செல்லம்மாள் பத்மா! மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாளாக நடிகை பத்மப்ரியா நடித்துள்ள புதியஇசை ஆல்பம் வெளியாகியுள்ளது.பாரதியின் எண்ணற்ற பாடல்கள் பல திரைப்படங்களில் ஒலித்துள்ளன. ரகுவரன்நடித்த ஏழாவது மனிதன் படத்தின் அத்தனைப் பாடல்களும் பாரதியின்பாடல்கள்தான்.பாரதியின் கதையை பல திரைப்படங்களிலும் சித்தரித்து விட்டனர். பாரதி என்றபெயரில் அவரது வாழ்க்கை வரலாறு முழுமையான படமாகவும் வந்து விட்டது.இப்போது பாரதியின் மனைவி செல்லம்மாவை நாயகியாக்கி ஒரு இசை ஆல்பம்வந்துள்ளது. பாரதியின் கண்ணம்மாவான செல்லம்மாவாக நடித்திருப்பவர்பத்மப்ரியா. பாரதி வேடத்தில் வருபவர் அன்னா சமி.ஆல்பத்தை தயாரித்து, இயக்கியிருப்பவர் ஏ.எல்.சுரேஷ். ஏற்கனவே சில இசைஆல்பங்களை இவர் தயாரித்துள்ளார். தான் தயாரித்திருக்கும் செல்லம்மாள் இசைஆல்பத்திற்கு மனையாள் என்று பெயரிட்டுள்ளார் சுரேஷ்.இந்த ஆல்பத்தில் பாரதியின் சில பாடல்கள் அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.பத்மப்ரியா செல்லம்மாள் வேடத்தில் அம்சமாக பொருந்தியிருப்பதாக கூறுகிறார்சுரேஷ். ஆல்பத்தைப் பார்க்கையில் அவர் சொல்வது உண்மை என்று தெரிகிறது.மாபெரும் கவியின் மனைவி என்ற போதிலும், சாதாரண ஒரு இல்லத்தரசியாகத்தான்இருந்தார் செல்லம்மாள். குடும்பக் கவலைகள், குழந்தைகளை வளர்ப்பதில் உள்ளகவலைகள் என வழக்கமான இல்லத்தரசிகளின் கவலைகள் செல்லம்மாளைஎப்போதும் சூழ்ந்தே இருந்தன.இருந்தபோதிலும், தனது கணவரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு போதும்நடந்ததில்லை செல்லம்மாள். அவருக்கு நல்ல துணைவியாக இருந்தவர் செல்லம்மாள்என்கிறார் சுரேஷ்.செல்லம்மாளைப் பற்றி சொல்வதை விட அவரது உணர்வுகளை படம் பிடித்துக்காட்டியுள்ளார் சுரேஷ். செல்லம்மாளாக நடித்துள்ள பத்மப்ரியாவும், அந்தஉணர்வுகளை அழகாக வெளிக் காட்டியுள்ளார்.ஆல்பத்தில் வரும் கண்ணம்மா என் காதலி என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம்அற்புதமாக பாடியுள்ளார். அதில் பத்மப்ரியா அழகாக நடித்துள்ளார்.பாரதி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் காட்சியில் செல்லம்மாள் படும்துயரத்தை பத்மப்ரியா படு தத்ரூபமாக வெளிக்காட்டியுள்ளார். பாந்தமான அந்தநடிப்பு இந்த ஆல்பத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.இசைப் பிரியர்கள் மட்டுமல்லாது, செல்லம்மாள் குறித்து தெரிந்து கொள்ளவிரும்புபவர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது இந்த மனையாள்.

By Staff
மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாளாக நடிகை பத்மப்ரியா நடித்துள்ள புதியஇசை ஆல்பம் வெளியாகியுள்ளது.

பாரதியின் எண்ணற்ற பாடல்கள் பல திரைப்படங்களில் ஒலித்துள்ளன. ரகுவரன்நடித்த ஏழாவது மனிதன் படத்தின் அத்தனைப் பாடல்களும் பாரதியின்பாடல்கள்தான்.

பாரதியின் கதையை பல திரைப்படங்களிலும் சித்தரித்து விட்டனர். பாரதி என்றபெயரில் அவரது வாழ்க்கை வரலாறு முழுமையான படமாகவும் வந்து விட்டது.

இப்போது பாரதியின் மனைவி செல்லம்மாவை நாயகியாக்கி ஒரு இசை ஆல்பம்வந்துள்ளது. பாரதியின் கண்ணம்மாவான செல்லம்மாவாக நடித்திருப்பவர்பத்மப்ரியா. பாரதி வேடத்தில் வருபவர் அன்னா சமி.

ஆல்பத்தை தயாரித்து, இயக்கியிருப்பவர் ஏ.எல்.சுரேஷ். ஏற்கனவே சில இசைஆல்பங்களை இவர் தயாரித்துள்ளார். தான் தயாரித்திருக்கும் செல்லம்மாள் இசைஆல்பத்திற்கு மனையாள் என்று பெயரிட்டுள்ளார் சுரேஷ்.

இந்த ஆல்பத்தில் பாரதியின் சில பாடல்கள் அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.பத்மப்ரியா செல்லம்மாள் வேடத்தில் அம்சமாக பொருந்தியிருப்பதாக கூறுகிறார்சுரேஷ். ஆல்பத்தைப் பார்க்கையில் அவர் சொல்வது உண்மை என்று தெரிகிறது.

மாபெரும் கவியின் மனைவி என்ற போதிலும், சாதாரண ஒரு இல்லத்தரசியாகத்தான்இருந்தார் செல்லம்மாள். குடும்பக் கவலைகள், குழந்தைகளை வளர்ப்பதில் உள்ளகவலைகள் என வழக்கமான இல்லத்தரசிகளின் கவலைகள் செல்லம்மாளைஎப்போதும் சூழ்ந்தே இருந்தன.

இருந்தபோதிலும், தனது கணவரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு போதும்நடந்ததில்லை செல்லம்மாள். அவருக்கு நல்ல துணைவியாக இருந்தவர் செல்லம்மாள்என்கிறார் சுரேஷ்.

செல்லம்மாளைப் பற்றி சொல்வதை விட அவரது உணர்வுகளை படம் பிடித்துக்காட்டியுள்ளார் சுரேஷ். செல்லம்மாளாக நடித்துள்ள பத்மப்ரியாவும், அந்தஉணர்வுகளை அழகாக வெளிக் காட்டியுள்ளார்.

ஆல்பத்தில் வரும் கண்ணம்மா என் காதலி என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம்அற்புதமாக பாடியுள்ளார். அதில் பத்மப்ரியா அழகாக நடித்துள்ளார்.

பாரதி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் காட்சியில் செல்லம்மாள் படும்துயரத்தை பத்மப்ரியா படு தத்ரூபமாக வெளிக்காட்டியுள்ளார். பாந்தமான அந்தநடிப்பு இந்த ஆல்பத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

இசைப் பிரியர்கள் மட்டுமல்லாது, செல்லம்மாள் குறித்து தெரிந்து கொள்ளவிரும்புபவர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது இந்த மனையாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X