Oppenheimer Review: அணுகுண்டின் ஓலத்தை இதயத்துக்குள் கடத்த முடியுமா? ஓபன்ஹெய்மர் விமர்சனம் இதோ!

Rating:
4.0/5

நடிகர்கள்: சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர், மேட் டேமன்,

இசை: லுட்விக் கொரான்சன்

இயக்கம்: கிறிஸ்டோபர் நோலன்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜப்பானின் ஹீரோஷிமா மற்றும் நாகஸாகியை உருத்தெரியாமல் அழித்து சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாக காரணமான அணுகுண்டின் தந்தை எனக் கொண்டாடப்பட்ட ஓபன்ஹெய்மருக்கு எதிராக தொடரப்படும் தேசதுரோக வழக்கும் அதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா என்கிற கதையை கருவாக கொண்டு இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் உலக அரசியலையே பேசியுள்ள அற்புதமான படம் தான் இந்த ஓபன்ஹெய்மர்.

சமீபத்தில் வெளியான டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7ம் பாகம் ஏஐ தொழில்நுட்பம் உலகை என்ன செய்யப் போகிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக கொடுத்த நிலையில், தியேட்டருக்கு வந்தவர்களை சேர் போட்டு உட்கார வைத்து இயற்பியல் பாடத்தையும் உலக அரசியலையும் ஆயுதங்களால் நாம் இந்த உலகை எப்படி அழிக்கப் போகிறோம் என்பதை பாடமாக எடுத்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.

Christopher Nolans Oppenheimer Review and hidden details in Tamil

நோலன் இயக்கிய இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனெட் படங்களில் இருந்தது போன்ற ஏகப்பட்ட குழப்பங்களும் ட்விஸ்ட்டுகளும் இந்த படத்தில் இல்லை என்றாலும் அணு ஆயுதத்தின் ஓலத்தை நம் இதயத்துக்குள் கடத்தி விடும் மேஜிக்கை தனக்கே உரிய பாணியில் செய்திருக்கிறார்.

ஓபன்ஹெய்மர் கதை: ஜெர்மனியில் இயற்பியல் படிக்கும் மாணவர் ராபர்ட் ஜே. ஓபன்ஹெய்மர் அணுக்களை பற்றி படித்துக் கொண்டிருக்கும் போது, கம்யூனிச சித்தாந்த கொள்கைகளிலும் ஈடுபடுகிறார். ஹிட்லரின் நாஜி படைகள் உலகை அழித்து விடும் என்றும் அதற்கு சரியான எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதே அவரது பெரிய சிந்தனையாக உள்ளது.

Christopher Nolans Oppenheimer Review and hidden details in Tamil

படிப்பை முடித்து விட்டு அமெரிக்கா திரும்பும் ஓபன்ஹெய்மருக்கு அமெரிக்க அரசாங்கம் அணு ஆயுதத்தை உருவாக்கும் ப்ராஜெக்ட் மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்ற வைக்கிறது. ஹிட்லரின் நாஜி படைகள் உலகை அழிக்கும் முன்பாகவும், ரஷ்ய விஞ்ஞானிகள் பெரிய அணுகுண்டை தயாரித்து விடுவதற்கு முன்னதாகவும் நாமும் தயார் நிலையில், இருக்க வேண்டும் என அணு ஆயுதத்தை 3 ஆண்டுகளில் தயரிக்க தனது குழுவுடன் தீவிரம் காட்டுகிறார் ஓபன்ஹெய்மர்.

அந்த அணுகுண்டு சோதனை வெற்றியடைந்த நிலையில், அவசர அவசரமாக அவை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இதை அறிந்து மனதளவில் உடைந்து போய் கிடக்கும் ஓபன்ஹெய்மருக்கு எதிராக ஈகோவால் தூண்டப்படும் லெவிஸ் ஸ்ட்ராஸ், நிழலாக இருந்து ஓபன்ஹெய்மருக்கு எதிராக பின்னும் சதி வலை காரணமாக எதிரி நாட்டுக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் வித்தையை விற்று விட்டாரா என்கிற தேசதுரோக வழக்கு நடைபெறுகிறது. இதிலிருந்து அவர் மீண்டாரா? அல்லது என்ன ஆனார் என்பது தான் இந்த படத்தின் கதை.

Christopher Nolans Oppenheimer Review and hidden details in Tamil

ஆஸ்கருக்கான நடிப்பு: ஆக்‌ஷன் காட்சிகளும் சிஜி ஃபயர் கிராக்கர்கள் வொர்க் கொண்ட படமாக எல்லாம் இந்த படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கவில்லை. மனிதத்தையும் மனிதர்களின் மனங்களில் குடிகொண்டிருக்கும் ஆதிக்க வெறியையும் அதனால் ஏற்படும் போர்களும், அணு ஆயுத உற்பத்திக்கு போட்டிப் போடும் அரசியல் தலைவர்களின் சூழ்ச்சிகளூம் சின்ன ஈகோவால் பெரிய மனிதர்களையே துவம்சம் ஆக்கும் மனோ நிலையை அப்பட்டமாக திரையில் கடத்தியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.

அதற்கு உயிர் கொடுக்கும் விதமாக ஓபன்ஹெய்மராகவே வாழ்ந்திருக்கிறார் சிலியன் மர்பி என்று தான் சொல்ல வேண்டும். அந்த சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், உணர்ச்சிகள் மூளைக்குள் பொங்கிக் கொண்டே இருக்க முகத்தில் அதை மறைத்துக் கொண்டு எப்போதுமே அமைதியான நிலையே இல்லாமல் இருக்கும் ஒரு அறிவியல் விஞ்ஞானியின் பயோபிக்கில் நடிப்பது அவ்வளவு சுலபமில்லை. ஆனால், அதனை தனது நடிப்பால் சாதித்துக் காட்டியிருக்கிறார் சிலியன் மர்பி.

அவருக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்து சிக்க வைக்கும் ஸ்ட்ராஸ் கதாபாத்திரத்தில் அயன்மேனாக அசத்திய ராபர்ட் டவுனி ஜூனியர் நெகட்டிவ் ஷேடில் ஒட்டுமொத்த வில்லத்தனத்தையும் காட்டியிருக்கிறார்.

Christopher Nolans Oppenheimer Review and hidden details in Tamil

மான்ஹாட்டன் அணுகுண்டு ப்ராஜெக்ட்டில் ஓபன்ஹெய்மரை சிக்க வைத்து, அவருக்கு தேவையான அத்தனை உதவிகளையும் நாட்டின் ராணுவ தேவைக்காக செய்யும் ஜெனரல் அதிகாரியாக மேட் டேமன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ராபர்ட் ஹெய்மரின் மனைவிகளாக வரும் ஃப்ளோரென்ஸ் பக், எமிலி ப்ளண்ட் நடிப்பும் பிரமாதம். சிலியன் மர்பி மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் இருவருக்கும் ஆஸ்கர் விருது கிடைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

பிளஸ்: படத்திற்கு போனதே அந்த சிஜி இல்லாத ஒரிஜினல் அணுகுண்டு வெடிப்பு காட்சியை காணத்தான். அந்த காட்சி வரும் போது அங்கிருப்பவர்களை போல தியேட்டரில் இருப்பவர்களையும் பதைபதைக்க வைக்கிறது. அதே நேரம் என்னடா பயங்கர வெடிச்சத்தத்துடன் காட்சியில்லாமல் வெறும் வெடித்த விஷுவல் மட்டுமே வருகிறது என்று பார்த்தால், அங்கேயும் அறிவியலை உட்புகுத்தி சவுண்ட் டிசைனரை வேலை வாங்கி இருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். ஒளி முந்திக் கொண்டு வரும், ஒலி அதன் பின்னர் தான் வரும் என்பதை திரையில் கடத்தியிருக்கும் அந்த ஒரு காட்சிக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

அதே போல அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் மற்றும் ஓபன்ஹெய்மருடனான சந்திப்பு நடக்கிறது. ஹீரோஷிமாவில் குண்டு வெடிப்பு சக்சஸ் என அதிபர் சொல்ல ஹீரோஷிமா, நாகசாகி என்கிறார் ஓபன்ஹெய்மர். அப்போதே அதிபர் கடுப்பாகிறார். அந்த நேரத்திலும், தனது மனதில் இருக்கும் எண்ணத்தை சொல்ல இதை விட்டால் வேறு தருணம் கிடைக்காது என நினைக்கும் ஓபன்ஹெய்மர் அணு ஆயுத ஒப்பந்தத்தை உலக நாடுகளுடன் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்கிறார். மேலும், தனது கைகள் முழுவதும் ரத்தக்கறை படிந்து இருக்கிறது என ஓபன்ஹெய்மர் சொல்ல, நீ டிசைன் செஞ்சவன் தானே, பாம் போட்டவன் நான் தானே, உன்னையா திட்டுவாங்க மக்கள், என்னைத்தானே திட்டுவாங்கன்னு சொல்லிட்டு இனிமேல் இந்த கிரைபேபியை என் முன் வரவிடாமல் பார்த்துக்கோங்க என சொல்லும் காட்சியில் உள்ள அரசியலை எல்லாம் பேசியதற்கே கிறிஸ்டோபர் நோலனை கொண்டாடலாம்.

Christopher Nolans Oppenheimer Review and hidden details in Tamil

ஈஸ்டர் எக்காக ஐன்ஸ்டீன் மற்றும் ஓபன்ஹெய்மர் சந்திக்கும் காட்சியும், ஓபன்ஹெய்மருக்கு தேவையான ஐடியாவை ஐன்ஸ்டீன் உளறிவிடும் அந்த கிளைமேக்ஸ் காட்சியும் அதனால் தான் அவர் கடுப்பாகி செல்கிறார் என்பது ரிவீல் ஆகும் இடங்கள் எல்லாமே ரியல் கூஸ்பம்ப்ஸ்.

மைனஸ்: இந்த படம் முதலில் என்டர்டெயின்மென்ட்டுக்கான படமில்லை என்பதே பெரிய மைனஸாக மாறிவிடும் அபாயம் உள்ளது. முதல் பாதி முழுக்க வசனங்களாகவும் கருப்பு வெள்ளை, கலர் என காட்சிகள் மாறி மாறி நான் லீனியர் எடிட்டிங்கில் சராசரி ஆடியன்ஸை ஒரு கட்டத்தில் தூங்கவே வைத்து விடும் நிலை உள்ளது. படம் பார்க்க வந்தோமா அல்லது பிசிக்ஸ் கிளாஸுக்கு வந்தோமா என்கிற எண்ணம் கடைசி வரை இருப்பது படத்தின் மைனஸாக பார்க்கப்படுகிறது.

மசாலா இல்லாமல் நல்ல கலைப்படைப்பை விரும்பும் ரசிகர்களுக்கான படமாக இதனை கிறிஸ்டோபர் நோலன் கொடுத்துள்ளார். ராக்கெட்ரி படத்தில் எப்படி மாதவன் நம்பி நாராயணன் ராக்கெட் சயின்ஸ் கண்டுபிடித்தாலும், தேசத்துரோக வழக்கில் சிக்கி சின்னாபின்னமானார் என்கிற அதே போன்ற கதை தான் ஓபன்ஹெய்மருக்கும் நடந்திருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். படுக்கையறையில் வரும் அந்த பகவத் சீனுக்கு சர்ச்சை வெடிக்காமல் இருந்தால் சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X