twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு நல்ல நாள் பார்த்து செல்றேன் - விமர்சனம் #ONNPReview #VijaySethupathy

    By Shankar
    |

    Recommended Video

    ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மக்களின் கருத்து

    Rating:
    2.0/5
    Star Cast: விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹாரிகா
    Director: பி. ஆறுமுககுமார்

    சமீபகாலங்களில் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரே நடிகரான விஜய் சேதுபதியும், எல்லா படங்களிலும் கலந்துகட்டி நடிக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்த படம். விஜய் சேதுபதியின் இந்த ஆண்டு கோட்டா ஓரு நல்ல நாள் பார்த்துதான் ஆரம்பமாகி இருக்கிறது.

    படம் ஒரு ஃபேண்டசி பிளாக் ஹியூமர் என்று டிசைன்களிலும் டீசர்களிலும் சொல்லிவிட்டார்கள். சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் தந்த பிளாக் ஹியூமர் நம்பிக்கையைக் காப்பாற்றியதா ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம்?

    Oru Nalla Naal Paarthu Solren Review

    யாரையும் துன்பப்படுத்தாமல் கொள்ளையடிப்பதையே குலத்தொழிலாக கொண்ட ரகசிய கிராமம் எமசிங்கபுரம். அங்கே எமனாக இருக்கும் விஜய் சேதுபதி, ஒரு கொள்ளை அசைன்மெண்டில் நிஹாரிகாவைப் பார்த்து மனைவி என்று சொல்லி தூக்கி விடுகிறார். விஜய் சேதுபதி தூக்கிய நிஹாரிகா கவுதம் கார்த்திக்கின் காதலி. இந்த குழப்பம் ஏன்? கவுதம் கார்த்திக் தனது காதலியை எமனிடம் இருந்து காப்பாற்றினாரா என்பதுதான் படம்.

    படம் தொடங்கும்போதே அண்டம், பேரண்டம், பால்வழி என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. வாய்ஸ் ஓவரிலேயே அரசியலில் ஈடுபடாமல் கொள்ளையடிப்போம் என்று நக்கலை தொடங்கி கிளாப்ஸ் அள்ளுகிறார்கள். அந்த நக்கல், நையாண்டியை ஆங்காங்கே தூவியும் இருப்பது சிறப்பு.

    எமன் சத்தியம் செய்யும் இடம், ராஷ்ட்ரபதி, ஜட்டியில் ஸ்பைடர்மேன், கல்ச்சுரல்ஸ் என்று படம் நெடுகிலும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றில் சிலதான் கதைக்கு உதவி செய்கின்றன.

    இயக்குநர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் என்பது எமனின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. படம் முழுக்கவே ஓபன்னிங் காட்சிகள்தான் எமனுக்கு. எந்த கெட்டப்பும் விஜய் சேதுபதிக்கு உறுத்தாமல் செய்துவிடுகிறது அவரது அசால்ட்டு பெர்ஃபார்மென்ஸ். இந்த ஆண்டை சிறப்பாக தொடங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.

    இமேஜ் பார்க்காமல் இப்படி ஒரு கேரக்டரில் நடித்ததற்கே கவுதமைப் பாராட்டலாம். ரொமாண்டிக் காமெடியில், தான் யாருடைய வாரிசு என்பதை அழுத்தமாகக் காட்டுகிறார்.

    நிஹாரிகா அழகான புது வரவு. பெரிய ஹீரோக்கள் படங்களில் இடம் பிடிப்பார்.

    படத்தின் காஸ்டிங்கில் பெரிய பலமே விஜய் சேதுபதி அசிஸ்டெண்ட்கள் ரமேஷ் திலக், ராஜ்குமார் மற்றும் கவுதமின் நண்பர் டேனியல்.

    முட்டாள்தனம் செய்து எமனிடம் சாவடி வாங்கிக் கட்டிக்கொள்ளும் முதல் இரண்டு பேரும், எதுவுமே செய்யாமல் கவுதம் மாட்டி விடுவதால் பரிதவிக்கும் டேனியலும் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள்.

    எமசிங்கபுரத்துக்கு ஆர்ட் டைரக்டர் போட்ட உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் டீட்டெய்ல்டாக தெரிகிறது. பாடல்கள் கவர்கின்றன. பின்னணி இசை சில இடங்களில் மட்டும் உறுத்தல்.

    ஃபேண்டஸி என்று முடிவு செய்துவிட்ட பிறகு லாஜிக் பார்க்க வேண்டியதில்லைதான். ஆனால் ஹியூமர் என்று முடிவு செய்த இயக்குநர் இறங்கி அடிக்காமல் பட்டும் படாமலும் சிரிக்க வைத்திருப்பது ஏனோ? கவுதம் கார்த்திக்கின் பின்புலம் முதல் விஜய் சேதுபதி சத்தியத்துக்கு முன்பு எப்படிப்பட்ட ப்ளேபாயாக இருந்தார் என்பது வரை பல விஷயங்கள் மிஸ்ஸிங். சில காமெடி காட்சிகள் நீண்ண்ண்ண்டுகொண்டே போய் சலிப்பையும் ஏற்படுத்துகின்றன.

    இந்தச் சின்னச் சின்ன குறைகளை எல்லாம் மனம் விட்டு சிரிக்க வைத்த காமெடிகள் போக்குகின்றன. ஒரு வித்தியாசமான எண்டெர்டெய்னரை ரசிக்க இந்த நல்ல நாளை பார்த்து ரசிக்கலாம். இந்த ஆண்டின் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்.

    English summary
    Review of Vijay Sethupathy's Oru Nalla Naal Paarthu Solren
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X