா?

சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் நூறு சாமி திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே அவர்கள் இணைந்த பிச்சைக்காரன் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. எனவே இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் நூறு சாமி திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது.

சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து அவர் இசையமைத்த டிஷ்யூம் உள்ளிட்ட பட பாடல்கள் எல்லாம் மெகா ஹிட்டடித்தன. அப்படிப்பட்ட சூழலில் அவர் இசையமைத்த நாக்கமுக்க, ஆத்திச்சுடி பாடல்கள் உச்சக்கட்ட வைரலாகின. அதனையடுத்து தொடர்ந்து படங்கள் புக்காகி அவரை கோலிவுட்டின் டாப் 10 இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.

Nooru Sami First Review  H Vinoth Calls Vijay Antony   s Film One of the Best of the Year
Photo Credit:

நடிகராக விஜய் ஆண்டனி: தொடர்ச்சியாக இசையமைப்பாளர் என்ற முறையில் பிஸியாக இருந்த அவர் நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த நம்பிக்கையில் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவற்றில் சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் மட்டுமே ஹிட்டடித்தன. பிச்சைக்காரன் திரைப்படத்தை சசி இயக்கியிருந்தார்.

Also Read
அக்கா தேவயானி திருமணம்.. தாங்கவே முடியவில்லை.. பல வருடங்கள் கழித்து போட்டுடைத்த தம்பி நகுல்
அக்கா தேவயானி திருமணம்.. தாங்கவே முடியவில்லை.. பல வருடங்கள் கழித்து போட்டுடைத்த தம்பி நகுல்

மீண்டும் சசியுடன்: இப்போது அவர் மீண்டும் சசியுடன் இணைந்திருக்கிறார். அந்தப் படத்துக்கு நூறு சாமி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருடன் ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே விஜய் ஆண்டனி - சசி இணைந்த பிச்சைக்காரன் மெகா ஹிட்டடித்திருப்பதால் இதன் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வரும் 19ஆம் தேதி இந்தப் படமானது ரிலீஸாகவிருக்கிறது.

இன்று ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்: படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, 'வசந்த், மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், ஹெச்.வினோத், பா.இரஞ்சித், த்ருஐ, கார்த்திக் சுப்புராஜ், மடோன் அஷ்வின், ஹலிதா ஷமீம், சரண், வர்ஷா, ராஜுமுருகன், சி.வி.குமார், சி.எஸ். அமுதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

வினோத்தின் விமர்சனம்: இந்நிலையில் ஹெச்.வினோத் நூறு சாமி படம் குறித்து குறிப்பிடுகையில், "நான் இப்போதுதான் நூறு சாமி திரைப்படத்தை பார்த்தேன். அந்தப் படம் உண்மையிலேயே மிக மிக நன்றாக இருந்தது. இந்த ஆண்டின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். கட்டாயம் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம். அற்புதமாகவும், பிரமாதமாகவும் இருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X