Parking Blue Sattai Maran Review: "தமிழ்ல இவ்ளோ நல்ல படமா?” பார்க்கிங் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படம் ஈகோவை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது.

ஹரிஷ் கல்யாணுடன் எம்.எஸ் பாஸ்கர், இந்துஜா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 Parking Blue Sattai Maran Review: Harish Kalyan starrer Parking film Blue Sattai Maran Review

இந்தப் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவாக விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்க்கிங் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
பார்க்கிங் படத்தோட கதைன்னு பார்த்தா, ஒரு பில்டிங்ல இரண்டு குடித்தனம் இருக்கு. அதுல கீழ் தளத்துல நேர்மையான அரசு அதிகாரியான எம்.எஸ் பாஸ்கர் குடும்பத்தோட வசிக்கிறார். மேல் தளத்துல ஹரிஷ் கல்யாண் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியோட வந்து குடியேறுகிறார். இந்த இரண்டு குடும்பங்களுமே பேசுறாங்க பழகுறாங்க, நல்ல சந்தோஷமா தான் இருக்காங்க.

இந்த நேரத்துல தன்னோட மனைவியை ஹாஸ்பிட்டல் கூட்டிப் போறதுக்காக பைக்க வித்துட்டு புதுசா சர்ப்ரைஸ்ஸா ஒரு கார் வாங்கி அத வீட்டு வாசல்ல வந்து நிறுத்துறார் ஹரிஷ் கல்யாண். இங்க தான் பிரச்சினையே ஆரம்பிக்குது, அந்த வீட்டுல இருக்குறதே ஒரேயொரு கார் பார்க்கிங் தான். இதனால் எம்.எஸ் பாஸ்கர் தன்னோட பைக்க உள்ள கொண்டு வந்து நிப்பாட்ட கஷ்டப்படுறார். அப்போ ஒரு சின்ன உரசல் ஏற்படுது அந்த கார்ல.

இது ஒரு மன்னிப்புக் கேட்டா முடியுற விஷயம், ஆனா ஒரு பெரும் பிரச்சினையா மாறி, அது இரண்டு பேரோட ஈகோவால நீ பெரிய ஆளா இல்ல நான் பெரிய ஆளான்னு கொண்டு வந்து நிறுத்துது. அதுகப்புறம் என்னாச்சுங்குறது தான் பார்க்கிங் படத்தோட கதை என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்தோட டைட்டில், ட்ரெய்லர் பார்க்கும் போது இது பார்க்கிங்காக ரெண்டு பேர் அடிச்சிக்குற கதை தான் தெரியுது.

ஆனாலும், இத ரெண்டேகால் மணி நேரமா எப்படி பார்க்குறதுங்குற பயத்தோட தான் இந்தப் படத்தை பார்த்தேன். ஏற்கனவே அடிக்கடி சொல்லிருக்குற மாதிரி எந்த படமா இருந்தாலும் வில்லன் கேரக்டர் வலுவா இருந்தா தான் ரசிக்க முடியும்ன்னு. இந்தப் படத்துல இரண்டு ஹீரோ, இரண்டு வில்லன். அந்த இரண்டு ஹீரோவும் இரண்டு வில்லனும் யாருன்னு கேட்டா, அது ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர்ன்னு தான் சொல்லணும்.

இந்த ரெண்டு பேருமே நல்லவங்க தான், ஆனா, ஈகோன்னு வந்துட்டா ரொம்ப ரொம்ப கெட்டவைங்க. இந்த இரண்டு கெட்டவங்க பண்ற வேலை தான் பார்க்கிங் படத்த சுவாரஸ்யமா கொண்டு போச்சு. படம் முடிய கால் மணி நேரம் முன்னாடி வரையும் அவ்ளோ பரபரப்பா போச்சுது. இந்த கடைசி கால் மணி நேரம் மட்டும் தான் கொஞ்சம் பிரச்சினையா இருந்துச்சு. படம் போய்ட்டு இருந்த ப்லோ-வ விட்டு வேற ரூட்டு எடுத்துடுச்சு.

அதுமட்டுமே சரியா கனெக்ட் ஆகல, அப்படி இல்லாம இந்தப் படம் வெளியாகியிருந்தா பார்க்கிங் பிரமாதமா இருந்துருக்கும். மலையாளத்துல ரிலீஸான அய்யப்பனும் கோஷியும், ட்ரைவிங் லைசென்ஸ் படங்களும் இதேமாதிரி ஈகோ ஜானர் தான். அந்த இரண்டு படங்கள்லயும் படம் முடியுற வர ஈகோவோட டெம்போவ மெயிண்டெயின் பண்ணிருப்பாங்க. அது எல்லோரும் ஏத்துக்கொள்ளும்படியாவும் இருந்துச்சு.

ஆனா, இந்தப் படத்துல க்ளைமேக்ஸ்க்கு முன்னாடி ஒரு சின்ன குழப்பம் பண்ணிருப்பாங்க. அதையெல்லாம் கொஞ்சம் சரி பண்ணியிருந்தாங்கன்னா இந்தப் படமும் நல்லா இருந்துருக்கும். இருந்தாலும் இது தமிழ்ல சமீபத்துல வந்த உருப்படியான படம்ன்னு சொல்லலாம். இந்தப் படத்த ரசிச்சு பார்க்க முடியுறதுக்கு முக்கியமான காரணம், எம்.எஸ் பாஸ்கரோட நடிப்புதான்னு சொல்லணும். பிரமாதமாக நடித்துள்ள எம்.எஸ் பாஸ்கர், வசனங்கள் இல்லாத இடத்திலும் ஸ்கோர் செய்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

அதேபோல் ஹரிஷ் கல்யாணும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலைய சரியா செஞ்சிருக்கார். மேலும் இளவரசு உட்பட மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். சீரியல் மாதிரி வந்திருக்க வேண்டிய பார்க்கிங், த்ரில்லர் படம் போல விறுவிறுப்பாக இருக்க கேமரா ஒர்க்கும், சாம் சி.எஸ்-ன் இசையும் பெரிய பலம் என பாராட்டியுள்ளார். மொத்தத்தில் இது எல்லோருக்குமான படமும் கிடையாது, மசாலா படமும் இல்லை.

இந்தப் படத்துல டூயட் சாங், குத்துப் பாட்டு எதுவும் கிடையாது. அதேமாதிரி ஆக்‌ஷன் ஜானர் மூவியும் இல்ல, ஆனா ஒரு ஆக்‌ஷன் அல்லது த்ரில்லர் படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இருக்குது. க்ளைமேக்ஸ்ல மட்டும் மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஒரு புதுமுக இயக்குநர் இப்படியொரு படம் எடுத்துள்ளது பாராட்டுக்குரியது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X