Padmini Review: சீரியஸ்ஸான கதையில் செம்ம காமெடி தர்பார்... மலையாள திரைப்படம் ‘பத்மினி’ விமர்சனம்!

சென்னை: மலையாளத்தில் சென்னா ஹெக்டே இயக்கிய பத்மினி திரைப்படம் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

குஞ்சாக்கா போபன், அபர்ணா பாலமுரளி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான பத்மினி படம் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

காமெடியாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முழுமையான தமிழ் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

 Padmini Review: Kunchacko Boban Starrer Padmini film Tamil Review

பத்மினி திரைப்படம் தமிழ் விமர்சனம்: கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கும் குஞ்சாக்கோ போபனுக்கு 34 வயதில் திருமணமாகிறது. ஆனாலும் கொடுமை யாரை விட்டது என்பதாக, திருமணமான அதே இரவில் மனைவி ஸ்மிருதியாக நடித்துள்ளா வின்ஸி, குஞ்சாக்கோ போபனை ஏமாற்றிவிட்டு தனது காதலுடன் சென்றுவிடுகிறார். காதலர்கள் இருவரும் பழைய ப்ரீமியர் பத்மினி காரில் சென்றதை அறிந்த ஊரார், அன்றுமுதல் குஞ்சாக்கோ போபனை 'பத்மினி' என கிண்டல் செய்கின்றனர்.

அடுத்த திருமணத்திற்காக வழக்கறிஞரான அபர்ணா பாலமுரளியை பெண் பார்க்கச் செல்கிறார் குஞ்சாக்கோ. ஆனால், அவரது வீட்டில் இருக்கும் பழைய பத்மினி காரை பார்த்துவிட்டு அபர்ணாவை திருமணம் செய்ய மறுக்கிறார் குஞ்சாக்கோ போபன். அங்கே இருவருக்கும் இடையே ஒரு மோதல் உருவாகிறது. பின்னர் தனது கல்லூரியில் புதிதாக வேலைக்கு சேர்ந்த பத்மினி (மடோனா செபாஸ்டியன்) மீது குஞ்சாக்கோ போபனுக்கு காதல் வருகிறது.

அவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் சொன்னாலும் முதல் திருமணம் சட்டபடி விவாகரத்து ஆகவேண்டும் என மடோனா செபாஸ்டியன் வீட்டில் கட்டாயப்படுத்துகிறார்கள். இதற்காக வழக்கறிஞர் அபர்ணா பாலமுரளியின் உதவியை நாடுகிறார் குஞ்சாக்கோ போபன். இன்னொரு பக்கம் அபர்ணா பாலமுரளியை ஜெயன் (சஜின் செருகாயில்) விரட்டி விரட்டி காதலிக்கிறார். இறுதியாக குஞ்சாக்கோ போபனும் அபர்ணா பாலமுரளியும் ஸ்மிருதியை கண்டுபிடித்து விவாகரத்து வாங்கினார்களா என்பது தான் மொத்த கதையும்.

திருமணம் முடிந்த முதல் இரவில் மனைவி ஓடிவிடுவது, அடுத்த திருமணம், விவாகரத்து வாங்குவது என ரொம்பவே சீரியஸ்ஸான கதையை வைத்துக்கொண்டு செம்ம காமெடி ட்ரீட் கொடுத்துள்ளார் இயக்குநர் சென்னா ஹெக்டே. ஸ்மிருதி ஓடிப் போகும் முன் பவர் கட் ஆவது, குஞ்சாக்கோ போபனையே துணைக்கு அழைத்துக்கொண்டு காதலுடன் ஓடிப்போவது என ஆரம்பமே காமெடியில் வயிறு குலுங்க வைக்கிறது பத்மினி.

 Padmini Review: Kunchacko Boban Starrer Padmini film Tamil Review

விவகாரத்துக்காக முதல் மனைவியை தேடிப் போகும் குஞ்சாக்கோ போபனை, ஸ்மிருதியின் ஊர்காரர்களும் குடும்பத்தினரும் படுத்தும் பாடு அதகளமான காமெடி ரகளை. அபர்ணா பாலமுரளியின் காதலரான சாஜினின் காமெடியும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கிறது. அதேபோல், ஸ்மிருதியை கண்டுபிடிக்கும் போதும், அதன்பின்னர் நடக்கும் கமெடி காட்சிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

படம் முழுக்க இயல்பான காமெடியால் கிறங்கடிக்கும் பத்மினி ஓடிடி ரசிகர்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், மலையாளம் மொழிகளில் காணக் கிடைக்கிறது பத்மினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X