For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடிமுறை என்ற தற்காப்பு கலையின் வழிமுறையை , விதிமுறையுடன் வெடிக்க வைத்த படமே பட்டாசு

  |
  Pattas Public Review | | Pattasu Review | Dhanush | Sneha

  Rating:
  3.0/5
  Star Cast: தனுஷ், மெஹ்ரீன் பிர்சடா, சினேகா பிரசன்னா, நவீன் சந்திரா, நாசர்
  Director: ஆர் எஸ் துரை குமார்

  அப்பாவை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கும் மகனின் கதை என்ற அர்த்த பழசான ஒன் லைன் வைத்து கொண்டு தற்காப்பு கலை , தமிழனின் பெருமை, பாரம்பரியம் என்று கமெற்சியல் ட்ரீட்மெண்ட் கொடுத்து எடுக்கப்பட்ட கதை தான் பட்டாசு.

  பொங்கலான இன்று பட்டாஸ் படம் வெளியாகி இருக்கிறது .பட்டாஸ் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருக்கும் படமாகும் .தனுசின் கெட்டப்கள் மற்றும் பாடல்களின் வெற்றியே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் .

  pattasu movie speaks about martial arts

  முதல் பாதியில் திருடனாகவும் இரண்டாம் பாதியில் தற்காப்பு கலையின் அசுரனாகவும் மிரட்டுகிறார் தனுஷ். கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்து உள்ளார் . அதுமட்டும்யின்றி தாடி மீசையுடன் அப்பாவாகவும் , ஸ்னேஹாவுடன் செய்யும் காதல் காட்சிகள், குத்து சண்டை போடும் போது காட்டும் வீர்யம் அனைத்தும் அற்புதம் . வேட்டி சட்டை , தாடி மீசை அப்பா தனுஷ் , ஜீன்ஸ் பேண்ட் போட்டு மீசைதாடி இல்லாமல் இருந்தால் அது மகன் தனுஷ் . அவ்வளவு தான் வித்யாசம்.

  தனுஷ் கொடி படத்திற்கு பிறகு இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் அப்பா தனுஷ்க்கு ஜோடியாக புன்னகை அரசி சிநேகா நடித்துள்ளார். சுமார் 13 வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து உள்ளனர். இதற்கு முன்பு இருவரும் புதுப்பேட்டை படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் மட்டுமே அதிகம் தோன்றி வந்த சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல கதாப்பாத்திரத்தை நன்கு கையாண்டு உள்ளார். தனுஷுக்கு மனைவியாகவும் , அம்மாவாகவும் , வில்லன்களுடன் தற்காப்பு கலை பயன் படுத்து சண்டை போடுவதிலும் நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். ஸ்னேஹாவின் சிரிப்புக்கும் நடிப்புக்கும் ஒரு சபாஷ் போடலாம் .

  pattasu movie speaks about martial arts

  இப்படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இவர் இதற்கு முன்பு தனுஷ்யை வைத்து கொடி படத்தை இயக்கியவர்.அதிலும் இரண்டு கதாபாத்திரங்கள் இதிலும் இரண்டு கதாபாத்திரங்கள். படத்தில் மகனாக வரும் தனுஷ் பல சேட்டைகள் செய்யும் ஒரு இளைஞனாக வருகிறார்.

  படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகவும் புதுமையாக இருந்தது. இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் ஆகிய இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது." சில் பிரோ" பாடல் பப்ஜி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் எழுந்து நடனம் ஆட வைத்துள்ளது. அடிமுறை என்ற தற்காப்பு கலையின் சண்டை காட்சிகள் வரும் பொழுது பின்னால் ஒலிக்கும் இசை அற்புதம்.

  pattasu movie speaks about martial arts


  தனுஷ் ஸ்நேகா ஜோடிக்கு இனையாக தனுஷ் மற்றும் மெக்ரீன் பீர்ஸ்டா ஜோடியும் நல்ல முறையில் வடிவமைக்கபட்டு இருந்தது .ஆனால் அந்த கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் காதல் காட்சிகள் எல்லாம் எந்த விதத்திலும் பெரிய இம்பாக்ட் ஏற்படுத்தவில்லை. முதல் பாதி காட்சிகள் அனைத்தும் பல இடங்களில் சலிப்பு தட்டினாலும் ஏதோ சில பல சில்மிஷங்கல் செய்து கதையை ஓட்டுகிறார்கள்.

  இரண்டாம் பாதியில் தான் இயக்குனர் சொல்ல வந்த விஷயத்தை மிக ஆழமாக சொல்ல ஆரம்பிக்கிறார். ஆனால் திரைக்கதையில் ஸ்வாரசியம் இல்லாததால் அலுப்பு தட்டுகிறது. அடிமுறை என்ற தற்காப்பு கலையின் வழிமுறை மற்றும் அதன் பாரம்பரியம் பற்றி நிறைய பாடம் எடுக்கிறார்கள்.
  ஜல்லிக்கட்டுக்கு எப்படி இளைஞர்கள் போராடினார்கலோ அது போல் இந்த பாரம்பரிய கலைக்கு போராட வேண்டும் , இழந்து விட கூடாது என்பதை தான் ஒவ்வொரு வசனத்திலும் காட்சியிலும் சொல்லி இருக்கிறார்.

  pattasu movie speaks about martial arts

  ஒளிப்பதிவாளரின் பணி மிகவும் சரியாக இருந்தது. படம் முழுவதும் இவர்
  காட்சிப்படுத்திய விதம் மிகவும் பிரமாதமாக இருந்தது . படத்தின் கடைசி சண்டை காட்சி மிகவும் நீளமாக இருந்தது கொஞ்ச வருத்தம் தான். அடுத்து அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை மிக மிக எழிதில் கண்டு பிடிக்க முடிகிறது . எப்படியும் ஹீரோ தான் வெல்வார் என்ற தமிழ் சினிமாவின் பழைய டெக்நிக் எல்லாம் மிகவும் போர் அடிக்கிறது.

  முனீஸ்காந்த் , மற்றும் விஜய் டிவி சதிஷ் அங்காங்கே சிரிப்பு வர செய்கிறார்கள். படத்தின் வில்லன் புது முயற்ச்சி தான் , சண்டை காட்சிகளில் பட்டய கிளப்பிகிறார். தற்காப்பு கலை அதன் வரலாறு சொல்லும் போது சீன நாட்டு காரர் நீண்ட வெள்ளை தாடியுடன் வருவது கொஞ்சம் காமெடியாக தான் இருந்தது.

  pattasu movie speaks about martial arts


  அடிமுறை என்ற தற்காப்பு கலை பற்றி என்னதான் சினிமாதனத்துடன் சொல்லி இருந்தாலும் சொன்ன விதம் சுவாரசியமாக இல்லை. தனுஷ் போன்ற ஹீரோக்கள் சொன்னதினால் இந்த கலை பற்றி நிறைய பேர் கூகுள் செய்து பார்ப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஒரு நல்ல விஷயத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று இயக்குனர் எடுத்து கொண்ட முயற்ச்சியை நாம் பாராட்டலாம் . அதே சமயம்
  அடிமுறை என்ற தற்காப்பு கலை உலக அளவில் கிக்பாக்ஸிங் , குங்ஃபு போன்ற பிரபலமான சண்டை செய்யும் விளையாட்டுகளுடன் மோதி ஜெயிக்க வேண்டும்.

  தியேட்டர்களில் தீபாவளியான பொங்கல் பண்டிகை! பட்டாஸ் வெடித்து ரசிகர்கள் வெறித்தனமான FDFS கொண்டாட்டம்!தியேட்டர்களில் தீபாவளியான பொங்கல் பண்டிகை! பட்டாஸ் வெடித்து ரசிகர்கள் வெறித்தனமான FDFS கொண்டாட்டம்!

  பட்டாசு பரட்சியில் ஆக வேண்டும் பாஸ் , தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டும் காசு . தனுஷின் ரசிகர்கள் கண்டிப்பாக கொடுக்க மாட்டார்கள் லாஸ் .

  English summary
  danush acted movie pattasu got released on this auspicious day pongal. The movie tells about the tradition and true facts of olden martial arts of tamilnadu. danush did a double role and he has proved once again with his versatile acting. after a long gap sneha has also joined in this script and the movie is a huge treat for the fans for the pongal holidays.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X