For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Pattampoochi Review: அந்த பட்டாம்பூச்சி செத்தே போச்சு.. ஓடிப்புடிச்சு விளையாடும் சுந்தர்.சி, ஜெய்!

  |

  Rating:
  2.5/5

  நடிகர்கள்: சுந்தர்.சி, ஜெய், ஹனி ரோஸ்

  இசை: நவ்நீத் சுந்தர்

  இயக்கம்: பத்ரி

  சென்னை: சுழல் வெப்சீரிஸில் சித்தப்பாவே பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும், பட்டாம்பூச்சி படத்தில் சொந்த அப்பாவே பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும் தமிழ் சினிமாவில் வர வர இயக்குநர்கள் குடும்ப உறவுகளையே சந்தேகிக்கும் அளவுக்கு ஏன் தான் படங்களை இயக்குகிறார்கள் என்கிற கேள்விகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

  குஷ்பு சுந்தர்.சியின் ஆவ்னி டெலி மீடியா தயாரிப்பில் சுந்தர். சியின் வீராப்பு, ஐந்தாம் படை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பத்ரி நாராயணன் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது பட்டாம்பூச்சி.

  சுந்தர். சி போலீஸ் அதிகாரியாகவும், சைக்கோ கொலைகாரனாக ஜெய்யும் பத்திரிகையாளராக ஹனி ரோஸும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த பட்டாம்பூச்சி எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..

  பப்ளிசிட்டி பிடிக்காது..ஆனா வருடம் 365 நாளும் போட்டோ போடுவாராம்..அஜித்தை சீண்டும் ப்ளூசட்டை மாறன்பப்ளிசிட்டி பிடிக்காது..ஆனா வருடம் 365 நாளும் போட்டோ போடுவாராம்..அஜித்தை சீண்டும் ப்ளூசட்டை மாறன்

  என்ன கதை

  1989ல் நடக்கும் பீரியட் பிலிம் கதையாக இந்த பட்டாம்பூச்சி படம் அமைந்திருக்கிறது. தூக்குத் தண்டனை கைதியான சுதாகர் (ஜெய்) அதிலிருந்து தப்பிக்க தான் தான் பட்டாம்பூச்சி எனும் சைக்கோ கொலைகாரன் என்கிற ட்விஸ்ட்டை கொடுக்க அதுதொடர்பான விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக குமரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுந்தர்.சி. தூக்குத் தண்டனையில் இருந்து ஜெய் தப்பித்தாரா? உண்மையில் அந்த பட்டாம்பூச்சி யார்? குற்றவாளியை நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தினாரா சுந்தர். சி என்பது தான் படத்தின் கதை.

  வில்லன் வேஷம் செட்டாகல

  வில்லன் வேஷம் செட்டாகல

  ஜெய் ஹீரோவாக நடித்த படங்களே சரியாக ஓடாத நிலையில், நாமும் வில்லனாக மாறி கலக்கி விடலாம் என முடிவெடுத்தது சரி என்றாலும், தனது நடிப்பை கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ள மாட்டேன் என அடம்பிடிப்பது படத்திற்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்துகிறது. டூஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டவராஜ ஜெய் நடித்துள்ளார். அதற்காக அவர் செய்யும் மேனரிசம், இடையே இடையே வரும் விஜய் மேனரிஸம் என ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்கிறது.

  ஓடிப்புடிச்சி

  ஓடிப்புடிச்சி

  80களில் நடக்கும் கதை என்பதற்காக, கலை கலங்காரத்திடம் இருந்து பழைய டெலிபோன், பழைய அம்பாசிடர் கார் வாங்கி விட்டால் அது பீரியட் ஃபிலிம் என எப்படித்தான் நினைத்தார்களோ தெரியவில்லை. அவுட் டோர் லோகேஷன்களில் இன்றைய நகரம் பல் இளிக்கிறது. முதல் பாதி க்ரிப்பிங்காக சென்ற நிலையில், இரண்டாம் பாதியில் சுந்தர்.சிக்கும் ஜெய்க்கும் இடையே கேட் அண்ட் மவுஸ் கேம் வைக்கிறேன் என இயக்குநர் பத்ரி செஞ்ச விஷயத்திற்கு பட்டாம்பூச்சி என்பதற்கு பதிலாக ஓடிப்புடிச்சி என்று வைத்திருக்கலாம்.

  பிளஸ் - மைனஸ்

  பிளஸ் - மைனஸ்

  படத்தில் இமான் அண்ணாச்சி ரோல் சிறப்பாக இருக்கிறது. அவருக்கு மகளாக சில காட்சிகளே வந்து செல்லும் பேபி மானஸ்வி நன்றாக நடித்துள்ளார். ஹீரோயின் ஹனி ரோஸ் வெறுமனே ஹீரோயினாக இல்லாமல், பத்திரிகையாளராக வந்து பட்டாம்பூச்சியை பற்றி கட்டுரைகள் வெளியிட்டு படத்தின் ஆரம்ப ட்விஸ்ட்டுக்கே பிள்ளையார் சுழி போடுவது முதல் சுந்தர்.சி உடன் ரொமான்ஸ் காட்சிகள் இல்லாமல் காதலிக்கும் காட்சிகள் வரை சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் முக்கியத் தூணான சுந்தர்.சி மற்றும் ஜெய் ஆகிய இருவரின் நடிப்பும் பெரியளவில் கை கொடுக்காதது தான் பெரிய மைனஸ் ஆக மாறிவிட்டது.

  குடும்பத்துக்குள் கும்மியடிக்கிறாங்க

  குடும்பத்துக்குள் கும்மியடிக்கிறாங்க

  ஏற்கனவே கூட்டுக் குடும்பத்தை காலி பண்ணியாச்சி, இப்போ சித்தப்பா, அப்பான்னு நெருங்கிய சொந்தங்களும் பாலியல் வக்கிரம் பிடித்த வில்லன்களாக சித்தரித்து சமூகத்தின் மனதையே கெடுக்கும் விதமாக ஏன் வரிசையாக படங்களும் வெப்சீரிஸ்களும் வருகின்றன என்கிற கேள்வியும் எழுகிறது. சுந்தர்.சி படம் என்றாலே கலர்ஃபுல்லாக ஜாலியா இருக்கும் பான்னு பார்த்தா இவ்ளோ கொடுர கொலைகளையும் ஆபாசங்களையும் காட்ட வேண்டுமா? என்கிற கேள்வியை ரசிகர்கள் பலரும் முன் வைக்கின்றனர். மொத்தத்தில் அந்த ஜாலியான பட்டாம்பூச்சி செத்தே போச்சி!

  English summary
  Pattampoochi movie Review in Tamil (பட்டாம்பூச்சி விமர்சனம்): Sundar C and Jai's cat and mouse game with a raw pshyco thriller subject Pattampoochi started well but not finished good.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X