Patriot X Review: பேட்ரியாட் விமர்சனம்.. மம்மூட்டி, மோகன்லால், நயன்தாராவின் பேட்ரியாட் படம் எப்படி?

சென்னை: பகத் ஃபாசிலை வைத்து டேக் ஆஃப், சியூ சூன் மற்றும் மாலிக் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்மூட்டி, மோகன்லால், பகத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து இன்று வெளியாகி உள்ள படம் தான் பேட்ரியாட் (Patriot).

மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து திரையில் ஒரே நேரத்தில் தென்படும் காட்சியை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி படத்தை பார்த்து வருகின்றனர். முதல் காட்சி நிறைவடைந்த நிலையில், படத்துக்கான விமர்சனங்கள் எக்ஸ் பக்கத்தில் குவிந்து வருகின்றன.

Patriot X Review in Tamil  Mammootty and Mohanlal Movie Makes Fans a Feast in Theaters

மம்மூட்டி தான் படத்தின் ரியல் ஹீரோ என்றும் மோகன்லால் கதாபாத்திரம் தரமான கேமியோ போலத்தான் இருக்கு என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மம்மூட்டி மாஸ் காட்டுறாரு: மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ரியாட் படத்தில் மம்மூட்டியின் நடிப்பு வேற லெவல் என ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். முதல் பாதி முழுவதும் படம் நல்ல கதையை செட் செய்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. மோகன்லால் வரும் சீன் எல்லாம் தியேட்டரே பிளாஸ்ட் ஆகிறது என ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

74 வயசுல இப்படியொரு சண்டைக் காட்சி: மம்மூட்டி தனது 74 வயதிலும் இப்படியொரு சண்டைக் காட்சியில் நடித்திருப்பது மிரட்டுகிறது. முதல் பாதி நல்லாவே இருக்கு. ஆனால், சில இடங்களில் தொய்வு அதிகமாகவே தென்படுவது மைனஸ் ஆக உள்ளது. இதுவரை மோகன்லாலை கண்ணுலயே காட்டவில்லை என இந்த ரசிகர் கலவையான விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

லாலேட்டனுக்கு வெயிட்டிங்: முதல் பாதி பட்டாசாக வெடிக்கிறது. மம்மூக்காவின் நடிப்பு தாறுமாறு. இரண்டாம் பாதியில் லாலேட்டன் என்ட்ரிக்காக காத்திருக்கிறோம் என இன்னொரு ரசிகரும் படத்தின் முதல் பாதி ப்யூர் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் என கொண்டாடியுள்ளார்.

ஃபர்ஸ்ட் ஹாஃப் ஃபயரு: மம்மூட்டி தனது மிரட்டலான நடிப்பால் முதல் பாதியை முற்றிலுமா ஆட்சி செய்துள்ளார். முதல் பாதியில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அந்த களத்தையும் அழகாக இயக்குநர் கட்டமைத்து பேங்கரான இடைவேளை காட்சியை கொடுத்துள்ளார். இரண்டாம் பாதியில் லாலேட்டனும் வரவுள்ள நிலையில், பேட்ரியாட் பந்தயம் அடிக்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X