Parking Review: பார்க்கிங் படம் எப்படி இருக்கு?.. பக்காவா? மொக்கையா?.. வெளியான விமர்சனம்!
சென்னை: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று வெளியானது. அதை பார்த்த பல விமர்சகர்களும் படத்துக்கு தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது.

புதிய படங்கள் நன்றாக இருந்தாலும், பெரியளவில் ரீச் கிடைக்காமல் போக அந்த படங்களை பார்க்க தியேட்டர் பக்கம் ரசிகர்கள் செல்வதே இல்லை. இந்நிலையில், அதற்காக சில நாட்களுக்கு முன்னதாகவே பிரஸ் ஷோ வைத்து தங்கள் படைப்பை நம்பி வாங்க என அழைப்பு விடுத்துள்ளனர்.
பார்க்கிங் பிரச்சனை: பழைய கதைகளை பட்டி டிக்கெரிங் பார்த்து இயக்குநர்கள் அரைத்த மாவையே அரைத்து வரும் நிலையில், பார்க்கிங் பிரச்சனையை ஒரு படமாக உருவாக்க முடியும் என்றும் அதில் எமோஷனல், சமூக கருத்து, கேட் அண்ட் மவுஸ் கேம் என படம் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதாகவும், இந்துஜா ரவிச்சந்திரன் இந்த படத்துக்கு நல்ல தேர்வு என விமர்சனங்கள் குவிந்துள்ளன.
செம படம்: பார்க்கிங் படம் இந்துஜாவின் கதாபாத்திரம் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல, அதை அழகாக உள்வாங்கி நடித்து ஸ்கோர் செய்கிறார். ஹரிஷ் கல்யாண் தனது இன்னொரு பக்காவான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார் என பிரசாந்த் ரங்கசாமி பாராட்டி உள்ளார்.
எம்.எஸ். பாஸ்கர் தாறுமாறு: ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் இருவரும் பார்க்கிங் படத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இயக்குநர் பார்க்கிங்கில் இரண்டு டெனன்ட்டுக்கு இடையே நடக்கும் பிரச்சனையில் படத்தை தொடங்கி எப்படி எல்லாம் அதை கொண்டு செல்ல முடியும் என்பதை கடைசி வரை சுவராஸ்யமான படமாக கொடுத்துள்ளார் என பல விமர்சகர்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர். வரும் டிசம்பர் 1ம் தேதி அனிமல், அன்னபூரணி படங்களுடன் பார்க்கிங் படமும் மோதுகிறது.


Click it and Unblock the Notifications











