Odela 2 X Review: ஒடேலா 2 ட்விட்டர் விமர்சனம்.. அரண்மனை 4 போல தமன்னாவுக்கு ஹிட்டா.. இல்லை சொதப்பலா?

ஹைதராபாத்: அசோக் தேஜா இயக்கத்தில் பான் இந்தியா படமாக இன்று தமன்னா நடித்த ஓடேலா 2 திரைப்படம் வெளியானது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படம் எப்படி இருக்கு என ட்விட்டர் வாசிகள் தங்கள் விமர்சனத்தை கொடுத்துள்ளனர்.

கடைசியாக தமன்னாவுக்கு கடந்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கடந்த சம்மரில் வெளியான அந்த படம் 100 கோடி வரை வசூல் ஈட்டியது. மேலும், இந்தியில் 700 கோடி வசூல் செய்த Stree 2 படத்திலும் தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Odela 2 X Review in Tamil  Tamannah Bhatia movie getting mixed response from fans

இந்நிலையில், இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளியாகி உள்ள பக்தி படமாக ஓடேலா வெளியான நிலையில், இந்த படம் வொர்த்தா இல்லையா? என ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஓடேலா 2 விமர்சனம்: அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா, ஹீபா பாட்டேல், வசிஷ்டா, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான டிரைலரை பார்த்த ரசிகர்கள் கோமியத்தை விற்றுக் கூட பிழைக்கலாம். மாடுகளை கொல்ல வேண்டாம் என தமன்னா பேசிய வசனத்தை ட்ரோல் செய்தனர். ஆனால், படத்தில் இடம்பெற்ற அமானுஷ்ய காட்சிகளின் விஎஃப்எக்ஸ் தரமாக உள்ளதாக சொன்ன நிலையில், படத்தை பார்த்த ரசிகர்களும் அதை பாராட்டி வருகின்றனர்.

அருந்ததி பட காப்பி: ஓடேலா 2 அருந்ததி படத்தின் சீப்பான காப்பி. முதல் 15 நிமிடங்கள் மட்டுமே படத்தில் சிறப்பான காட்சிகள் உள்ளன. மற்றபடி அருந்ததி படத்தை மீண்டும் பார்த்தது போன்ற உணர்வையே இந்த படம் கொடுத்துள்ளது என இந்த நெட்டிசன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஓடேலா 2வுக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பெருசா ஒன்னுமில்லை: தமன்னாவின் ஓடேலா 2 திரைப்படம் முதல் பாதி ஓகே ரகம். ஆனால், 2ம் பாதி அப்படியே ஃபிளாட்டாக செல்கிறது. எந்தவொரு ஹை மொமண்ட்ஸும் படத்தில் இல்லை. அஜனீஷ் லோக்நாத் இசை மட்டுமே இந்த படத்திற்கு பெரிய பலம். மற்றபடி சொல்லிக் கொள்ளும் படி எதுவும் இல்லை. இந்த படத்தை பெட்டர் அவாய்டு பண்ணிவிடலாம் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

2.30 மணி நேரம் வேஸ்ட்: ஒரு டிக்கெட் மற்றும் 2.30 மணி நேரம் வேஸ்ட். இந்த படத்துக்கு போய் வேஸ்ட் செஞ்சிடாதீங்க மக்களே என இந்த நெட்டிசனும் படத்தை கழுவி ஊற்றியுள்ளார். தமன்னாவுக்கு ஓடேலா 2 திரைப்படம் பிரேக்கப்புக்கு பிறகு இன்னொரு பிரேக்கப்பாக மாறிவிட்டது என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமன்னா நடிப்பு தாறுமாறு: நடிகை தமன்னாவின் ஓடேலா 2 படம் முதல் பாதி அட்டகாசமாக உள்ளதாக இந்த ரசிகர் தெரிவித்துள்ளார். இடைவேளை காட்சி அட்டகாசம். இரண்டாம் பாதி தான் கொஞ்சம் ஸ்லோ டவுன் ஆகிவிட்டது. கடைசியில் கிளைமேக்ஸில் தமன்னாவின் நடிப்பு தாறுமாறாக உள்ளது என இந்த ரசிகர் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார். இந்தி பெல்ட்டில் இந்த படம் பிக்கப் ஆகிவிட்டால் வசூல் வேட்டை நடத்தும். இல்லையென்றால் ஃபிளாப் ஆகிவிடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X