For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஓ மை கடவுளே விமர்சனம்: தோழியை திருமணம் செய்தால் இவ்வளவு பிரச்னை இருக்கா, 'ஓ மை கடவுளே'

  By
  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள்: அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி

  இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து

  தோழியை காதலித்து திருமணம் செய்யும் ஹீரோவுக்கு வெறுக்கிறது வாழ்க்கை. அவருக்கு இன்னொரு சான்ஸ் கிடைத்தால் என்ன என்பதுதான் ஓ மை கடவுளே!

  ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் | ASHOK SELVAN SPEECH | FILMIBEAT TAMIL

  அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷாரா மூவரும் பள்ளிக்காலத்து தோழர்கள். படிப்பதில் இருந்து பப்புக்கு போவதுவரை சேர்ந்துதான் செல்வார்கள். திடீரென ரித்திகாவுக்கு மாப்பிள்ளை பார்த்துவிட, முகம் தெரியாத ஒருவரை கல்யாணம் செய்வதை விட, தெரிந்த நண்பனை திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்து அசோக்கிடம் கேட்க, மறுக்க எதுவும் இல்லை என்று ஓ.கே. சொல்கிறார் அசோக் செல்வன்.

  விவாகரத்து

  விவாகரத்து

  பிறகு நடக்கிறது திருமணம். தோழியை ரொமான்டிக்காகப் பார்க்க முடியவில்லை அவருக்கு. சின்ன சின்ன செல்ல சண்டைகள் பிரச்னையாக, இடையில் வருகிறார் அசோக்கின் ஸ்கூல் சீனியர் வாணி போஜன். சந்தேகம் அதிகமாக, கடைசியில் விவாகரத்துக்குப் போகிறார்கள் அசோக்கும் ரித்திகாவும்.

  ஆண்டவன் என்ட்ரி

  ஆண்டவன் என்ட்ரி

  இதற்கெல்லாம் காரணம் என் தலைவிதியை இப்படி எழுதிய ஆண்டவன் தான் என்று அசோக் சொல்ல, அந்த ஆண்டவன் என்ட்ரியாகிறார் விஜய் சேதுபதியாக. முதல் பாதியை வாழ்க்கையை அழித்துவிட்டு, அசோக் செல்வனுக்கு இன்னொரு ஆப்ஷன் கொடுக்கிறார் கடவுள். பிறகு என்ன நடக்கிறது என்பதை காமெடி, சென்டிமென்ட், ரொமான்ஸ் கலந்து இதுதாம்பா வாழ்க்கை என்கிறார்கள்.

  நூடுல்ஸ் மண்டை

  நூடுல்ஸ் மண்டை

  படத்தில் சினிமாத்தனங்கள் அதிகம் இருந்தாலும் ஒரு ரொமான்டிக் படத்தை, எவ்வளவு சுவாரஸ்யமாக தர முடியுமோ, அவ்வளவு தந்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அதற்காகவே அவரை பாராட்டலாம். ரித்திகாவை நூடுல்ஸ் மண்டை என்று கிண்டலடித்துக் கொண்டே இருப்பது, தோழி மனைவியானதும் முத்தம் கொடுக்க முடியாமல் சிரிப்பது, மாமனாரின் நிறுவனத்தில் 'உட்கார்ந்து' வேலை பார்க்கும்போது எரிச்சலடைவது, விவாகரத்து, பள்ளி சீனியர் வாணி போஜனுடன் காதல் ஆசையில் அலைவது என அசோக் செல்வன் நடிப்பில், அத்தனை ஆஹா. தனக்கான கதையை சரியாகத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் அசோக்.

  மெச்சூர்ட் நடிப்பு

  மெச்சூர்ட் நடிப்பு

  ரித்திகா சிங் தோழியாகவும் மனைவியாகவும் தன் மெச்சூர்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஹீரோவின் அருகில் இருந்து சிரிக்கும்போதும், கணவனை இன்னொருத்தி கட்டிப்பிடிக்கும்போது எரிச்சலடையும்போதும், பிறகு கோபத்தில் ஆவேசமாகும் போதும் எக்ஸ்பிரஷன்களில் இயல்பை காட்டி ரசிக்க வைக்கிறார்.

  விஜய் சேதுபதி

  விஜய் சேதுபதி

  நண்பராக வரும் ஷா ரா, ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் வெறுக்க வைக்கிறார். கிரீடம், நகைகள் ஏதுமற்ற மாடர்ன் கடவுளாக விஜய் சேதுபதி. அவருக்கு அசிஸ்டென்டாக, அதாவது இன்னொரு கடவுளாக ரமேஷ் திலக். இருவரும்தான் கதை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள் சுவாரஸ்யமாக.

  சென்டிமென்ட்

  சென்டிமென்ட்

  ரித்திகாவின் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், தான் எப்படி இந்த கம்பெனியை ஆரம்பித்தேன் என்பதற்கு சொல்லும் காரணம், சென்டிமென்ட்டாக இருக்கிறது. வாணி போஜன் இரண்டாவது ஹீரோயின் மாதிரிதான். அவருக்கு சினிமா கனவும் அந்த காதலும் ரசனை. ஆனால், சோகமாகவே படம் முழுவதும் அவர் வருவது ஏனோ?

  தெரியாதா

  தெரியாதா

  விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு கதையோடு நம்மை பயணிக்க வைக்கிறது. உறுத்தல் இல்லாத லியோன் ஜேம்ஸின் பின்னணி இசை, படத்துக்கு பலம். பாடல்கள் மனதில் தங்கவில்லை. அடுத்த இரண்டரை நிமிடத்தில் இதெல்லாம் நடக்கும் என்று லிஸ்ட் போடுகிற கடவுளுக்கு, இதற்கு முன் ஹீரோ வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியாதா?

  சுவாரஸ்யத்தில்

  சுவாரஸ்யத்தில்

  முதல் பாதியில் ரித்திகாவை வெறுக்கும் அசோக், இரண்டாம் பாதியில் அவர் மீது காதல் கொள்வதற்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக வைத்திருக்க வேண்டாமா? என்பது போன்ற சில லாஜிக் தவறுகள் இருந்தாலும் கதையின் சுவாரஸ்யத்தில் குறைகள் மறைந்துவிடுகின்றன. காதலர் தினத்துக்கு இந்த ரொமான்டிக் காமெடி, லவ் கேரண்டி!

  English summary
  Oh my kadavule is a interesting and refreshing rom com
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X