படித்தவுடன் கிழித்துவிடவும்... படிக்கலாமா... கிழிக்கலாமா...! விமர்சனம்

தன்னை ஆவியாக்கியவனை அழிக்கும் வழக்கமான பேய் கதை தான் படித்தவுடன் கிழித்துவிடவும் திரைப்படம்.

Rating:
2.5/5

சென்னை: படித்தவுடன் கிழித்துவிடவும் வித்தியாசமான தலைப்புடன் வந்த படம் வித்தயாசமாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.

படத்தின் ஆரம்ப காட்சியில் கலெக்டராக வரும் பான்பராக் ரவி ஒரு பேக்டரியில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை யார் செய்தது என்ற கேள்வியுடன் படம் தொடங்குகிறது. இதையடுத்து, பிராடு வேலைகள் செய்யும் கூல் சுரேஷும், அவரது நண்பர்களும் அந்த பேக்டரியில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களோடு மேலும் சிலரும் அந்த பேக்டரியில் சிக்கிக்கொள்கிறார்கள். அப்போது தான் தெரிகிறது அந்த பேக்டரியில் நிறைய பேய்கள் இருப்பது. பேய்களிடம் மாட்டிக்கொள்ளும் மனிதர்கள் உயிருடன் வெளியே வந்தார்களா என்பது தான் படம்.

Padhithavudan kiliththuvidavum movie review

பேய் படங்களுக்கு மினிமம் கேரண்டி உண்டு என்பதால், தைரியமாக கதைகளத்தை தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. வழக்கம் போல காமெடி கலந்த பேய் கதை தான் என்றாலும், இந்த படத்தில் வரும் பேய்களின் பிளாஷ் பேக் காட்சிகள் உருக்கம்.

இன்ஷுரன்ஸ் மோசடியை பின்னணியாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். ஒரு தனி மனிதனின் சுயநலத்துக்காக இத்தனை பேரை பலிக்கொடுக்கத் தயங்காத இன்றைய சமூகத்தின் நிலையை பிரதிபலிக்கிறது படம். இதை அப்படி கச்சிதமாக செய்திருக்கிறார் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.எம்.டி.கருணாநிதி. முதல் பாதியில் கூல் சுரஷே் மற்றும் காதல் சரவணனின் காமெடி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு ஆகிய மூன்றும் படத்தை தாங்கிப்பிடிக்க உதவியிருக்கின்றன. பேக்டரி காட்சிகள் எல்லாமே தத்ரூபமாக இருக்கின்றன. ஆனால் பேய்க்காக தமிழ் சினிமா வகுத்திருக்கும் அத்தனை இலக்கணத்தையும் தவறாமல் பயன்படுத்தி இருப்பது உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... சொல்ல வைக்கிறது. ஏன் பாஸ் பேய் எல்லாம் பாவம் இல்லையா... இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் அத வெச்சு செய்வீங்க.

பேய் ரசிகர்கள் நிச்சயம் படித்துவிட்டு கிழிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X