twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Paper Rocket Review: கிருத்திகா உதயநிதியின் ஃபீல் குட் வெப்சீரிஸ்.. பேப்பர் ராக்கெட் விமர்சனம் இதோ!

    |

    நடிகர்கள்: காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கெளரி கிஷன்

    இசை: சைமன் கிங்

    இயக்கம்: கிருத்திகா உதயநிதி

    ஓடிடி: ஜீ5

    Rating:
    4.0/5

    சென்னை: மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை, விஜய் ஆண்டனியின் காளி உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி முதல் முதலாக இயக்கி உள்ள ஓடிடி படைப்பு தான் இந்த பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ்.

    சென்சார் இல்லை என்பதற்காக அத்துமீறல்களுடன் ஆபாச வசனங்கள், அடிதடி காட்சிகள், ஒரே இருட்டு, இருட்டுக்குள் இருட்டு என்றெல்லாம் இல்லாமல், சீரியலுக்கும் சினிமாவுக்கும் இடையே போடப்படும் வெளிச்சத்தை பயன்படுத்தி அப்படியொரு ஃபீல் குட் படைப்பாக வெளியாகி உள்ளது பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸ்.

    கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கெளரி கிஷன், ரேணுகா, சின்னி ஜெயந்த், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள பேப்பர் ராக்கெட் விமர்சனம் பற்றி இங்கே பார்ப்போம்..

    பொன்னியின் செல்வன் நடிகையுடன் டேட்டிங்கா? இல்லையா?...நாக சைதன்யாவின் ரியாக்ஷன் இதுதான் பொன்னியின் செல்வன் நடிகையுடன் டேட்டிங்கா? இல்லையா?...நாக சைதன்யாவின் ரியாக்ஷன் இதுதான்

    என்ன கதை

    என்ன கதை

    கன்னியாகுமரியில் அப்பா தனியாக இருக்க, அவரை பிரிந்து பிசினஸை கட்டிக் கொண்டு வாழ்கிறார் காளிதாஸ் ஜெயராம். திடீரென அப்பா மறைந்து விடும் அதிர்ச்சி செய்தி கேட்டு அறிந்ததும் சொந்த ஊருக்குச் செல்கிறார். அம்மா இறந்த பிறகு நமக்கு அரணாக இருந்த அப்பாவின் கடைசி காலத்தில் அவருடன் இல்லையே என்கிற குற்ற உணர்ச்சி அவருக்கு இரவு நேர தூக்கத்தை கெடுத்து நரக வேதனையை கொடுக்கிறது. அதில், இருந்து மீள அவர் போகும் ஒரு ட்ரிப் தான் இந்த பேப்பர் ராக்கெட். ஆனால், அவர் யாரை எல்லாம் அழைத்துச் செல்கிறார், என்பதை அவ்வளவு அழகாகவும் கலர்ஃபுல்லாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி

    ஊரில் நண்பன் காளி வெங்கட்டின் அப்பாவாக சின்னி ஜெயந்த் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பக்கவாதம் வந்து ஒரே அறையில் அந்த ஃபேன் தன் தலையில் விழுந்து இறந்து விட மாட்டோமா என ஏங்கும் அளவுக்கு அவரது முதல் காட்சியே மிரட்டுகிறது. அவரது ஆசையை நிறைவேற்ற படகில் கடலுக்கு அழைத்துச் செல்கிறார் காளிதாஸ் ஜெயராம். படகில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டது போல முதல் எபிசோடு ஷாக்கிங்காக முடிகிறது. ஆனால், இரண்டாவது எபிசோடில் விழச் செல்லும் அவரை காப்பாற்றி விடுகிறார். தனக்குத் தான் பிரச்சனை என்று பார்த்தால், உலகத்தில் தன்னை விட அதிக பிரச்சனைகள் ஒவ்வொருக்கும் இருப்பதை ஹீரோ புரிந்து கொள்கிறார். இதை விட சின்னி ஜெயந்தை காப்பாகத்தில் சேர்க்கும் இடத்தில் வரும் 5 பேரின் கதை ஒவ்வொன்றும் ஒரு விதம்.

    ஆளுக்கொரு பிரச்சனை

    ஆளுக்கொரு பிரச்சனை

    நீச்சல் வீராங்கனையான சாருவுக்கு (கெளரி கிஷன்) விபத்து ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாதபடி நாற்காலி வண்டியே வாழ்க்கை என்றாகி விடுகிறது. வள்ளியம்மாவுக்கு (ரேணுகா) மார்பக புற்றுநோய் பிரச்சனை, டைகர் (கருணாகரன்) இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்து தோல்வியடைந்த நிலையில், சரியாக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற பிரச்சனை, உன்னிக்கு (நிர்மல்) பிரைன் ட்யூமர். தான்யா ரவிச்சந்திரன் தனது பாய் ஃபிரண்டையே கொல்ல முயற்சித்த கேஸ் இருக்கு. இப்படி ஆளுக்கொரு பிரச்சனை இருக்க இவர்களை அழைத்துக் கொண்டு ட்ரிப் செல்கிறார் நாயகன் ஜீவா (காளிதாஸ் ஜெயராம்). அதில், நடக்கும் பிரச்சனைகளும், தீர்வுகளும் தான் ஒட்டுமொத்த பேப்பர் ராக்கெட் கதை.

    பிளஸ்

    பிளஸ்

    டைட்டிலில் இருந்து எண்ட் கார்டு வரை அனைத்துமே அழகாகவும் ரசனை மிகுந்தும் காணப்படுகிறது. கிருத்திகா உதயநிதி நிறைய நல்ல விஷயங்களை சொல்லி போர் அடிக்காமல் அடுத்த அடுத்த எபிசோடுகள் என ஒரே மூச்சில் 7 எபிசோடுகளையும் பார்க்க வைத்து விடுவதே பெரிய பலம் தான். சொத்து பிரச்சனைக்காக சண்டை போடும் அண்ணன் தம்பி கதாபாத்திரத்திற்கு மனைவியை அடித்ததற்காக தான்யா கொடுக்கும் அறை மட்டும் சொம்பு அடி வேறலெவல் ஹைலைட். தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர்களும் எவ்வளவு அழகு பாருங்கள் என ஒட்டுமொத்த உலகுக்கே ஓடிடி மூலம் வெளிச்சப்படுத்தியதற்கே உதயநிதி கிருத்திகாவை தனியாக பாராட்டலாம்.

    மைனஸ்

    மைனஸ்

    முன்னாள் காதலியை உன்னி பார்க்கச் செல்லும் இடம் சற்றே நாடகத்தன்மை நிறைந்ததாக காணப்படுவது மைனஸ். சில இடங்களில் சீரியல் பார்க்கும் ஃபீலிங்கை தவிர்க்க முடியவில்லை. ஹீரோவுக்கு எந்தவொரு சிக்கலும் வராமல் சுலபமாகவே அனைத்து பிரச்சனைகளையும் கடந்து சென்றிருப்பதை சற்றே பரபரப்பாக மாற்றி இருந்தால் இன்னமும் நன்றாக அமைந்திருக்கும். ஆனால், ஃபீல் குட் வெப்சீரிஸ் தோற்றம் வர வேண்டும் என்பதற்காக எல்லாத்தையும் லைட் ஹார்ட்டட்டாக எடுத்து இருக்கிறார். ஓடிடியில் சமீபத்தில் வந்த பயமுறுத்தும் வெப்சீரிஸ்களுக்கு நடுவே அழகாக குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக் கூடிய வெப்சீரிஸாக பேப்பர் ராக்கெட் - இதயங்களில் பறக்கிறது. அந்த லிப் லாக் சீன் கூட ஆபாசமாக தெரியவில்லை!

    English summary
    Paper Rocket Webseries Review in Tamil
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X