»   »  ப்ப்ப்பா, செம: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ட்விட்டர் விமர்சனம் #ONNPS

ப்ப்ப்பா, செம: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ட்விட்டர் விமர்சனம் #ONNPS

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு நல்ல நாள் பார்த்துச்சொல்றேன் படத்தின் வெளிநாடு வாழ் இந்தியா மக்களின் விமர்சனம்.

சென்னை: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது.

படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கவுதம் கார்த்திக்

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் சூப்பரான பிளாக் காமெடி. திரையுலகின் அடுத்த சாக்லெட் பாய் கவுதம் கார்த்திக். விஜய் சேதுபதி ப்ப்ப்பா செம

சிறப்பு

படம் முழுக்க காமெடியாக உள்ளது...விஜய் சேதுபதி வழக்கம் போன்று வேற லெவல் நடிப்பு..கவுதம் கார்த்திக், ஆறுமுக குமார் அருமை. ஜஸ்டினின் பிஜிஎம், பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது. நிச்சயம் ஹிட். கண்டிப்பாக பார்க்கவும்.

மக்கள் செல்வன்

நல்ல காமெடியுடன் கூடிய கதை. விஜய் சேதுபதி இஸ் பேக். #VJS #VijaySethupathi #MakkalSelvan #OffbeatMannan #RefreshingContentKing

கதை

வித்தியாசமாக முயற்சி செய்துள்ளதாகக் கூறி சில இயக்குனர்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஆறுமுக குமார் தைரியமாக வித்தியாசமாக படத்தை அளித்துள்ளார். ரசித்துக் கொண்டிருக்கிறேன். விஜய் சேதுபதி எப்படி இப்படி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்கிறார் என தெரியவில்லை.

தியேட்டர்

தியேட்டரில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் பார்க்கும் மகிழ்ச்சியை வீடியோ வெளியிட்டு ரசிகர் ஒருவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

English summary
Vijay Sethupathi starrer Oru Nalla Naal Paathu Solren is getting postive reviews from the audience. Vijay Sethupathi is stunning in this laughter riot and Gautham Karthik has made his mark.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil