For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யானை நேசர்களே.. நமது வாசகர் எழுதிய காடன் திரைப்பட விமர்சனம் இதோ!

  |

  சென்னை: இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் மற்றும் 18 யானைகள் நடித்துள்ள சமூக அக்கறை கொண்ட காடன் திரைப்படத்தை பார்த்து விட்டு நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர் 'யானை' ஜெகதீஷ் எழுதிய விமர்சனம் இதோ..

  One India Tamil reader Jagadish Ravi review about Kaadan movie!

  யானைகளின் காட்டில் நுழைந்து மனிதர்கள் அட்டகாசம் என்ற ஆகப்பெரிய உண்மையை உரக்கச் சொல்லி தொடங்குகிறது காடன் திரைபடம்.

  One India Tamil reader Jagadish Ravi review about Kaadan movie!

  காடனாக ராணா டகுபதி மனிதரை திரையில் பார்க்கும் பொழுதே ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு , மனிதனை தேடிபிடித்து கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் மனம் ஏங்குகிறது.

  கதை இன்றைய காலகட்டத்தில், எல்லாம் காட்டிலும் நடப்பது தான் யானைகளின் வழித்தடத்தில் ( Elephant Corridor ) இருக்கும் நிலத்தை அபகரித்து பெரும் குடியிருப்புகளை கட்ட விரும்பும் அமைச்சர் என்பது இந்த தேசத்தின் உண்மை சாபக்கேடு. அதற்கு துணையாக பணம் , பதவி மற்றும் அதிகாரம் உள்ளது.

  காடனுக்கு துணையாக இருப்பது எல்லாம் காடும், காட்டின் உயிரிகள், காட்டின் சில மனிதர்கள் மற்றும் ஒன்னுத்துக்கும் உதவாத உண்மை போன்ற, இந்த தேசத்தின் எலைட் மனிதர்களால் எள்ளி நகையாடப்படும் மேற்கூறியவைகளே காடனின் ஆயுதங்கள்..

  இந்தியாவின் வன மனிதர் என்று இந்திய அரசால் உயரிய விருது பெற்ற காடன். காட்டை காக்க யானைகளுக்காக என் உயிரையே கொடுத்து காப்பேன் எனும் போது, அதே அரசு இயந்திரம் காடனை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்து அவருக்கு மனநல சிகிச்சையும் வழங்கும்படி உத்தரவிடுகிறது.

  படம் தொடங்கியதும் யானைகள் பிளிறுகிறது , ஆட்காட்டி காட்டின் குழந்தையாய் சுற்றி வருகிறது. எங்கும் இயற்கை , கூட்டமாய் யானைகளின் வலசை, கும்கியாக ஜில் என படம் முழுக்க காடும் யானைகளும் மட்டும் தான்.

  காட்டில் ஆடம்பர குடியிருப்பு கட்ட ஆசைப்படும் அமைச்சர் அவருக்கு எதிராக காட்டை காக்க போராடும் காட்டின் மனிதர் முடிவு என்ன? இதுவே திரைபடம்.. ஆனால், திரையில் நிறைய இருக்கிறது பார்க்க.. பெரிய திரைகளில் மட்டுமே அந்த பேரின்ப அனுபவத்தை உணர முடியும்.

  யானைகளின் வலசை பாதைகளை அடைத்தால் என்ன நிகழும் என்பதை தெள்ளத் தெளிவாக பேசியிருக்கிறது காடன். வலசை பாதைகளை அடைத்து கான்கிரீட் சுவர் கொண்டு அமைப்பதால் யானைகள் ஊருக்குள் வருவது, யானைகளை விரட்ட அந்த யானை கூட்டத்தின் கண்முன்னே ஒரு யானையை சுட்டுவீழ்த்துவது, காட்டின் மனிதர்கள் மீது அதிகாரத்தை செலுத்துவது என யானைகளின் வாழ்வியலை பேசி இருக்கிறது காடன்.

  காடன் பேச வேண்டியது இன்னமும் நிறையவே இருக்கிறது என்ற போதிலும் யானைகளுக்காக வைக்கப்பட்ட முதல் புள்ளி என்ற வகையில் பிரபுசாலமன் எங்களை போன்ற யானை நேசர்களால் போற்றப்பட வேண்டியவரே!

  படம் தொடங்கும்போது பெரிய பெரிய இயந்திரங்கள் காட்டிற்குள் நுழையும் போது எழுத்தாளர் நக்கீரன் ஐயாவின் காடோடி நினைவிற்கு வருகிறது.

  படத்தில் நம்ம தாத்தா யாருப்பா என்ற கேள்விக்கு , உங்க தாத்தா ஒரு யானை டாக்டர் தம்பி காட்டுல இருக்க நிறைய யானைக்கு வைத்தியம் பாத்தவரு என்ற வசனத்தில் மறைந்த யானை மருத்துவர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தியும் கண்முன் வருகிறார்கள். நிச்சயம் திரையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் தான் காடன்.

  இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தமான ஒன்று தான். காடுகளும் மற்ற உயிரினங்களும் அழிவது மனித அழிவுக்கான பெரிய கதவை திறந்து வைக்கும் என்பதை சுயநல எண்ணம் கொண்ட மனிதர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும். நன்றி!

  English summary
  One India Tamil regular reader Yanai Jagadish Ravi review about Prabhu Solomon’s new movie Kaadan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X