Parasakthi X Review - பராசக்தி ட்விட்டர் விமர்சனம்.. எப்படி இருக்கு படம்?.. சிவகார்த்திகேயனின் தீ பரவியதா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கிறது. ஒருபக்கம் தேசிய விருது வென்ற இயக்குநர் சுதா கொங்கரா மறுபக்கம் ரவி மோகனின் வில்லத்தனமான நடிப்பு, இன்னொரு புறம் படத்தின் கதைகளம் என ஹைப் ஏறியிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தாறுமாறாக ஏறியிருக்கிறது. தாய் நாட்டுக்காக அந்தப் படம் என்று அவரே குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அப்படம் அவரது கரியரில் முக்கியமான படம். சிவாவால் எந்த ரோல் கொடுத்தாலும் செய்ய முடியும் என்பதை அப்படம் திரையிட்டு காண்பித்தது. உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலித்து எஸ்கேவுக்கு வியாபார எல்லையும் பெரிதாகிவிட்டது என்பதை உணர்த்தியது.

Parasakthi X Review  Sivakarthikeyan Movie Got Mixed Reactions for First Half
Photo Credit:

பராசக்தி: அந்தப் படத்துக்கு பிறகு வெளியான மதராஸி ஓகே ரகம். இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் கமிட்டானார். படத்தின் கதையை கேட்டுவிட்டு எப்படியாவது இதில் இருந்துவிட வேண்டுமென முடிவு செய்து தீவிரமாக இறங்கினார். அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் இணைந்தார்கள். இதில் ரவி முதன்முறையாக வில்லன் ரோலை ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக அவருக்கும் இது முக்கியமான படமாக அமையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இன்று ரிலீஸ்: படத்துக்கு வந்த சென்சார் பிரச்னைகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டன. மொத்தம் 25 இடங்களில் சென்சார் குழுவினர் திருத்தங்கள் சொல்ல; அந்தத் திருத்தங்களை செய்து இந்தியாவில் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் முதல் காட்சி ஒன்பது மணிக்கு திரையிடப்படுகிறது.

அதேசமயம் வெளிநாடுகளில் வெளியான பராசக்தி படத்தை பலரும் பார்க்க தொடங்கிவிட்டார்கள். அங்கே அன் கட் வெர்ஷனாக வெளியாவதும் கவனிக்கத்தக்கது. எனவே படத்தின் முழு அனுபவத்தை அவர் உணர்வார்கள். படத்தின் டைட்டில் கார்டில் எஸ்கே 25 என்று வரும்போது ஜிவி பிரகாஷ் அட்டகாசமான பின்னணி இசையை கொடுத்திருக்கிறாராம்.

ட்விட்டரில் விமர்சனம்: படத்தின் முதல் பாதி பார்த்தவுடனேயே ட்விட்டரில் அவர்கள் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். படம் பார்த்த ரசிகர் ஒருவர், "பராசக்தி முதல் பாதி ஐந்து மதிப்பெண்ணுக்கு 1.5 கொடுக்கலாம். ஜெயம் ரவி, வசனம், இடைவேளை காட்சிகள் பாசிட்டிவ்வாக இருக்கின்றன. முறையான கதை இல்லாமை மற்றும் சொல்லிய விதம், திரைக்கதை, மோசமான இயக்கம் ஆகியவை நெகட்டிவ்வாக் இருக்கின்றன என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இன்னொருவர், 'படம் கதைக்குள் நேரடியாக நுழைகிறது. ஆனால் கதை மிக மெதுவாக நகர்ந்து, தேவையற்ற காதல் கதை பெரும்பகுதியை பிடித்துக்கொண்டு சலிப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளை ஓகே. இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

Parasakthi X Review  Sivakarthikeyan Movie Got Mixed Reactions for First Half
Photo Credit:

அடிபொலி இடைவேளை: இன்னொருவரோ, 'அடிபொலி இடைவேளை காட்சி. ரவியும், எஸ்கேவும் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்கள். ஸ்ரீலீலா க்யூட். அதர்வா கதையில் முக்கியமாக இருக்கிறார். இது பராசக்தி பொங்கல்' என கொண்டாடியிருக்கிறார். ஆனால் மற்றொருவரோ, முதல் பாதி ஓகே... இரண்டாம் பாதி இழுவை, சொதப்பல் என நொந்திருக்கிறார். இப்படி முதல் பாதி படம் பார்த்தவர்கள்வரை கலவையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்கள்.

இந்த ரசிகர் படத்தை பார்த்துவிட்டு, சிவகார்த்திகேயன் எமோஷனலை நன்றாக கேரி செய்திருக்கிறார். படத்தின் கேமரா சூப்பராக இருக்கிறது. நல்ல சினிமா அனுபவத்தை தருகிறது என கூறுகிறார். மேலும் இவர், பராசக்தி - எஸ்கேதான் ஷோவை லீட் செய்கிறார். ரவி மோகன் ஸ்கோர் செய்துவிட்டார். அதர்வா, ஸ்ரீலீலா நன்றாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள். பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர். எமோஷனலாக கொக்ஞ்சம் கனெக்ட் ஆகவில்லை. இடைவேளை காட்சியும், க்ளைமேக்ஸும் நன்று. வலிமையான கதை. படம் சுமார்தான்" என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X