For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது பார்சல்

  |
  ROOM போட்டு தரேன் உக்காந்து REVIEW பண்ணுங்க | ஒத்த செருப்பு SIZE -7 | PARTHIEPAN |FILMIBEAT TAMIL

  சென்னை: ஒத்த செருப்பு சைஸ் 7 ஒரு கணவனின் தவிப்பு, தகப்பனின் பாசம், சமுதாயத்தில் ஏற்படும் பல விதமான சிக்கல்கள் அதனால் அவருடன் ஏற்படும் வெறுப்பு என அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு கலவையாக நமக்கு படைத்திருக்கிறார் பார்த்திபன். திரையுலகின் பல பிரபலங்களும் இந்த படத்தினை பார்த்து அவர்களுடைய விமர்சனங்களை தெரிவித்து பாராட்டியுள்ளனர். பார்த்திபனின் 15 ஆண்டு கால கனவு இன்று உயிர்பெற்றுள்ளது. அவர் சினிமா மீது கொண்டுள்ள வெறித்தனமான காதல், எதிர்பார்ப்பு, வெற்றி, தேடல், முனைப்பு, வழிகாட்டல் என இவை அனைத்தும் இந்த ஒரே படம் மூலம் நிறைவேறியுள்ளது.

  இன்று வெளியாகியுள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தினை பிரிவுயூவில் பார்த்த விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன், படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே வரும்படி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தினை அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய் பிளந்து பாராட்டி வருகிறார்கள்.

  குணா படத்தில் கமல், அபிராமி அபிராமி என்று மந்திரமாக சொல்லிக்கொண்டு திரிவதைப்போல், கடந்த சில நாட்களாகவே, தமிழ் சினிமாவைப்பற்றி அறிந்த அனைவருமே, ஒத்த செருப்பு சைஸ் 7, ஒத்த செருப்பு சைஸ் 7 என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்களே, அப்படி அதில் என்னதான் இருக்கிறது.
  +ஒன் மேன் ஷோ என்னும் வசனத்தை நாம் பல இடங்களில் கடந்து வந்திருப்போம். ஆனால் முதல் முறையாக அது நம் தமிழ் சினிமா மூலம் உலகிற்கே அறிமுகப்படுத்திய வினோதமான கலைஞன் பார்த்திபன் ராதாகிருஷ்ணன்.

  மாபெரும் கலைஞன்

  மாபெரும் கலைஞன்

  வசனமே இல்லாமல் நம்மை வசீகரப்படுத்திய மாபெரும் கலைஞன் சார்லி சாப்ளின். அவரையே இவ்வுலகம் வசனத்தோடு படம் வெளியானபோது கேலி செய்தது. அதையும் முறியடித்து வெற்றி நடைபோட்டவர் சார்லி சாப்ளின். அந்த வகையில் தனக்கே உரியதான திறமையை வேறு ஒரு கோணத்தில் படைத்திருக்கிறான் நம்மிடையே இருக்கும் ஒரு மாபெரும் கலைஞன் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

  அற்புதம்

  அற்புதம்

  வணீகரீதியாக மாறிவிட்ட நம் தமிழ் சினிமாவை புதியதோரு கோணத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார் பார்த்திபன். ஒருவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கி அதில் அவர் மட்டுமே நடித்தும் இருக்கிறார். கேட்கும் போதே இது சாத்தியமா என்று நமக்கு தோணலாம். ஆனால் அதை மிக அற்புதமாக கையாண்டு இருக்கிறார்.

  ஒத்த செருப்பு சைஸ் 7 ரிலீஸ்

  ஒத்த செருப்பு சைஸ் 7 ரிலீஸ்

  ஒருவர் மட்டுமே நடித்த சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன ஆனால் அதில் நடிப்பு மட்டுமே ஒருவர், தயாரிப்பு, இயக்கம், கதை, வசனம் இவை அணைத்து வெவ்வேறு மனிதர்கள். எனவே உலகளவில் பெரும் சாதனையை முதலில் நிகழ்த்தியது நம் தமிழன் பார்த்திபன் தான் என்று நாம் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம். இன்று வெளியாகி இந்தியத் திரையுலகத்தையே அண்ணாந்து பார்க்க வைக்க போகிறது ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம். 100 நிமிடம் படத்தில் பார்த்திபனை மட்டுமே நாம் காணவிருக்கிறோம். மற்றவர்களின் குரல்கள் மட்டும் ஒலித்தாலும் திரையில் தெரிவது இவர் மட்டுமே.

  கற்பனை குரல்கள்

  கற்பனை குரல்கள்

  அந்த குரல்கள் பார்வையாளர்களின் கற்பனையை தூண்டி அவர்கள் ஒவ்வொருவரும் அந்த குரல்களுக்கு உருவம் தருகிறார்கள். இந்த முயற்சியானது அவர் தன் மீது கொண்டுள்ள தன்னம்பிக்கையாகவே கவனிக்கப்படுகிறது. அவரின் இந்த புதிய முயற்சி நிச்சயம் தேசிய விருது மட்டும் அல்ல ஆஸ்கார் விருதையும் தட்டி சென்றால் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்காது. எமோஷனிற்கு கலங்காதவர்கள் என்று யாரவது இருக்கமுடியுமா. ஆழமான ஒரு கதையை நம்முள் இறக்கி அந்த கதாபாத்திரத்தில் நம்மை மூழ்கச் செய்து, ஒன்றிப்போக வைக்கிறர். காதல், டூயட், காமெடி, பல கதாபாத்திரங்கள் என இவை அனைத்தையும் ஒற்றை நடிகனால் திரையில் கொண்டு வரமுடியும் என்பதை சாதித்து காட்டியிருக்கிறார்.

  புதுமையான முயற்சி

  புதுமையான முயற்சி

  இந்த புதுமையான முயற்சியை பாராட்டாதவர்கள் யாருமே இல்லை. இந்த இடத்தில் அவருடைய வசனத்திலும் உச்சகட்ட நடிப்பாலும் நம்மை அப்படியே ஆட்டிவைக்கிறார். ஒரு கணவனின் தவிப்பு, தகப்பனின் பாசம், சமுதாயத்தில் ஏற்படும் பல விதமான சிக்கல்கள் அதனால் அவருடன் ஏற்படும் வெறுப்பு என் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு கலவையாக நமக்கு படைத்திருக்கிறார் பார்த்திபன்.

  இசையமைப்பாளர் சத்யா

  இசையமைப்பாளர் சத்யா

  படத்தினை தூக்கி சுமந்து உயிர் தந்திருக்கும் இசையமைப்பாளர் சத்யாவிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த ஒற்றைப் படத்தின் மூலம் தன் தரத்தின் அடுத்த உயரத்தை அடைந்திருந்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா. படத்தில் பணிபுரிந்தது பற்றி இசையமைப்பாளர் சத்யா சொன்னபோது, பல சாதனைகள் புரிந்து, பலரது பாராட்டுக்களையும் பெற்று வரும் இந்தப்படத்தில் பணிபுரிந்ததை நான் மிகுந்த பெருமையாகவும், எனக்கு கிடைத்த கவுரவமாகவும் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

  படத்தின் உயிர் இசை

  படத்தின் உயிர் இசை

  இத்தகைய படத்தில் எனது புதுமையான முயற்சிகளுக்கும், யோசனைகளுக்கும் செவிமடுத்த இயக்குநர் பார்த்திபன் சார் அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு திறமையான திரைக்கதை எழுத்தாளர் உள்ளத்தளவில் ஒரு இசைக்கலைஞனும் கூட, அவர் இசை என்பது ஒரு கருவி அல்ல அது படத்தின் உயிர். படத்தில் உலவும் கதாப்பாத்திரம் போன்றது என்பதை அறிவார்.

  இசைக்கு பாராட்டு

  இசைக்கு பாராட்டு

  உண்மையாய் சொல்வதானால் பார்த்திபன் படத்தை பாடல்கள் மற்றும் இசையே இல்லாமல் ரசிகர்கள் ரசிக்க தயாராய் இருப்பார்கள். அவரது திரைக்கதையும், வசனங்களும் ரசிகர்களை சுவாரஸ்யத்தின் உச்சியில் கட்டி வைத்திருக்கும் தன்மைகொண்டது. தலில் படத்தின் இசையற்ற பதிப்பை நான் பார்த்தபோது பார்த்திபன் சார் பல இடங்களை வசனங்களே இல்லாமல் இசையை நிரப்பிக் கொள்ளும் இடங்களை உருவாக்கி வைத்திருந்தார். எனக்கான தளத்தை உருவாக்கி தந்திருந்தார். இப்போது படத்தினை பார்த்துவிட்டு பின்னணி இசைக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் பார்த்திபன் சாருக்கு உரியது. குளிருது புள்ள எனும் ஒற்றைப் பாடல் மூலம் அனைவரது பாராட்டைப் பெற்ற சந்தோஷ் நாரயணன் அவர்களும் பிரமிப்பை தந்துள்ளார் அவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

  உயிர்பெற்ற கனவு

  உயிர்பெற்ற கனவு

  திரையுலகின் பல பிரபலங்களும் இந்த படத்தினை பார்த்து அவர்களுடைய விமர்சனங்களை தெரிவித்து பாராட்டியுள்ளனர். பார்த்திபனின் 15 ஆண்டு கால கனவு இன்று உயிர்பெற்றுள்ளது. அவர் சினிமா மீது கொண்டுள்ள வெறித்தனமான காதல், எதிர்பார்ப்பு, வெற்றி, தேடல், முனைப்பு, வழிகாட்டல் என இவை அனைத்தும் இந்த ஒரே படம் மூலம் நிறைவேறியுள்ளது.

  ஜாம்பவான்

  ஜாம்பவான்

  ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரையுலகமே இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. பார்த்திபனுக்கு நிகர் அவர் மட்டுமே. யாரும் அவரை நெருங்கவே முடியாது. ஒற்றை செருப்பு மட்டுமே இருக்கிறது. இது யாருடையதாக இருக்கும். இதற்குள் ஒளிந்திருக்கும் பின்னணி என்ன என்று ஒரு புதிரோடு ஆரம்பமாகும் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் யாரை பாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 பார்த்திபனுக்கு மட்டுமே பொருந்தும். வேறு எந்த ஜாம்பவான் நடிகன் போட்டாலும் கடிக்கவே செய்யும்.

  Read more about: parthiban tamil cinema
  English summary
  In this ‘Otha Seruppu Size 7’ film, a husband's hunger, father's affection, various problems in the society, hatred with him, all of this has created a combination of us. Many celebrities of the film have seen the film and praised it.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X