Pathu Thala Twitter Review: பட்டாசா இருக்கு சிம்புவின் நடிப்பு.. "பத்து தல" ட்விட்டர் விமர்சனம்
சென்னை: மாநாடு படத்திற்கு பிறகு வெர்ஷன் 2.0வாக மாறி உள்ள நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து மிரட்டலான படங்கள் வெளியாகி வருகின்றன.
கவுதம் மேனன் இயக்கத்தில் மும்பை கேங்ஸ்டர் முத்துவாக வெந்து தணிந்தது காடு படத்தில் மிரட்டிய சிம்பு பத்து தல படத்தில் ஏஜி ராவணனாக கர்ஜித்துள்ளார்.
முதல் நாளுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டன என தயாரிப்பு நிறுவனம் சிம்புவின் பாக்ஸ் ஆபிஸ் எழுச்சியை பார்த்து ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், பத்து தல படத்தை பார்த்த ட்விட்டர் வாசிகள் அந்த படத்துக்கு என்ன ரேட்டிங் கொடுத்து வருகின்றனர் என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..
தல அவதாரம்
"இன்று முதல் #தல அவதாரம் எடுக்கும் சிம்புவின் #பத்துதல அதிரடி ஆரம்பம்! இன்று முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் #பத்துதல" என இந்த ரசிகர் ட்வீட் போட்டு தல டைட்டிலை சிம்புவுக்கு சூட்டி அஜித் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளார். பத்து தல இசை வெளியீட்டு விழாவில் சாண்டி மாஸ்டர் தல என சிம்புவை அழைத்தது பெரும் பஞ்சாயத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இடைவேளையில் ஏஜிஆர் என்ட்ரி
இடைவேளையில் ஹெலிகாப்டரில் கருப்பு சட்டை, கருப்பு வேட்டியுடன் ஏஜிஆராக சிம்பு வெறித்தனமாக கொடுக்கும் என்ட்ரி வேறலெவல் என்றும் பத்து தல கன்ஃபார்ம் பிளாக்பஸ்டர் படம் என சிம்பு ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஃபயர் விட்டு வருகின்றனர்.
டோட்டல் டிஸ்அப்பாயின்மென்ட்
சிம்பு படம் என படத்தை ப்ரோமோட் செய்து விட்டு சிம்புவே இண்டர்வெலுக்கு பிறகு தான் என்ட்ரி கொடுக்கிறார் என்பதை பார்த்ததுமே சிம்பு ரசிகர்களே பத்து தல படத்தை பார்த்து கடுப்பாகி விட்டார்கள். கவுதம் கார்த்திக் நடிப்பு சிறப்பு, பிரியா பவானி சங்கர் ரோல் டம்மி, வசனங்கள் சூப்பர் ஆனால் மேக்கிங் சொதப்பல் என இந்த நெட்டிசன் பத்து தல படத்தை கிழித்துத் தொங்கவிட்டு விட்டார்.
மொரட்டுத்தனமா இருக்கு
"யோவ் கிருஷ்ணா.. இவ்ளோ நாள் எங்கயா இருந்த.. பேசாம தலைவன் கூட அடுத்த படம் நீயே டைரக்ட் பண்ணுயா.. மொரட்டு தனமா இருக்கு" Blockbuster vibeyyy என ரசிகர்கள் இரண்டாம் பாதியில் சிம்பு வந்தாலும் படம் செம சீனா இருக்கு என கொண்டாடி வருகின்றனர்.
மரண மாஸ் இண்டர்வெல்
அண்டர் கிரவுண்ட் அதிகாரியாக கவுதம் கார்த்திக் யாரு அந்த ஏஜிஆர் என்பதை கண்டுபிடிக்க பல நாட்களாக போராடி வரும் நிலையில், இண்டர்வெல் காட்சியில் மரண மாஸாக சிம்பு வரும் அந்த ஒரு காட்சிக்காகவே படத்தை தாராளமாக பார்க்கலாம் என ரசிகர்கள் பத்து தல படம் பட்டாசா இருக்கு என கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











