Teenz Review: டீன்ஸ் விமர்சனம்.. பார்த்திபன் காட்டியது அமானுஷ்யமா?.. அறிவியலா?

Rating:
3.0/5
Star Cast: பார்த்திபன், யோகி பாபு
Director: பார்த்திபன்

சென்னை: இந்தியன் 2 படத்துக்கு போட்டியாக பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்த டீன்ஸ் படமும் நேற்று வெளியானது. இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில், பார்த்திபன் படத்தை ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்து விட்டனர். குறைந்த பட்ஜெட்டில் புதிய முயற்சியை பார்த்திபன் எடுத்து பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.

அபூர்வ சகோதரர்கள் படத்துடன் புதிய பாதை படத்தை போட்டிக்கு விட்டதை போல 30 வருடங்கள் கழித்து இந்தியன் 2 படத்துடன் பார்த்திபன் மோதியுள்ளார். இந்தியன் 2 படம் பெரிய படம் என்றும் அந்த படத்தை பார்த்து விட்டு என்னுடைய படத்தை வந்து பாருங்க புடிக்கும் என்றும் பார்த்திபன் சொன்ன நிலையில், இந்தியன் 2வை தொடர்ந்து பார்த்திபன் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் செய்யப்படும் புதிய முயற்சி கூட பெரிய பட்ஜெட் படங்களில் செய்யாமல் விடுவது ஏன் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

Parthiban s Teenz Movie Review in Tamil

13 விடலைப் பருவ சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் ஒரு ஊருக்குச் செல்ல அங்கே நடக்கும் அமானுஷ்யத்தால் அடுத்தடுத்து காணாமல் போகின்றனர். இது பேய்க் கதையா? அல்லது அறிவியல் கதையா? என்கிற ட்விஸ்ட்டுடன் உருவாகியுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

டீன்ஸ் கதை: ஜென் தலைமுறையை சேர்ந்த 13 வயதை நிரம்பிய சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் வெளிநாட்டில் இந்த வயது குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உரிமைகளை தங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் தாங்கள் அனைவரும் பெரியவர்கள் என்பதை நிரூபிக்க துடிக்கின்றனர்.

அதற்காக பள்ளியை ஒரு நாள் கட் செய்து விட்டு, ஒரு பெண்ணின் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக கேட்கும் கதையை நம்பி, அங்கே சென்று அந்த பேய் என்ன தான் செய்கிறது என பார்த்து விடுவோம் என கிளம்புகின்றனர். பேயை தேடிச் செல்லும் சிறுவர்கள் ஒருவர் பின் ஒருவராக மாயமாக மறைய அவர்களை காப்பாற்ற வரும் பார்த்திபன் இதற்கு விடை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த டீன்ஸ் கதை.

பார்த்திபனின் புதிய பாதை: எப்போதுமே பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளை சினிமாவில் எடுத்து வருகிறார். ஆனால், அது கமர்ஷியல் வெற்றியை பெறவில்லை என்றாலும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகின்றன. ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில் ஒரே ஆளாக படம் முழுவதும் நடித்து மிரட்டிய பார்த்திபன் இரவின் நிழல் படத்தில் சிங்கிள் ஷாட் படமாக எடுத்துக் காட்டி அசத்தியிருந்தார்.

பட்ஜெட் பிரச்சனை காரணமாக அவர் எடுக்க நினைக்கும் படங்கள் முழுமையாக ரசிகர்களை கவராமல் போவது தான் பெரிய வெற்றியை அவர் ருசிக்க முடியாமல் போக காரணமாகவும் உள்ளது. அதே பிரச்சனை இந்த படத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

ஆவியா? அறிவியலா?: முதல் பாதி முழுவதும் அமானுஷ்யமாக செல்லும் படம் 2ம் பாதியில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களத்திற்கு நகர்வதில் தான் பார்த்திபனின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. அதை 2ம் பாதியில் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால், முதல் பாதியில் அந்த சஸ்பென்ஸை மெயின்டெயின் பண்ண வேண்டும் என அவர் நினைத்து படத்தை ஸ்லோவாக கொண்டு சென்றதும், குழப்பியதும் தான் படத்திற்கு சிக்கலாக அமைந்தது.

பிளஸ்: பார்த்திபனின் கதை தேர்வு மற்றும் புதிய கோணத்தில் ஒரு விஷயத்தை அணுகுவது, இந்த படம் கமர்ஷியில் ஹிட் அடிக்கிறதோ இல்லையோ புதுசா முயற்சிப்போம். அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம் என நினைப்பது என அனைத்துமே இந்த படத்துக்கு பிளஸ் தான். டி. இமான் இசை மற்றும் கவுமிக் ஆரி ஒளிப்பதிவு பல இடங்களில் கை கொடுத்திருக்கிறது. சிறுவர்களாக நடித்த அந்த 13 பேரின் நடிப்பு தான் இந்த படத்திற்கு உண்மையான பலம். அவர்கள் பேசும் வசனங்கள், யதார்த்தமான நடிப்பு என அனைத்துமே படத்தை உட்கார்ந்து பார்க்க வைக்கிறது.

மைனஸ்: யோகி பாபுவிடம் ஒரு 2 நாள் கால்ஷீட் வாங்கி பல படங்கள் எடுத்து வருவதை போல இந்த படத்திலும் அவர் வந்து செல்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரம் பெரிதாக படத்துக்கு பயன் தரவில்லை. புரொடக்‌ஷன் வேல்யூ குறைவாக இருப்பது மற்றும் முதல் பாதியில் உள்ள சிக்கல்கள் படத்தின் மைனஸாக இருந்தாலும், தாராளம் இந்த படத்தை தியேட்டரில் ஒரு முறை பார்த்தே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு படத்தில் ஒரு சூப்பரான மேட்டர் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X